பதிப்புகளில்

அன்புள்ள ஆ(பெ)ண்களே நீங்கள் சரியான கேள்விகளை கேட்கிறீர்களா?

YS TEAM TAMIL
3rd Nov 2015
Add to
Shares
3
Comments
Share This
Add to
Shares
3
Comments
Share

"சரியான கேள்விகளை நீங்கள் கேட்கவில்லை என்றால், சரியான பதில்களை பெற மாட்டீர்கள். சரியாக கேட்கப்பட்ட கேள்வி, பல நேரங்களில், அதற்கான பதிலை நோக்கியே இருக்கும். கேள்வி கேட்பது ஆய்வின் A-B-C. விசாரிக்கும் மனது மட்டும் தான், சிக்கல்களைத் தீர்க்கிறது"- எட்வார்டு ஹாட்நெட்.

image


என்னுடைய பிறப்பிடத்தில், பெண்ணாய் பிறப்பது ஏறத்தாழ குற்றம். பெண்களை தாழ்வாக நடத்துவது அந்த சமூகத்தின் அன்றாட வேலைகளில் ஒன்று. அங்கிருந்து கொண்டு, கடினமாக உழைத்து, (அநேக பெண்களைப் போல விடாமல்) போராடி, நான் இருக்கும் இந்த நிலைக்கு வந்திருக்கிறேன். பெண் தொழில் முனைவோருக்கு போதுமானவைகள் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டிற்கும் ஆளாகி இருக்கிறேன்.

என்னுடைய பாட்டி என்னிடம் “பிஹாரில் இருக்கும் பெண்களுக்கு நீ என்ன செய்கிறாய்?” எனக் கேட்டுக் கொண்டே இருப்பார். அவர் பதினாறு வயதில் திருமணம் செய்து வைக்கப்பட்டு, பதினெட்டு வயதில் விதவையாகி, அதற்கு பின் படித்து, மாநில அரசு ஊழியரான முதல் பெண்மணி ஆவார். “ஹெர்ஸ்டோரி மூலம் (herstory) நான் செய்யும் பணி கணக்கில்லையா?” என்று அவரிடம் கேட்பேன். “போதுமானதாக இல்லை” என்று பதில் அளித்துவிட்டு, பஹல்பூரில் பட்டு தொழிற்சாலைகளில் வேலை செய்து கைகளை இழக்கும் பெண்களை சந்திக்க சொல்வார், பின் என்னை நடுங்க வைக்கும் விஷயங்களை சொல்லிக் கொண்டே போவார். ஓய்வு பெற்ற பிறகு, ‘ஜகோ பெஹன்’ என்ற பெண்களுக்கு அதிகாரமளிக்கும் அரசு சாரா அமைப்பை அவர் உருவாக்கினார், என்னுடைய சிறு வயதில் பள்ளி முடிந்ததும் அவரோடு சென்று அங்கு வேலை செய்திருக்கிறேன். அவரோடு வேலை செய்த உண்மையின் பிரதிபலிப்பு தான் இன்றைய நான் என நீங்கள் தாராளமாக கற்பனை செய்து கொள்ளலாம்.

எனக்கு பாலின சமத்துவம் என்பது மிக அந்தரங்கமானது. நான் பெண்களின் சிக்கல்களைப் பற்றி பேசுவதிலிருந்து விலகி இருப்பதற்கு காரணம், பேசுவதால் ஒன்றுமே ஆகப் போவதில்லை, எதாவது செய்வதால் தான் மாற்றம் வரும் என கற்றுக் கொண்டதால் தான். என் ஊரில் உள்ள பெண்களுக்கு உதாரணமாய் இருக்க நான் கடினமாய் உழைக்கிறேன்; அவர்கள் “அவரால் செய்ய முடிந்தால், நம்மாலும் செய்ய முடியும்,” என்று சொல்ல வேண்டும்.

நான் வாழும் இன்றைய தொழில் முனைவு உலகிற்கு திரும்பி வந்து பார்த்தால், தொழில்நுட்பத்தில் இயங்கும் பெண்களையும், தொழில்நுட்ப கருத்தரங்குகளில் பெண்கள் குறைவாக உருவகிக்கப்படுதல் பற்றியும் மக்கள் பேசுவதை கேட்க ஆச்சரியமாக இருக்கும். இந்த உரையாடல்கள் பயனுள்ளவையாக இருக்கலாம் ஆனால் அவை வெறும் உரையாடல்கள் தான். நான் எந்த உரையாடல்களிலும் பங்கு பெற விரும்பவில்லை. நான் ஏதாவது செய்ய விரும்புகிறேன். எனவே, இன்று, ஒப்பனைக் கேள்விகளின் மேற்பரப்பையும் கடந்து பார்க்கச் சொல்லி மன்றாடப் போவதில்லை, வற்புறுத்துவேன். நாம் கேள்வி கேட்பதாய் இருந்தால், சரியான கேள்விகளை கேட்போம், ஆழமான யோசனை தேவைப்படும் கேள்விகளை, மற்றும் ஒன்று கூடியோ தனித்தோ அதற்கான பதில்களை கண்டு பிடிப்போம்.

கேள்விகளுக்கு போகும் முன், என் கதையின் சிறு பகுதியை பகிர்ந்துக் கொள்கிறேன். இந்த மாதத்தின் தொடக்கத்தில் ஒரு வாரம் டில்லியில் இருந்தேன், அதைத் தொடர்ந்த மூன்று நாட்கள் டெக் ஸ்பார்க்ஸில் இருந்தேன். அதாவது நான் வீட்டில் நேரம் செலவழிக்கவே இல்லை. நான் தொழில் முனைவரான கடந்த ஏழு வருடங்களும் இப்படித்தான் இருந்திருக்கிறது. நான் ‘வீட்டுக் கடமைகளை’பற்றிய கவலை இல்லாமல் இதை செய்தேன், ஏனெனில் நானும் என் கணவரும் ஒருவருக்கொருவர் நாங்கள் செய்யும் வேலையையும் அதற்கான காரணத்தையும் ஆதரிக்கிறோம். என் வேலையை செய்ய அவர் ‘அனுமதி’ தருவதில்லை; அவருக்கு அவருடைய வேலை எவ்வளவு முக்கியமோ அதைப் போல் தான் என் வேலை எனக்கும் என்று தெரியும், மேலும் அவருக்கு, என் வேலையின் முக்கியத்துவத்தை பாலினம் அமைப்பதில்லை.

என்னைப் பொறுத்தவரையில், பாலின சமத்துவம் என்பது ஒரு தொழில்நுட்ப தொழில் முனைவு தொடக்க நிகழ்வில் அதிகளவில் ஏன் பெண்கள் இல்லை என கேட்டு மேலோட்டமாக நகர்வது இல்லை. உண்மையிலேயே அந்த பிரச்சனையை சமாளிக்க வேண்டும் என நினைத்தால், அதை விட ஆழமான பிரச்சனைகளை கேட்கவும், தீர்வு காணவும் தொடங்க வேண்டும்- ஏன் அதிகளவில் பெண்கள் தொழில் முனைவை தேர்வு செய்வதில்லை? ஏன் பெண் தொழில் முனைவோருக்கு நிதி வசதி கிடைப்பது இல்லை? ஏன் ஒரு பெண் தலைமை கொண்ட நிறுவனம் பிரபலம் ஆகவில்லை? ஏன் அதிகளவில் பெண் முதலீட்டாளர்கள் இல்லை..? இப்படி முடிவில்லாதது... என் ‘ஏன்’ பட்டியல்.

இதற்கு பதில் சொல்ல வேண்டியது பெண்கள் இல்லை. சமூகம், மேலும் அது நம் வீட்டில் இருந்து தொடங்கவேண்டும்.

பெற்றோர்களிடம் கேட்கிறேன், உங்கள் பெண் பல நேரங்களில் வீட்டில் இல்லை, எப்பொழுதுமே அவருடைய தொழில் முனைவைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்கிறார் என்றால் எப்படி உணர்வீர்கள்? எந்த நிலை வரை ஆதரிப்பீர்கள்?

சமூகம் முழுவதையும் கேட்கிறேன், வீட்டு கடமைகளையும் அக்கம் பக்கத்தார் என்ன நினைப்பார்கள் என்பதைப் பற்றி கவலைப்படாமல் உங்கள் சகோதர சகோதரிகளின் பெண்களும், பேத்திகளும், நண்பர்களும் தங்களது தொழில் முனைவை வெற்றி பெற வைக்க, மாபெரும் முயற்சி செய்து கொண்டிருக்கும் போது, எந்த எல்லை வரை ஊக்கப்படுத்துவீர்கள்?

ஆண்களிடம் கேட்கிறேன், உங்களுடைய மனைவியோ, காதலியோ, தங்கையோ அவர்களுடைய தொழில் முனைவு வெற்றி பெற, உங்களுடைய பணி வாழ்க்கையில் நீங்கள் சில தியாகங்களை செய்ய, (பெண்கள் எப்போதும் செய்வது போல்) வேண்டிய அளவு உதவியும் ஆதரவும் கேட்டால் எப்படி உணர்வீர்கள்?

முதலீட்டாளர்களிடம் கேட்கிறேன், அவர்களை அணுகும் பெண் தொழில் முனைவோர், அடுத்துள்ள ஆளைப் போல ஒரு சிறப்பான வேலையை செய்து, அவர்களது பணியில் உணர்ச்சிவசப்படமால் இருக்க முடியுமானால், பெண் தொழில்முனைவோர் நடத்தும் ஸ்டார்ட் அப்களை ஒரு சிறந்த நிறுவனமாக கணக்கில் கொள்வீர்களா?

இவை பதிலளிப்பதற்கு கடினமான கேள்விகள், தொழில்நுட்ப ஸ்டார்ட்-அப்களின் கூட்டங்களின் குழுவில் அதிகளவில் பெண்களை அமர்த்துவதாலோ, மேடையில் பதினைந்து நிமிடங்கள் ஒரு பெண்ணை நிற்க வைப்பதாலோ இதற்கான பதில்கள் கிடைக்கப் போவதில்லை. தொழில்நுட்ப சூழலிலும், ஸ்டார்ட் அப் சூழலிலும் பெண்கள் அதிகளவில் இருந்தால், இதைப் போன்ற நிகழ்வுகளில் பெண் பேச்சாளர்களும் அதிகளவில் இருப்பார்கள்- அதை விட முக்கியமாக பெண்கள் தங்கள் தகுதிக்கான கவனத்தைப் பெற அதிகாரப்பூர்வமாக கேட்கும் போது.

அனைத்து நேர்மறைப் புள்ளிகளிலும்,பெண்கள் குறைவாக உருவகிக்கப்படும் பிரச்சனையைப் பற்றி பேசுவோமானால், பெண் என்ற ஒரே காரணத்திற்காக ஒரு பெண் நிபுணரை பதினைந்து நிமிடங்கள் மேடையில் இருக்க வைப்பதை விட, ஆழமான யோசனை வேண்டும். அது நாம் நம் வீட்டுப் பெண்களை, மனைவியையும் சகோதரியும் மட்டுமின்றி, மகள்களையும் பிறந்த தேதியிலிருந்தே பாராட்ட ஆரம்பிக்கும் போது நடக்கும். (நாம் ஒவ்வொரு சவாலுக்கும், வெற்றிக்கும், தோல்விக்கும், இடருக்கும் எப்படி எதிர்வினையாற்றுகிறோம், எப்படி ஏற்றுக் கொள்கிறோம் என்பது, நம் சிறு வயதிலிருந்து எப்படி பழக்கபட்டோம் என்பதை பொறுத்துதான் என்பதை மறக்க வேண்டாம் ).

கல்வியறிவுள்ள பெண்கள், சில ஆண்டுகள் வேலை செய்த பிறகு, வேலையை ஏதோ காரணத்திற்காக விட்டு விலகும் போது, அதற்கு வழக்கமாக சமூக மற்றும் குடும்ப அழுத்தம் தான் காரணமாக இருக்கும் என்பதை எண்ணிப் பார்த்திருக்கிறோமா? ஏனெனில் அவர்களது குடும்பமும், உறவினர்களும், அக்கம் பக்கத்தாரும் அவர் குடும்பத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காத்தைப் பற்றி மோசமாக உணரவைத்திருப்பார்கள். ஏனெனில், கணவரும் குழந்தையும் இருக்கும் போது, குற்றவுணர்வின்றி சுமை இல்லாமல் வேலையைத் தொடர போதுமான அளவு ஊக்கமளிக்கும் அமைப்பு இங்கு இல்லை. குறிப்பாக, பொறியியல், தொழில்நுட்பம், மற்றும் மேலாண்மை துறையில் இருக்கும் பெண்கள், இந்தக் குற்றவுணர்ச்சியைப் போக்கக்கூடிய, அதே சமயத்தில் முழுமை உணர்வைத் தரும் சவால்கள் குறைந்த பணிகளை தேர்ந்தெடுக்க வேண்டியிருக்கிறது. (தற்செயலாக இந்த பணிகள், அந்த பெண்களின் ஆர்வத்தினால் மிக மிக வெற்றிகரமானதாக அமைந்து விடுகிறது).

உலகம் ஒரு போர்களம், ஒவ்வொருப் பெண்ணும் ஒவ்வொரு ஆணைப் போலவே, அந்த போரை தன்னுடைய தகுதியால் வெல்ல விரும்புகிறாள், பாலினத்தால் அல்ல.

நேர்மறையான நடவடிக்கைகளுக்கு ஏற்ற நன்மைகள் இருக்கின்றன, பெண்களை பன்முகத்தன்மைக் கொண்ட குழுவில் அமர்த்துவதாலும் நன்மைகள் இருக்கின்றன. ஆனால், அந்த நடவடிக்கைகள் குறிபிட்ட காலத்திற்கு முக்கியமான முன்னேற்றத்தை நோக்கிய பாதையாக இருக்க வேண்டும், அது சாலையின் எல்லையாக இருக்கக் கூடாது.

உதாரணமாக,டெக்ஸ்பார்க்ஸ் 2015 ஹேக்கத்தான் உட்பட, இந்தியாவின் அடுத்த நம்பகத்தகுந்த தொழில்நுட்ப தொழில்முனைவுகள் பட்டியலை வெளியிட்டு, மூவாயிரம் பங்கேற்பாளர்களையும், ஒரு டஸனுக்கும் மேலான விளம்பரதாரர்களையும் கவர்ந்தது. அதற்கான ஏற்பாடுகளை செய்தது, பெண் தலைமை முன்முயற்சியான யுவர்ஸ்டோரி. ஆனால், நாங்கள் பாலின பாகுபாடற்றவர்கள், அதை நான் பெருமையுடன் சொல்கிறேன். நிகழ்வுக்கான ஏற்பாடுகள் தொடங்கியபோது, பேச்சாளராகவோ, பேனலிஸ்டாகவோ உங்களை நீங்களே பரிந்துரைக்க விண்ணப்ப படிவம் ஒன்று இணையதளத்தில் அமைக்கப்பட்டது. பெற்ற 200 பரிந்துரைகளில், ஒரு டஸனிற்கும் கீழ் தான் பெண்கள் தங்களைத் தானே பரிந்துரை செய்திருந்தனர். பல பெண்கள் ஆண்களை பரிந்துரை செய்திருந்தனர்.

பெண் தொழில் முனைவோருக்கு நான் சொல்கிறேன், “தொழில் முனைவு சூழலிலும், வேலை இடத்திலும், வீட்டிலும் ‘பார்வையில்’ உறுதியாய் இருங்கள். குறை பிரதிநிதித்துவம் பற்றி பரிசோதனை செய்வதை விட்டுவிட்டு, சுறுசுறுப்பாக, வெளிச்சத்தில் உங்களுக்குரிய இடத்தை உரிமையோடு கேளுங்கள். குறிப்பாக, பெண் தொழில் முனைவோர், பிறருக்கு ஒளியாகவும் உதாரணமாகவும் இருப்பவர்கள். அந்த நிலையைப் பயன்படுத்தி பிறரை முன்னேற ஊக்கப்படுத்துங்கள். நீங்கள் அதை செய்யவில்லையென்றால், அப்படி ஒன்றை செய்ய முடியும் என பிறருக்கு எப்படி தெரியும்?

சமூகமாக, பெற்றொர்களாக, சகோதர சகோதரிகளாக, வாழ்க்கைத்துணைகளாக, உறவினர்களாக, ஆசிரியர்களாக, வழிகாட்டிகளாக, நண்பர்களாக பெண்களையும் பெண் தொழில் முனைவோர்களையும், அவர்கள் ஆண்களாய் இருந்திருந்தால் எப்படி ஊக்கப்படுத்தியிருப்போமோ, அப்படி ஊக்கபடுத்த வேண்டும். அது உங்களை பெண்ணீயவாதியாக மட்டும் அல்லாமல், ஒரு சிறந்த மனிதராக்குகிறது.

அனைத்து பெண்களுக்கு: இந்த தூரத்தைக் கடக்க உங்களுக்கு ஊன்றுகோல் தேவை இல்லை. நீங்கள் வெற்றியை நோக்கி ஓடும் வேளையில், அது உங்கள் வேகத்தைக் குறைக்கும்.

என்னோடு எப்போதும் இருக்கும் மஹாத்மா காந்தியின் வாசகம் ஒன்று: “இந்த உலகில் நீங்கள் பார்க்க வேண்டிய மாற்றமாய் இருங்கள்.”

(இது யுவர்ஸ்டோரி நிறுவனர் ஷ்ரத்தா ஷர்மா எழுதிய கட்டுரையின் மொழிபெயர்ப்பு)

Add to
Shares
3
Comments
Share This
Add to
Shares
3
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக