பதிப்புகளில்

டெல்லியின் முதல் முழு டிஜிட்டல் கிராமம்!

11th Feb 2017
Add to
Shares
13
Comments
Share This
Add to
Shares
13
Comments
Share

தென்-மேற்கு டெல்லியில் இருக்கும் சுரக்பூர் கிராமம், இன்று முழுமையாக டிஜிட்டல் பேமண்ட் செய்ய தயாராகி மற்ற கிராமங்களுக்கு எடுத்துக்காட்டாக நிற்கிறது.

image


மாவட்ட நிர்வாக தகவலில்படி. அங்குள்ள 113 வீடுகளில் வசிக்கும் எவரேனும் ஒருவரின் ஆதார் எண் வங்கியுடன் இணைக்கப்பட்டு மொபைல் போன் மூலம் கட்டணம் செலுத்தும் வகையில் தயாராக உள்ளனர் கிராம மக்கள். இதனால் அந்த கிராமம் தற்போது 100 சதவீதம் டிஜிட்டல் பேமண்ட் கிராமம் ஆகியுள்ளது. இந்த அறிவிப்பை டெல்லியில் நடந்த விழாவில், அதிகாரிகள் அறிவித்தனர். இது குறித்து அதிகாரி பேசுகையில்,

“ஆதார் அட்டை உடையவர்களின் எண் மொபைல் எண் மூலம் வங்கி கணக்கில் இணைக்கப்பட்டுள்ளது. இதன் உதவியுடன் அவர்கள் ரொக்கமில்லா பரிவர்தனைகளை செய்யமுடியும். கிராமவாசிகள் இதனை பயன்படுத்தி பயனடையமுடியும்,” என்றார்.

தி ஹிந்து செய்திகளின் படி, அந்த கிராமத்தில் இரண்டு பெட்டி கடையில் பிஓஎஸ் இயந்திரம் வைக்கப்பட்டு, மக்கள் டெபிட்/க்ரெடிட் கார்ட் மூலம் பரிவர்தனை செய்ய வழி செய்யப்பட்டுள்ளது. வீடுவீடாக சென்று கிராம மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, ஆதார் அட்டை வழங்கப்பட்டு, மொபைல் வாலட், வங்கி இணைப்பு என்று எல்லாவித வசதிகளும் செய்யப்பட்டது. ரொக்கமில்லா பரிவர்தனை செய்ய அவர்கள் ஊக்குவிக்கப்பட்டார்கள்.

டிஜிட்டல்மயமாகி உள்ள பல கிராமங்களில் சுர்காபூரும் ஒன்று. குஜராத்தில் உள்ள சபர்கந்தா கிராமம் இந்தியாவில் முதலில் டிஜிட்டல் மயமான கிராமமாகும். பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போதும், அதன் பின்னரும் இந்த கிராமம் பிரச்சனையின்றி இயங்கியது செய்திகளில் வந்தது. பால் முதல் மளிகை வரை அனைத்து பொருட்களையும் அவர்கள் இ-வங்கி மூலம் பணம் செலுத்தி வாங்கிவருகின்றனர். தங்களின் சம்பளத்தை வங்கி கணக்கு மூலம் மொபைல் வசதியுடன் கட்டணங்கள் செலுத்த பயன்படுத்திவருகின்றனர். 

கட்டுரை: Think Change India

Add to
Shares
13
Comments
Share This
Add to
Shares
13
Comments
Share
Report an issue
Authors

Related Tags