பதிப்புகளில்

ஆண்டுக்கு 10 லட்சம் புதிய வாடிக்கையாளர்களை பெறும் மின்வணிக நிறுவனம் Story@home

posted on 30th October 2018
Add to
Shares
154
Comments
Share This
Add to
Shares
154
Comments
Share

அமேசான், ஃப்ளிப்கார்ட், ஸ்னாப்டீல் போன்ற மின்வணிக தளங்களில் எலக்ட்ரானிக்ஸ், பேஷன் இந்தப் பிரிவுகளைத் தொடர்ந்து வீட்டு அலங்காரப் பொருட்களின் பிரிவு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இத்தகைய ஆன்லைன் ஷாப்பிங் அதிகரிப்பானது பல்வேறு வணிகங்களில் ஈடுபட்டுள்ள் நேரடியாக விற்பனை செய்யும் ஸ்டோர்களின் திறனை குறைத்து மதிப்பிடச்செய்கிறது. ஆன்லைன் சில்லறை வணிகத்தின் வலிமையை உணர்ந்து நேரடி சில்லறை வர்த்தக ஸ்டோரில் இருந்து ஆன்லைன் செயல்பாடுகளுக்கு மாறிய நிறுவனங்களில் Story@Home ஒன்றாகும்.

2012-ம் ஆண்டு அன்கித் ரங்தா குஜராத்தின் வதோதராவில் Story@Home நிறுவினார். இ-காமர்ஸ் வளர்ச்சியடைந்த நிலையில் வணிகம் வளர்ச்சியடைந்தது. 34 வயது ரங்தா விற்பனைப் பொருட்களின் தொகுப்பை விரிவுபடுத்தும் நோக்கத்துடன் தனது அப்பா சோஹன் ரங்தாவை வணிகத்தில் ஈடுபடுத்தினார். 61 வயதான சோஹன் பல்வேறு வணிகங்களில் நாற்பதாண்டு கால அனுபவம் பெற்றவர். அன்கித் வணிகத்தில் சந்திக்கும் வெவ்வேறு சவால்களுக்கு அவரது அப்பா தனது அனுபவத்தையும் அறிவையும் கொண்டு உதவி வருகிறார்.


image


”உயர்தர வீட்டு அலங்காரப் பொருட்கள் இந்தியா முழுவதும் சென்றடையவேண்டும் என்கிற இலக்குடன் நாங்கள் அறிமுகப்படுத்தினோம். ஆரம்பத்தில் நேரடி ஸ்டோர்கள் இருந்தது. எங்களது பொருட்களை விற்பனை செய்ய வெவ்வேறு சில்லறை வர்த்தக பார்ட்னர்களுடன் இணைந்து செயல்பட்டோம். அனைத்து வணிகங்களையும் போலவே இருப்பு, சிறந்த விநியோக சங்கிலி போன்ற பல்வேறு சவால்களை சந்தித்தோம். இவற்றிற்கு திறம்பட தீர்வுகாணவும் முயற்சித்தோம்,” என்றார் ரங்தா.

”மின்வணிகம் சிறப்பிக்கத் துவங்கியதும் ஃப்ளிப்கார்ட், அமேசான், ஸ்னாப்டீல் போன்றவற்றுடன் இணைந்த முதல் சில ப்ராண்டுகளில் நாங்களும் ஒருவர். நாங்கள் எங்களை மேம்படுத்திக்கொண்டு நேரடி விற்பனை ஸ்டோரில் இருந்து ஆன்லைன் விற்பனை தளமாக மாறினோம்,” என்றார்.

வீட்டு அலங்காரப் பொருட்கள் பிரிவில் தனது பயணம் குறித்து அன்கித் ரங்தா எஸ்எம்பிஸ்டோரி உடனான உரையாடலில் பகிர்ந்துகொண்டார். அந்த நேர்காணலின் சில பகுதிகள் இதோ:

எஸ்எம்பிஸ்டோரி: 2012-ம் ஆண்டு நீங்க அறிமுகப்படுத்தியபோது வீட்டு அலங்காரப் பொருட்கள் சந்தையில் எத்தகைய இடைவெளியை நிரப்ப விரும்பினீர்கள்?

அன்கித் ரங்தா: நான்கு தலைமுறைகளாகவே எங்களது குடும்பம் ஜவுளி வணிகத்தில் ஈடுபட்டிருந்தது. எனினும் நான் இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் ஓராண்டு பணியாற்றிய பிறகு வடோதரா திரும்பினேன். என்னுடைய குடும்பம் ஈடுபட்டிருந்த மெட்டல் துறையில் நானும் ஈடுபட்டேன். 2011-ம் ஆண்டு வணிகம் சிறப்பாக செயல்படவில்லை. எனவே நல்ல லாபம் ஈட்டுவதற்கு சாத்தியக்கூறுகளை ஆராய்ந்தேன்.

வீட்டு அலங்காரப் பொருட்கள் சந்தையை ஆராய்ந்தபோது அங்கு மிகப்பெரிய இடைவெளி இருப்பதை கண்டறிந்தேன். அதாவது தரமான பொருட்கள் நியாயமான விலையில் கிடைப்பதில்லை என்பதையும் இந்தியா முழுவதும் விநியோக சங்கிலி மேலாண்மை முறையாக இல்லாததையும் உணர்ந்தேன். 

இந்தியா முழுவதும் பன்னிரண்டு மாநிலங்களில் விநியோக சங்கிலி மற்றும் மார்கெட்டிங் குழுவை உருவாக்கி வீட்டு அலங்காரப் பொருட்கள் பிரிவில் ஒரு நிறுவனத்தைத் துவங்க இதுவே உந்துதலளித்தது. ஆஃப்லைன் சந்தையும் சிறப்பாக வளர்ச்சியடைவதைக் கண்டேன். ஆனால் இங்கு கட்டணங்கள் தொடர்பான பிரச்சனையாக இருந்தது.

எஸ்எம்பிஸ்டோரி: உங்கள் இந்றுவனத்திற்கு சுமார் பத்து லட்சம் வாடிக்கையாளர்கள் தற்போது உள்ளனர். உங்களது தற்போதைய வருவாய் என்ன?

அன்கித் ரங்தா: தற்போது நாங்கள் வளர்ச்சியடைந்து வருகிறோம். ஒவ்வொரு ஆண்டும் பத்து லட்சத்திற்கும் அதிகமான புதிய வாடிக்கையாளர்கள் இணைந்துகொண்டு கடந்த ஆண்டு எங்களது வருவாய் கிட்டத்தட்ட 65 கோடி ரூபாயாக இருந்தது. இந்த ஆண்டு 100 கோடி ரூபாய் வருவாயை எட்டுவதை இலக்காகக் கொண்டுள்ளோம்.

எஸ்எம்பிஸ்டோரி: உங்களது தனித்துவமான சந்தை என எதைக் குறிப்பிடுவீர்கள்?

அன்கித் ரங்தா: நியாயமான விலையில் உள்ள தரமான வீட்டு அலங்கராப் பொருட்களின் தேவைக்கும் விநியோகத்திற்கும் இடையே எப்போதும் மிகப்பெரிய இடைவெளியை எங்களால் உணரமுடிகிறது. இது மிகப்பெரிய நகரங்களுக்கு மட்டுமல்ல இந்தியாவின் தொலைதூர பகுதிகளுக்கும் பொருந்தும். Story@Home லே, காஷ்மீர், சிக்கிம், மேற்குவங்காளம் போன்ற பகுதிகளைச் சென்றடையவேண்டும் என விரும்புகிறோம்.

இந்தப் பகுதிகளில் சந்தை தேவை சிறப்பாக உள்ளது. இங்குள்ளவர்களும் தங்களது வீட்டை அழகுப்படுத்துவதில் ஆர்வம் கொண்டுள்ளனர். கடந்த சில ஆண்டுகளில் இந்த சந்தைகளுக்கு ஆன்லைன் சானல் வாயிலாக விநியோகித்து வருகிறோம். தற்போது இந்தியாவில் 18,000-க்கும் அதிகமான அஞ்சல் குறியீடுகளுக்கு சேவையளித்து வருகிறோம்.

எஸ்எம்பிஸ்டோரி: விற்பனை மற்றும் மார்கெட்டிற்கு டிஜிட்டல் மீடியத்தை எவ்வாறு பயன்படுத்திக்கொள்கிறீர்கள்?

அன்கித் ரங்தா: தயாரிப்பு தொடர்பான ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி முதல் இறுதி வாடிக்கையாளர் வரை நமது அன்றாட வாழ்க்கையில் டிஜிட்டல் மீடியம் பெரும் பங்கு வகிக்கிறது. எங்களைப் பொருத்தவரை கிடங்கு மேலாண்மை, நிகழ்நேர இருப்பு அப்டேட், கேட்டலாக் வடிவமைப்பு மற்றும் மார்கெட்டிங், விநியோகம் மற்றும் கண்காணித்தல் போன்றவற்றில் டிஜிட்டல் பங்களிக்கிறது.

ஆன்லைன் விற்பனையும் உள்ளது. 2013-ம் ஆண்டு துவக்கத்தில் Myntra, Tradus, Jabong, Snapdeal, Flipkart போன்ற வலைதளங்கள் வீட்டு அலங்காரப் பிரிவில் தீவிரமாக செயல்பட்டது. விற்பனைக்கான பல்வேறு வாய்ப்புகளை ஆராய்வதற்காக இந்த வலைதளங்களில் பதிவு செய்யத் துவங்கினோம். நல்ல வரவேற்பு கிடைத்தது. அப்போது துறையில் ஒரு மாற்றம் ஏற்பட்டது. 2013-ம் ஆண்டு அக்டோபர் மாதம் சராசரி மாத விற்பனையின் அடிப்படையில் அடுத்த ஐந்து அல்லது ஆறு மாதங்களுக்குத் தேவையான இருப்பு எங்களிடம் இருந்தது.

எனினும் ஃப்ளிப்கார்டின் 'பிக் பில்லியன் டே' விற்பனையின்போது இருப்பு முற்றிலும் விற்பனை செய்யப்பட்டது. இது வழக்கமாக ஒரு வாரத்தில் விற்பனை ஆகும் அளவைக் காட்டிலும் 30 மடங்கு அதிகமாகும். 

இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் இருந்தே 65 சதவீத விற்பனை இருந்தது. இதன்பிறகு இந்தப் பிரிவின் உண்மையான சந்தை வாய்ப்பை உணர்ந்தோம். 

ஆஃப்லைன் சந்தை செயல்பாடுகளைக் குறைத்து மின்வணிகத்தில் கவனம் செலுத்தத் துவங்கினோம். ஒவ்வொரு வருடமும் மூன்று மடங்கு வளர்ச்சியை எட்ட முடிந்தது.

எஸ்எம்பிஸ்டோரி: ஃப்ளிப்கார்ட் விற்பனையைத் தவிர உங்களது பயணத்தில் குறிப்பிடத்தக்க மைல்கல்லாக எவற்றைக் குறிப்பிடுவீர்கள்?

அன்கித் ரங்தா: நாங்கள் ஆன்லைனில் அறிமுகப்படுத்திய பிறகும் நேரடி ஸ்டோர்களில் விற்பனை செய்து வந்தோம். ஆனால் 2013-ம் ஆண்டு ஆன்லைன் விற்பனையில் முக்கிய கவனம் செலுத்தும் புதிய அலுவலகத்தை அமைத்தபோது உண்மையான வளர்ச்சி துவங்கியது. அதன் பிறகு 2015-ம் ஆண்டு மின்வணிக நிபுணத்துவம் கொண்ட எங்களது குழுவை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள பெரிய அலுவலகத்திற்கு மாற்றலானோம். 2016-ம் ஆண்டு ஆன்லைன் விற்பனையில் வீட்டு அலங்கார பொருட்களுக்கான முன்னணி ப்ராண்டுகளில் ஒன்றாக மாறினோம்.

2017-ம் ஆண்டு 40,000 சதுர அடிகள் கொண்ட இருப்புகிடங்குடன்கூடிய பல அடுக்கு கட்டிடத்திற்கு மாறினோம். இந்தியாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட மற்றும் ஒழுங்குபடுத்தப்படாத நிறுவனங்கள் இடையே 20,000 கோடி ரூபாய் சந்தை இருப்பதை கண்டறிந்தோம். ஆன்லைனில் மட்டுமே செயல்படும் ப்ராண்ட் என்பதே எங்களது பலம். நேரடி சில்லறை வர்த்தக ஸ்டோர்களில் இனி விற்பனை செய்யப்போவதில்லை. இதன்மூலம் இடைத்தரகர்கள் செலவு நீக்கப்பட்டு சந்தையில் சிறந்த விலையில் விற்பனை செய்யமுடியும்.

எஸ்எம்பிஸ்டோரி: உங்கள் வணிகம் வளர்ச்சியடைகையில் நீங்கள் சந்தித்த முக்கிய சவால்கள் என்ன?

அன்கித் ரங்தா: எந்த வணிகத்திலும் அதிக சவால்கள் இருக்கும். மின்வணிக பிரிவில் செயல்படத் துவங்கியதில் எங்களுக்கு சவால்களும் கற்றல் அனுபவங்களும் இருந்தன. மின்வணிக லாஜிஸ்டிக்ஸ் பாரம்பரிய வணிகத்திற்கு எதிர்மாறாகவே இருந்ததைக் கண்டோம். மின்வணிக சந்தைப்பகுதிகளின் கடுமையான செயல்பாட்டு நடைமுறைகள், அரசு இணக்கம் ஆகியவை கடினமாக இருந்தது. பல நிராகரிப்புகளும் நீக்கல்களும் இருந்தது. ஆனால் நாங்கள் அவற்றிலிருந்து கற்றுக்கொண்டோம். மின்வணிக லாஜிஸ்டிக்ஸ் கலையைக் கற்றுத் தேர்ந்தோம்.

மனிதவள மேலாண்மையைப் பொருத்தவரை உற்பத்தி தொழிற்சாலைகளில் முழுமையான பயிற்சி பெறாத தொழிலாளர்களை பணியிலமர்த்தினோம். இன்னமும் அவர்களை நிர்வகிக்க கற்றுக்கொண்டிருக்கிறோம். தர மேலாண்மை நாங்கள் சந்தித்த மற்றொரு சவாலாகும். சிறப்பான தரத்தை உறுதிசெய்வதில் முக்கிய கவனம் செலுத்தப்பட்ட நிலையில் மூலப்பொருட்களின் தரத்தை நிர்வகிப்பதில் சவால்களை சந்தித்தோம். அத்துடன் இறுதி தயாரிப்பின் பேக்கேஜிங், கேட்டலாக் உருவாக்குவது, வாடிக்கையாளர்களுக்கு அனுப்புதல் போன்றவற்றிலும் சவால்கள் நிறைந்திருந்தது.

தரம் சார்ந்த பிரச்சனைகளை கட்டுப்படுத்த உதவும் வகையில் சிறப்பு தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தினோம். தற்போது 1.01 சதவீதம் குறைபாடு காணப்படுகிறது. இதை 0.5 சதவீதமாக குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். உற்பத்தி அளவு அதிகரித்து வளர்ச்சியடையும் நிலையிலும் இந்த இலக்கை எட்டுவோம் என்கிற நம்பிக்கை உள்ளது. சில பொருட்கள், குறிப்பாக அலங்காரம் மற்றும் ஃபர்னிச்சர் பொருட்கள் பகுதியில் தேவைக்கும் விநியோகத்திற்கும் இடையே இடைவெளி நிலவுவதைக் கவனித்துள்ளோம். எனவே எங்களது தொகுப்புகளில் கூடுதல் பொருட்களை இணைக்கவும் விரும்புகிறோம்.

ஆங்கில கட்டுரையாளர் : ரிஷப் மன்சூர் | தமிழில் : ஸ்ரீவித்யா

Add to
Shares
154
Comments
Share This
Add to
Shares
154
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக