பதிப்புகளில்

இளம் தலைமுறைக்காக தாய்மொழியில் பதிப்புச்சேவையை வழங்கி வழிகாட்டும் 'பிரதிலிபி'

YS TEAM TAMIL
14th Apr 2016
Add to
Shares
6
Comments
Share This
Add to
Shares
6
Comments
Share

“நான் பார்த்துக்கொண்டிருந்த வேலையில் மிகவும் சிறப்பாக செயல்பட்டுக்கொண்டிருந்தேன். என்னை தீவிரமான முயற்சிக்கு நான் உட்படுத்திக்கொள்ளவில்லை என்று இது உணர்த்தியது” என்கிறார் பிரதிலிபி இணை நிறுவனர் ரஞ்சித் பிரதாப் சிங். “நான் உண்டாக்க வேண்டிய அளவு தாக்கத்தை நான் ஏற்படுத்திக்கொண்டிருக்கவில்லை என்று நினைத்தேன். எனவே நாட்டை வலம் வருவதற்காக என் வேலையை விட்டுவிட்டு மேலும் சவால் மிகுந்த மற்றும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒன்றை செய்ய விரும்பினேன்” என்கிறார் அவர் மேலும்.

ஆர்வத்தை தேடி நிலையான வேலையை விட்டு விலகி வருவது என்பது பாராட்டுக்குறியது தான். ஆனால் அவருக்கு அடுத்து என்ன செய்வது என்பது பற்றி தெளிவு இல்லை. “அகமதாபாத்தில் வோடோபோனில் பார்த்துக்கொண்டிருந்த வேலையை விட்டு விலகிய பிறகு அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் நாடு முழுவதும் சுற்றிக்கொண்டிருந்தேன்” என்கிறார் ரஞ்சித். ஆனால் அவரிடம் அதற்கான பதில் இருந்தது அப்போது அவருக்கு தெரிந்திருக்கவில்லை.

image


புதுதில்லியில் மார்ச் 11 ல் நடைபெற்ற முதல் இந்திய மொழி டிஜிட்டல் திருவிழாவான பாஷாவில் பிரிதிலிபி அறிமுகம் செய்யப்பட்டது. இந்திய அரசின் கலாச்சார அமைச்சகம் மற்றும் பிரத்யேக பங்குதாரரான ரெவெரே லாங்குவேஜ் டெக்னாலஜீஸ் ஆதரவுடன் நடைபெற்ற நிகழ்ச்சி இது.

ரஞ்சித், ரே பரேலியில் உள்ள சிறிய கிராமத்தைச்சேர்ந்தவர். அவரது குடும்பம் மற்றும் ஊரில் உள்ளவர்கள் இந்தி மொழி மட்டுமே அறிந்தவர்கள். “என்னைப்போல ஓரளவு ஆங்கிலம் அறிந்தவர்கள் கூட தாய் மொழியில் பேசுவதிலேயே ஈடுபாடு கொண்டிருந்தனர். நாங்கள் ஹாலிவுட் படங்களை பார்க்கலாம் ஆனால் பாலிவுட்டை நேசித்தோம். கேம் ஆப் த்ரோன்ஸ் பிடித்த அளவுக்கு சந்திரகாந்தாவும் பிடிக்கும்” என்கிறார் ரஞ்சித்.

ரஞ்சித் பணியில் இருந்த காலத்தில் தனது நண்பர்களிடம், தாய் மொழியில் படிப்பதை விரும்புவதாகவும், தாய்மொழியில் மட்டுமே படிக்க கூடியவர்கள் வசதிக்காக ஒரு தளத்தை உருவாகக் வேண்டும் என்றும் பேசிக்கொண்டிருப்பார். பணியில் இருந்து விடுபட்டு புதிய எண்ணங்களுக்காக யோசித்துக்கொண்டிருந்த போது இதே நண்பர்கள், இது போன்ற தளத்தை யாரும் உருவாக்கவில்லை என்றால் ஏன் அதை நீயே செய்யக்கூடாது என கேட்டதால், நானே துவக்க தீர்மானித்தேன் என்கிறார்.

பிரதிலிபி

இதன் விளைவாக இந்திய மொழிகளுக்கான சுய பதிப்பு மேடையான பிரதிலிபியை அவர் உருவாக்கினார். எழுத்தாளர்கள் இதில் தங்கள் படைப்புகளை வெளியிடலாம். வாசகர்கள் அதை படித்து மகிழலாம். இப்போது இதில் ஆறு இந்திய மொழிகளில் 2,700 க்கும் மேற்பட்ட படைப்பாளிகள் தங்கள் எழுத்துக்களை சுயமாக வெளியிட்டு வருகின்றனர். 

“சாகித்ய அகாடமி, ஞானபீடம் மற்றும் பத்ம விருது பெற்ற பல எழுத்தாளர்கள் பிரதிலிபை பயன்படுத்தி வருகின்றனர்” என்கிறார் ரஞ்சித்.
image


இந்த ஸ்டார்ட் அப் 2014 செப்டம்பரில் துவங்கி 2015 மார்ச்சில் நிறுவனமாக்கப்பட்டது. ”386 நாட்களில் முதல் பத்துலட்சம் வாசிப்பு எனும் இலக்கை அடைந்தோம்“ என்று கூறும் ரஞ்சித் இந்த பிரிவில் இன்னமும் வளர்ச்சி வாய்ப்பு அபிரிமிதமாக இருக்கிறது என்கிறார்.

நீடித்த வளர்ச்சி

வெற்றிக்காக ரஞ்சித் வைத்திருக்கும் வரையரை வித்தியாசமானதாக இருக்கிறது. “லாபம் பற்றி கேட்டீர்கள் என்றால் நாங்கள் இன்னமும் வருவாய் உருவாக்கம் பற்றிக்கூடி யோசிக்கவில்லை” என்கிறார் அவர். ஆனால் நாங்கள் விரும்பினால் லாபமீட்ட முடியுமா என்றால் நிச்சயம் முடியும். சர்வருக்கான செலவு மற்றும் ஊழியர் சம்பளம் தவிர பெரிதாக செலவு செய்யவில்லை. மாதாந்திர அடிப்படையில் 20 சதவீத வளர்ச்சி கண்டு வருகிறோம். விரும்பினால் அடுத்த 90 நாட்களில் லாபமீட்ட முடியும் என்கிறார் அவர்.

ஆனால் லாபம் ஈட்டுவதுதற்கு ஒரு விலை கொடுக்க வேண்டியிருக்கும். 

“ஒவ்வொரு நிறுவனத்தின் இலக்கும் நீடித்த லாபம் ஈட்டுவது தான். இதன் பொருள் அதிக அளவிலான மக்களுக்கு மதிப்பு மிக்க ஒன்றை அளித்து, அதில் ஒரு பகுதியை வருவாயாக பெற வேண்டும். ஆனால் இரண்டும் ஒரே காலத்தில் நிகழ வேண்டும்” என்கிறார் அவர் மேலும்.

நிதி மற்றும் வளர்ச்சி

பிரதிலிபியின் சிறப்பம்சம் தொழில்நுட்பமோ அல்லது மனிதர்களோ கூட அல்ல என்கிறார். ”அதிக அளவிலான மக்களின் முக்கிய பிரச்சனைக்கு தீர்வு அளிக்கிறோம் என்பதே முக்கியமானது. மிகவும் அரிதாக நிகழ்வது போல சந்தையே மிகச்சிறந்த திறமைகளை ஈர்த்து, சேவையை மேலும் வளரச்செய்கிறது. எழுத்தாளர் மற்றும் வாசகர்கள் என இரு பரப்பிலுமே வளர்ச்சி அடைந்திருக்கிறோம். வளர்ச்சி பெரும்பாலும் வாய்மொழி பரிந்துரை மூலம் சாத்தியமாகியுள்ளது” என்கிறார் அவர்.

நாங்கள் செய்ய விரும்புவதெல்லாம் பயனாளிகள் கருத்துக்களை கேட்டு அவர்கள் தேவையை நிறைவேற்றுவது தான் என்கிறார் அவர் உறுதியுடன்.

உலகம் முழுவதும் பதிப்புத்துறையில் ஏற்பட்டு வரும் மாற்றம் இந்த வளர்ச்சியை மேலும் அதிகமாக்கும் என்று ரஞ்சித் நம்புகிறார். “உள்ளடக்கத்தைப்பொருத்தவரை இந்தியாவிலும், உலக அளவிலும் கட்டுப்படுத்தப்பட்ட வசதியில் (பதிப்பாளர்கள்) இருந்து திரட்டிகள் (அமேசான், டெய்லிஹண்ட்) மற்றும் பதிப்பு தளங்களுக்கு (மீடியம், வாட்பேட்) மாறிக்கொண்டிருப்பதாக நினைக்கிறேன். இதன் பொருள் முந்தைய வடிவங்கள் காணாமல் போகும் என்பதல்ல, புதிய வடிவங்கள் முக்கியமாகின்றன என்பதே ஆகும்.

image


இந்த திசையில் தொடர்ந்து முன்னேறுவோம் என்று நம்புகிறேன். எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்களிடையே அதிக உராய்வு இருக்காது. அமேசான் கிண்டில் நேரடி பதிப்பில் ஈடுபட்டது போல, இந்த மேடைகள் உருவாக்கியுள்ள மதிப்பை பயன்படுத்திக்கொள்ள சுவாரஸ்யமான வழிகளை கண்டறிய முடியும் என நம்புகிறேன். சீனாவில் மொபைல் பதிப்பாளர்களிடம் இருந்து புதிய வருவாய் மாதிரிகளை பார்த்து வருகிறோம்” என்கிறார் அவர்.

ரஞ்சித் பிரதிலிபியை தனது சேமிப்பு மற்றும் நண்பர்கள் உதவியுடன் துவங்கினார். 

“துவங்கிய பிறகு நாங்கள் டிலேப்ஸ் ( டைம்ஸ் இண்டெர்ண்ட் லிட்) ஆக்சலேட்டரில் பங்கேற்றோம். அவர்கள் முதல் கட்ட் நிதி அளித்தனர். மேலும் எங்கள் முதல் ஊழியர் தனது சொந்த பணத்தை இதில் முதலீடு செய்துள்ளார் என்பதிலும் பெருமிதம் கொள்கிறோம்”.

இது தவிர வாசகர்கள் மற்றும் படைப்பாளர்களிடம் இருந்து நிதி உதவி தொடர்பாக பல யோசனைகள் வந்தாலும் நாங்கள் இன்னமும் அவற்றை பரிசீலிக்கவில்லை என்கிறார். சம்பளம் மற்றும் தொழில்நுட்ப செலவுகள் மட்டும் கொண்ட வர்த்தகம் தொடர்பாக அவர் மகிழ்ச்சி தெரிவிக்கிறார்.

ஆங்கிலம் எனும் அந்தஸ்து

ஆங்கிலம் என்பது சர்வதேச அளவில் பயன்பாடு கொண்டது என்பதையும் முன்னேற விரும்பும் இந்தியர்களுக்கான அந்தஸ்து அடையாளமாக இருப்பதை மறுக்க முடியாது என்றாலும் இந்த ஆதிக்கம் காரணமாக உள்ளூர் மொழிகள் பாதிக்கப்படுகின்றன. ஆனால் இப்படி இருக்க வேண்டியதில்லை என்று ரஞ்சித் கருதுகிறார். “இந்திய மொழிகளுக்காக பாடுபடும் எங்களைப்போன்றவர்கள் ஆங்கிலத்திற்கு எதிரானவர்கள் அல்ல” என்கிறார் அவர்.

பிரதிலிபி மார்ச் 11 தில்லியில் நடைபெற்ற இந்தியாவின் முதல் இந்திய மொழி டிஜிட்டல் திருவிழாவில் காட்சி விளக்கம் அளிக்கப்பட்டது.

நாங்கள் என்ன செய்கிறோம் என்றால்- இந்திய மொழி பேசுபவர்கள் சார்பாக நான் பேசுகிறேன் மக்களுக்கு சுதந்திரம் மற்றும் சமத்துவம் தேவை.

அதாவது நான் செய்யும் ஒன்று, (தேர்வுக்கு தயாராவது அல்லது புத்தகம் படிப்பது) எனக்கு குறிப்பிட்ட இன்னொரு மொழி தெரியுமா? தெரியாதா? என்பதை சார்ந்து இருக்கக் கூடாது. இரண்டாவதாக என்னுடைய சுய மதிப்பு நான் பேசும் அல்லது எழுதும் மொழி சார்ந்திருக்க கூடாது என நினைக்கிறேன்.

பயணம்

தனது வாழ்க்கையில் பல வழிகாட்டிகளை பெற்றிருப்பதாக ரஞ்சித் சொல்கிறார். வாசகர்கள் மற்றும் எழுத்தாளர்கள் மதிப்பு மிக்க பாடங்களை வழங்கியதாக கூறுகிறார். ஆனால் மிகச்சிறந்த அறிவுரை ஒரு படத்தில் இருந்து கிடைத்தது என்கிறார். கேர்ல் நெக்ஸ்ட் டோர் படத்தில் வரும், ”உங்களுக்கு என்னத்தெரியும்? அது முக்கியமல்ல. ஏனெனில் உங்கள் மனதுக்கு தெரியும் கசக்கி பிழிந்தால் சாறு வரும் என்று” எனும் வாசகத்தை சுட்டிக்காட்டுகிறார்.

இது தான் அடிப்படை. நாங்கள் சரியான பிரச்சனைக்கு தீர்வு காண்கிறோம் என நம்பும் வரை, அதனால் ஏற்படும் வலிகள் அல்லது செய்ய நினைத்ததை செய்ய முடியாதது ஒரு பிரச்சனையே அல்ல. அவர்கள் பேசும் மொழி மற்றும் தொழில்நுட்ப பரிட்சியத்தை மீறி 500 மில்லியன் இந்தியர்களுடன் தொடர்பு கொண்ட முதல் இந்திய பதிப்பு மேடையாக பிரதிலிபி விளங்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார். எதிர்காலத்தில் இதை அடைவோம் எனும் நம்பிக்கை இருக்கிறது என்கிறார் உற்சாகமாக.

விடைபெறும் முன் ரஞ்சித் தனது அனுபவ ஆலோசனையை பகிர்ந்து கொள்கிறார். ”உங்கள் வர்த்தகம் எத்தனை சிறப்பாக அல்லது மோசமாக செயல்படுகிறது என்பது இரண்டு விஷயங்கள் சார்ந்தது. ஒன்று நீங்கள் தீர்வு காண விரும்பும் பிரச்சனை மற்றொன்று அதில் உங்களுக்கு உதவும் நபர்கள். இந்த இரண்டையும் சரியாக பெறுவதில் துவக்கத்திலேயே கவனம் செலுத்துங்கள்”.

இணையதள முகவரி: Pratilipi

ஆக்கம்; ராக்கி சக்ரவர்த்தி | தமிழில்; சைபர்சிம்மன்

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்

தொடர்பு கட்டுரைகள்:

இந்தியர்கள் தங்கள் தாய்மொழியில் ஸ்மார்ட்போனை பயன்படுத்த உதவும் 'ஃபர்ஸ்ட் டச்'

உள்ளூர் மொழியில் போட்டித் தேர்வுகளுக்கு தயாராக உதவும் கல்வி வழிகாட்டி செயலி

அடுத்த மாபெரும் அலை பிராந்திய மொழி வர்த்தகம் நோக்கியே உள்ளது- ஷாஹில் கினி

Add to
Shares
6
Comments
Share This
Add to
Shares
6
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக