பதிப்புகளில்

கோடை வெயிலை சமாளிக்க ஆண்களுக்கான சில டிப்ஸ்!

1st Apr 2016
Add to
Shares
0
Comments
Share This
Add to
Shares
0
Comments
Share

இனி தமிழகத்தில் கோடை காலம் வந்துவிட்டது. சென்ற வருடம் பெய்த கன மழைக்கு ஈடு கட்டும் வகையில் இந்த வருட கோடை காலம் இருக்கப் போகிறது என பல பேர் ஆருடம் கூறி வருகிறார்கள்.

அவர்கள் கூற்று பலித்துவிடுமோ என்று சொல்லும் அளவுக்கு அக்னி நட்சத்திர காலத்தில் அடிக்கும் வெயிலுக்கு இணையான வெயிலின் தாக்கத்தை இப்போதே உணர முடிகிறது.

இவ்வாறு இயற்கையில் நடக்கும் பருவ மாற்றத்தை நம்மால் மாற்ற முடியாவிட்டாலும், அதனை எவ்வாறு சமாளிப்பது என்பது பற்றியாவது நாம் தெரிந்து கொள்வது அவசியமாகும்.

கோடை காலத்தை பெண்கள் எவ்வாறு எதிர்கொள்வது என்பது பற்றி பல ஊடகங்கள் பேசி வந்தாலும், ஆண்களுக்கு தேவையான விஷயங்களை பெரிதாக ஊடகங்கள் சொல்வதில்லை.

இன்று நாம் இந்த கட்டுரை வாயிலாக கோடை காலத்தை ஆண்கள் எவ்வாறு எதிர்கொள்வது என்பது பற்றி பார்க்கப் போகிறோம்.

image


கோடை காலத்தில் ஆண்களுக்கு ஏற்ற லினன் ஆடைகள்

பொதுவாக கோடை காலம் என்று வந்தவுடன் பெரும்பாலானவர்கள் பருத்தி ஆடைகளை (காட்டன்) அணிவது சிறப்பு என்று சொல்வார்கள். ஆயினும் பருத்தி ஆடைகளை விட லினன் ஆடைகள் அணிவது உகந்தது என தற்போது பரவலாக பேசப்பட்டு வருகிறது.

லினன் ஆடைகளை பொறுத்தவரை அவை காட்டன் ஆடைகளை விட சற்று விலை அதிகமானாலும், இந்திய சீதோசன நிலைக்கு ஏற்ற ஆடையாக உள்ளன.

இந்த வகையான ஆடைகள் மேற்கத்திய நாடுகளில் பெரிதும் விரும்பப்பட்டாலும் தற்போது தமிழகம் போன்ற அதிக வெப்பம் நிலவும் இந்திய மாநிலங்களில் மக்கள் விரும்பி அணியும் துணி வகையாக இது மாறியுள்ளது.

பொதுவாக கோடை காலத்தில் ஆண்கள் இறுக்கமான ஆடைகளை அணிவதை தவிர்ப்பது நல்லது. அதிகமான வெப்பம் கோடை காலத்தில் நிலவுவதால், இறுக்கமான ஆடைகளை அணியும் போது அதிகப்படியான வியர்வை வெளியேறுவதால், சருமப் பிரச்னைகளை அது உண்டாக்ககூடும்.

கோடை காலத்தில் ஆண்களுக்கு ஏதுவான ஆடைகள் என்று வரும்போது, குறிப்பாக வெளிர் நிறத்திலான ஆடைகளை அணிவது உகந்ததாகும். கருப்பு போன்ற அதிக வெப்பத்தை உறிஞ்சக்கூடிய நிறங்களை அணிவது, வெப்பத்தின் தாக்கத்தை மேலும் அதிகரிக்கும்.

குடும்பத்தை விட்டு தனியாக வசிக்கும் சில ஆண்கள் , முதல் நாள் பயன்படுத்திய ஆடைகளை அடுத்த நாளும் பயன்படுத்துவது வழக்கம், தயவுசெய்து கோடை காலத்தில் அந்த வழக்கத்தை மாற்றி, ஒவ்வொரு நாளும் தோய்த்த உலர்ந்த ஆடைகளை அணிவது புத்துணர்ச்சி அளிப்பதோடு, கோடை காலத்தில் வரும் சரும பிரச்னைகளில் இருந்து நம்மை பாதுகாக்க ஏதுவாக அமையும்.

மாமிசத்தை தவிர்ப்பது நல்லது

கோடை காலம் வந்தவுடம் அதிகளவு நீர்ச்சத்து தேவைப்படும்.. இந்த நீர்ச்சத்து காய்கறி மற்றும் பழங்களில் அதிகளவில் இருப்பதால் இவற்றை அதிகளவில் எடுத்துக் கொள்வது நல்லது.

முடிந்தவரை மாமிசம் எடுத்துக் கொள்வதை தவிர்ப்பது நல்லது. கோடை காலங்களில் அதிகளவிலான மாமிசத்தை நாம் நுகரும் போது, சில வேளைகளில் அது செரிமான பிரச்னைகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது எனவே இவற்றை தவிர்ப்பது நல்லது.

பெரும்பாலான ஆண்கள் வேலை நிமித்தம் காரணமாக அதிகப்படியான நேரத்தை வெளியில் செலவிடுவதால், அடிக்கடி மோர், இளநீர் அல்லது நீர் எடுத்துக் கொள்வது நல்லது. குறைந்த பட்சம் கோடை காலத்தில் ஒரு நாளைக்கு 3 முதல் 5 லிட்டர் தண்ணீர் பருகுவது நல்லது.

ஏதாயினும் வேலையாக வெளியில் சென்று விட்டு வீடு வந்ததும், முடிந்தவரை குளிப்பது நல்லது. குளித்து விட்டு மிக லேசான ஆடைகளை அணிந்து கொள்வது கோடையை சமாளிக்க ஏதுவாக இருக்கும்.

அதிகமாக வெளியில் சுற்றாதீர்கள்

கோடை காலத்தில் பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும் சரும பிரச்னைகள் வருவது இயல்பானதாகும். எனவே முடிந்தவரை காலை 11 மணி முதல் 3 மணி வரை நேரடியாக சூரிய வெப்பத்தில் செல்வதை தவிர்ப்பது நல்லது.

இந்த நேரத்தில் சூரியனின் புற ஊதாக் கதிர்கள் நேரடியாக பூமிக்கு வருவதால் சரும பிரச்னைகள் வரும் அபாயம் உள்ளது.

ஒருவேளை இந்த நேரத்தில் வெளியில் செல்ல நேரிட்டால் முகத்தில் "சன் ஸ்கிரீன் லோஷன்" பயன்படுத்துவதை மறக்க வேண்டாம்.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக, முடிந்தவரை ஒரு மரமாவது நட்டு இனி வரும் காலங்களில் கோடை வெப்பத்தை தணிக்க வழி செய்குவோம்.

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்

Add to
Shares
0
Comments
Share This
Add to
Shares
0
Comments
Share
Report an issue
Authors

Related Tags