பதிப்புகளில்

அமெரிக்க மாஸ்டர்ஸ் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்ற 100 வயது இந்திய பாட்டி!

YS TEAM TAMIL
3rd Sep 2016
Add to
Shares
3
Comments
Share This
Add to
Shares
3
Comments
Share

100 வயதில் ஒருவர் முதலில் நடக்க முடியுமா?? நடக்க என்ன ஓடவே முடியும் என அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார் சண்டிகரை சேர்ந்த இந்த பாட்டி. கனடா'வில் அண்மையில் நடந்த அமெரிக்கா மாஸ்டர்ஸ் கேம்ஸ் நடத்திய முதியோர்கள் ஓட்டப்பந்தயத்தில் மன் கவுர், தங்க பதக்கம் வென்று எல்லாருடைய மனதையும் கவர்ந்துள்ளார். 

பட உதவி: NewsX

பட உதவி: NewsX


மன், 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தை ஒன்றரை நிமிடத்தில் ஓடி முடித்தார். 70 முதல் 80 வயது முதியோர்கள் இந்த போட்டியை கண்டுகளிக்க, முதியோர் ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொண்ட ஒரே பெண்மணி மன் கவுர் என்பது குறிப்பிடத்தக்கது. 

"அவர் வெற்றிப்பெற்ற செய்தியை இந்தியா திரும்பியதும் எல்லாரிடமும் உற்சாகத்துடன் பகிர்ந்து கொள்வார். வெற்றி அவரை சந்தோஷப்படுத்தும்," என்றார் மன் கவுரின் மகன் 78 வயதான குருதேவ் சிங். 

ஓட்டப்பந்தய வீராங்கனையான மன், அவரது மகனின் ஆலோசனையின் படி 93 ஆவது வயதில் மீண்டும் ஓடத் துவங்கினார். அதிலிருந்து கிட்டத்தட்ட 20 பதக்கங்களை உலக அளவில் வென்று சாதனை படைத்துள்ளார். "உங்களுக்கு மூட்டு பிரச்சனை, இதய பிரச்சனை என்று எதுவும் இல்லை, அதனால் நீங்கள் மீண்டும் ஓட வேண்டும் என்று சொன்னேன்," என்றார் குருதேவ். 

உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கும், நீண்ட வாழ்நாளின் ரகசியம் என்ன என்று மன்னிடம் கேட்டதற்கு, "நல்ல உணவு பழக்கம் மற்றும் நிறைய உடற்பயிற்சி", என்று சிபிசி பேட்டியில் தெரிவித்தார். 

கட்டுரை: Think Change India

Add to
Shares
3
Comments
Share This
Add to
Shares
3
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக