பதிப்புகளில்

இயந்திர கற்றல் பிரிவில் செயல்படும் கண்ணூரைச் சேர்ந்த ஸ்டார்ட் அப் Articbot

வாடிக்கையாளர்களுக்கு மெய்நிகர் உதவியாளரை வழங்கி அவர்களது கேள்விகளுக்கு தாமதமின்றி பதிலளிக்கும் தளத்தை வழங்குகின்றனர் இந்த நிறுவனர்கள்!  

YS TEAM TAMIL
11th Nov 2017
Add to
Shares
11
Comments
Share This
Add to
Shares
11
Comments
Share

வரலாற்றுப் புகழ்பெற்ற பகுதியான கேரளாவின் கண்ணூர் நகரில் வளர்ந்தவர்களுக்கு சுற்றுலா பயணிகளிடம் தொடர்பு கொள்வது என்பது தவிர்க்கமுடியாத ஒன்றாகும். பலர் தங்களிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலளித்துவிட்டு நகர்கையில் வி.பி ராகுல் மற்றும் ரிஜின் ரமேஷ் இருவரும் ‘வாடிக்கையாளர்களின் கேள்விகள் சார்ந்த மேலாண்மை திறனை வளர்த்துக்கொள்வதற்கான தளமாகவே இதை பயன்படுத்திக்கொண்டனர்.

26 வயதான இவர்கள் Articbot நிறுவனத்தை உருவாக்கியவர்கள் மற்றும் இணை நிறுவனர்கள். இது ஒரு இயந்திர கற்றல் தளம். நிறுவனங்கள் 100 வெவ்வேறு மொழிகளில் வாடிக்கையாளர்களுடன் இணைய உதவுகிறது. தயாரிப்புகள் குறித்த சந்தேகங்களை தீர்க்க உதவுகிறது. சேவைகளைப் பெறுவதற்கான செயல்முறைகளை மேற்கொள்கிறது.

இவர்கள் இருவரின் தனிப்பட்ட அனுபவம் காரணமாகவே கேள்விகளுக்கு பதிலளிக்கக்கூடிய இயந்திர கற்றல் தளத்தை உருவாக்கும் எண்ணம் இவர்களுக்கு உதித்தது. 

“நீங்கள் ஒரு நிறுவனத்துடன் வணிக நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தால் அவர்களது வாடிக்கையாளர் சேவை மையத்தை அழைப்பது என்பது சிரமமான விஷயமாகும்,” என்கிறார் ராகுல். அத்துடன் ஒரு இயந்திரமோ அல்லது மென்பொருளோ மனிதர்களைக் காட்டிலும் பன்மடங்கு சிறப்பாக பணியாற்றும் என்றார்.

வணிகங்கள் எங்களைப் போன்ற ஸ்டார்ட் அப்களுடன் இணைந்து தங்களது சேவைகளை இயந்திரங்களின் உதவியுடன் வழங்கலாம். இயந்திரங்கள் கேள்விகளுக்கு பதில்களை துல்லியமாக வழங்கும்,” என்றார் அவர்.

Articbot ஒரு இயந்திர கற்றல் நிறுவனம். தனது வளர்ச்சியின் அடுத்தட்ட கட்டங்களில் செயற்கை நுண்ணறிவு வழிமுறைகளை இந்நிறுவனம் உருவாக்க உள்ளது. இந்த வழிமுறைகளானது பல்வேறு துறைகள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து பெறப்படும் தரவுகளை ஆய்வுசெய்யக்கூடியது. தரவுகளின் பேட்டர்ன்களைக்கொண்டு மென்பொருள் தொடர்ந்து தெரிந்துகொள்ள கற்றுக்கொடுக்கும் செயல்முறைதான் இயந்திரக்கற்றல். அதே சமயம் செயற்கை நுண்ணறிவு என்பது இயந்திர கற்றலைக் காட்டிலும் ஒரு படி மேலே சென்று மென்பொருள் தான் கற்றறிந்ததைக்கொண்டு தீர்மானமெடுக்கும். இவ்வாறு நிபுணர்கள் விவரிக்கின்றனர். 

image


அதாவது ஒரு குழந்தை தனது முந்தைய அனுபவங்களைக் கொண்டு ஒவ்வொரு வருடமும் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதைப் போன்றதாகும். பெரிய நிறுவனங்களிடமிருந்து தரவுகளைப் பெற்று சிக்கலான அமைப்புகளை உருவாக்கும் திறன் காரணமாக உலகளவில் Reflektion, ScoreData போன்ற நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவை செயல்படுத்தும் விதத்தையே மாற்றி வருகின்றனர்.

இந்தியாவில் ஃப்ளிப்கார்ட் போன்ற நிறுவனங்கள் கிட்டத்தட்ட தங்களது வாடிக்கையாளர்களை முழுமையாக புரிந்துகொள்வதாக தெரிவிக்கிறது. ஸ்டார்ட் அப்கள் செயற்கை நுண்ணறிவு சேவையளிக்கக்கூடிய ’டேட்டா எக்ஸ்ப்ளோஷன்’ காலகட்டத்திற்கு நிறுவனங்கள் தங்களை தயார்படுத்திக்கொள்ள உதவும் டேட்டாபேஸ்களை உருவாக்குகிறது Grakn.AI போன்ற நிறுவனங்கள்.

இப்படிப்பட்ட சூழலில் Articbot மற்றும் அதன் மெய்நிகர் உதவியாளர் சேவை எங்கு பொருந்துகிறது. இந்தியாவில் சாட்பாட்ஸ் உருவாக்கும் பல்வேறு நிறுவனங்களுடன் போட்டியிடுகிறது இந்நிறுவனம். யெல்லோ மெசென்ஞர், Racetrak.AI, Niki.ai போன்றவை நிதியுதவி பெற்ற சில நிறுவனங்களாகும். இவை நாட்டில் சில வணிக ஒப்பந்தங்களையும் பெற்றுள்ளது.

தற்சமயம் Articbot 15 வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது. இதில் எட்டு வாடிக்கையாளர்கள் கட்டணம் செலுத்துபவர்கள்.

துவக்கம் மற்றும் வணிகம்

ராகுலும் ரிஜினும் தமிழ்நாட்டில் சேலத்திலுள்ள விஎம்கேவி பொறியியல் கல்லூரியில் சந்தித்தனர். இங்கு அவர்கள் தங்களது பெரும்பாலான நேரத்தை டேட்டா மாடலிங் குறித்தும் மல்டி நோடல் எண்டர்பிரைஸ் தரவுகளின் சிக்கலான பிரச்சனைகளை தீர்க்க மென்பொருளை பயன்படுத்துவது குறித்தும் பல மணி நேரம் விவாதித்தனர். 2012-ம் ஆண்டு பட்டம் பெற்ற இவர்கள் இருவரும் பெங்களூருவின் ஒரு தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனத்தில் பணியைத் துவங்கினர்.

ஒரு நிறுவனத்திற்கு கட்டண நுழைவாயில் உருவாக்கும்போது கட்டண நுழைவாயில் இரகசிய இலக்கம் குறித்த தகவல் வழங்கப்படவில்லை என்பதை உணர்ந்தனர். பிரச்சனையை சரிசெய்ய கட்டண நுழைவாயில் நிறுவனத்தின் சேவைக் குழுவை அழைத்தனர். இதைச் சரிசெய்ய மூன்று நாட்கள் எடுத்துக்கொண்டனர். இது 2016-ம் ஆண்டு மே மாதம் நடந்தது. இவர்கள் இருவரும் ஒரு வணிக வாய்ப்பு இருப்பதை விரைவாகவே உணர்ந்தனர். இதனால் தங்களது பணியைத் துறந்து கண்ணூருக்கு மாற்றலாகினர்.

ராகுல் மற்றும் ரிஜ்ஜின் தளத்திற்கு கோடிங் செய்யும் பணியுடன் துவங்கி ஆறு பொறியாளர்களை பணியிலமர்த்தி Articbot-ஐ உருவாக்கினர். வணிகம் சார்ந்த சந்தேகங்களுக்கு தீர்வளிக்க மெய்நிகர் சாட் உதவியாளரை வழங்குவதற்காக டிஜிட்டல் நிறுவனங்கள், வங்கிகள், சில்லறை வர்த்தகர்கள் ஆகியோரை தொடர்பு கொண்டார் ராகுல்.

ஜவுளித் துறையில் சில்லறை வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவருக்கோ அல்லது பல்வேறு ஏஜென்சிக்களுடன் செயல்படும் உற்பத்தியாளருக்கோ புதிய வரவுகளைப் பார்க்கவேண்டுமெனில் பழைய முறையை பின்பற்றவேண்டும். அதாவது விற்பனையாளர் அழைப்புகளை ஏற்பார், வாங்குவோருக்கு விவரங்களை அனுப்புவார், சந்திப்பதற்கு நேரத்தை தீர்மானிப்பார். ஆனால் சாட்பாட்டில் இவை அனைத்து நடவடிக்கைகளையும் தாமதமின்றி வலைதளம் கையாளும்.

இந்த நிதியாண்டியின் இறுதிக்குள் 10 லட்ச ரூபாய் வருவாய் ஈட்டுவதை இலக்காகக் கொண்டுள்ளது இந்நிறுவனம். சுயநிதியைக் கொண்டு 7.5 லட்ச ரூபாய் முதலீடு செய்துள்ளனர்.

2022-ம் ஆண்டில் செயற்கை நுண்ணறிவுத் துறை 126 பில்லியன் டாலர் மதிப்பைக் கொண்டிருக்கும் என்கிறது ஆலோசனை நிறுவனமான McKinsey. இந்தியாவில் இந்தத் துறை இன்னும் வணிக ரீதியான செயல்பாடுகளில் சிறப்பிக்கவில்லை. இந்தியாவில் இயந்திரக் கற்றல் தற்போது 8 பில்லியன் டாலர் ஏற்றுமதி சந்தை மதிப்பைக் கொண்டுள்ளது.

”ஸ்டார்ட் அப்கள் வடிவமைக்கும் வணிக மாதிரியானது வளர்ச்சிக்கு உதவும் வகையிலும் சந்தையின் அனைத்து பகுதிகளுக்கும் ஏற்ற தயாரிப்பை வடிவமைப்பதிலும் நீண்ட கால ஒப்பந்தங்களைக் கொண்டதாகவும் இருக்கவேண்டும்,” என்கிறார் ஆக்சிலர் வென்சர்ஸ் சிஇஓ வி கணபதி.

Articbot கண்ணூரில் அமைந்துள்ளதால் இதன் கட்டணம் மிகவும் குறைவு. இதன் பொறியாளர்கள் 107 மொழிகளில் செயல்படும் விதத்தில் உருவாக்கியுள்ளனர். மேலும் விரைவாக நொடிகளில் சந்தேகங்களை தீர்த்துவைக்கும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறது. மேலும் முக்கிய தீர்வுகளை உடனடியாக வழங்க வாடிக்கையாளர்களுக்கான டேஷ்போர்டை உருவாக்குகிறது.

”சில காலங்களுக்குப் பிறகு வாடிக்கையளர்களின் சந்தேகங்களுக்கு எங்களுடைய தளம் தீர்மானமெடுக்கும்,” என்றார் ராகுல். 

Articbot வாடிக்கையாளர் அழைப்பின் தரவுகளைக் கொண்டு வாடிக்கையாளர்களுடன் பணியாற்றுகிறது. முந்தைய பேட்டர்ன்களின் அடிப்படையில் சந்தேகங்களுக்கு விடையளிக்க பாட்டிற்கு பயிற்சியளிக்கிறது.

இந்நிறுவனம் ரோபோடிக் ப்ராசஸ் ஆட்டோமேஷன் (RPA) பிரிவில் தாக்கத்தை ஏற்படுத்த விரும்புகிறது. 2024-ல் உலகளாவிய RPA சந்தை மதிப்பு 8.75 பில்லியன் டாலரை எட்டும் என ரிசர்ச் அண்ட் மார்கெட்ஸ் தெரிவிக்கிறது. நிறுவனங்கள் இந்த தீர்வுகளை செயல்படுத்தி வருவதால் தெளிவு, நம்பகத்தன்மை, பொருந்தும் தன்மை போன்றவற்றில் RPA முதிர்ச்சியடைந்து வருகிறது.

ஆங்கில கட்டுரையாளர் : விஷால் கிருஷ்ணா

Add to
Shares
11
Comments
Share This
Add to
Shares
11
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக