பத்து ரூபாயில் பிராண்டிங் பாடம்!

YS TEAM TAMIL
18th Feb 2016
25+ Shares
 • Share Icon
 • Facebook Icon
 • Twitter Icon
 • LinkedIn Icon
 • Reddit Icon
 • WhatsApp Icon
Share on

ஹாரன் ஒலி கேட்டதுமே ரமேஷ் வந்துவிட்டார் என தெரிந்து கொள்வோம். அடுத்த ஒரு நிமிடத்தில் பர்பிள்மாங்கோ ஊழியர்கள் அனைவரும் வாயில் அருகே வந்துவிடுவார்கள். பிளாஸ்டிக் கூடைகளில் இருந்து பால், டீ மற்றும் சூடான நீரை எடுத்து சூடான, சுவையான பாணங்களை தயாரிக்கிறார்.

ஒவ்வொரு பாணத்தையும் தனக்கே உரிய பாணியில் வழங்குவது தான் அவரது பாணி.

- டீ கொஞ்சம் ஸ்டிராங்காக இருக்கிறது என நினைப்பவர்களுக்கு அவர் பாலை கலந்து கச்சிதமான சுவையில் வழங்குவார்.

- லெமன் டீ எப்போதுமே மிண்ட் சுவையுடன் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

- காபி பிரியர்களுக்கு இனிப்புடன் ஆனால் அளவுக்கு அதிகமாக போகாமல் இருக்கும்.

ஒரு தேர்ச்சி பெற்ற பார் ஊழியர் போல அவர் தனது பிளாஸ்க்கை சரியான உயர்த்தில் வைத்து ஆற்றி ஒவ்வொரு கோப்பையிலும் நுரை பொங்க அளிப்பார். பத்து ரூபாய்க்கு அளித்தாலும் ரமேஷ் எளிமையான வர்த்தகம் மூலம் உச்சபட்ச வாடிக்கையாளர் திருப்தியை அளிக்கிறார். அவரிடம் இருந்து முக்கிய பாடங்களையும் கற்றுக்கொள்ளலாம்.

image


வாடிக்கையாளர்களை அறிதல்: ரமேஷ் ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பங்களையும் அறிந்திருக்கிறார். அவர் ஒவ்வொருவரும் விரும்பும் இனிப்பின் அளவை அறிந்திருப்பதோடு, அதை வழங்குவதில் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்.

உறவுகளுக்கு முக்கியம்: ரமேஷ் அனைத்து ஊழியர்களுடனும் சுமுகமான உறவை கொண்டிருக்கிறார். அங்கே இல்லாதவர்கள் பற்றி விசாரிக்க மறக்க மாட்டார். பாதுகாவலருடன் விளையாடுவார் என்றாலும் யாருடன் எப்படி பழக வேண்டும் என அறிந்திருக்கிறார். ஒவ்வொரு உறவும் மாறுபட்டது என்பதையும் உணர்ந்திருக்கிறார்.

நேரம் முக்கியம்: ஒவ்வொரு இடத்திலும் 10 நிமிடங்களுக்கு மேல் செலவிடுவதில்லை. அவரைப்பொருத்தவரை நேரம் தான் பணம். ஒவ்வொரு பிளாஸ்கும் ஒரு நிறம் என்பதால், அவற்றின் உள்ளே என்ன இருக்கிறது என பார்க்காமலேயே நிறத்தை வைத்தே சரியாக பயன்படுத்துவார். இதனால் அவரால் விரைவாக செயலாற்றி ஒவ்வொரு முறையும் 200 ரூபாயை சம்பாதிக்க முடிகிறது.

நம்பகத்தன்மை: ஒருமுறை இடைவிடாமல் மழை பெய்து கொண்டிருந்தது. நாங்கள் எல்லோரும் சூடான காபிக்கு ஏங்கினோம். ஆனால் ரமேஷ் மழையில் வரவாய்ப்பில்லை என நினைத்தோம். அதற்கு மாறாக கொட்டும் மழையில் அவர் வழக்கமாக வருவது போலவே வந்து நின்று வியக்க வைத்தார்.

பிராண்ட் அபிமானம்: ஒவ்வொரு முறையும் எதிர்பார்த்த அளவு திருப்தியை அளிப்பதாலேயே மற்ற தேர்வுகளை எல்லாம் விட ரமேஷை விரும்புகிறோம். காபி குடிக்கும் எண்ணம் இல்லாத நாட்களில் கூட அவருக்காக வாங்கு பருகுவோம்.

அவர் செய்வது எளிதாகவும் அவருக்கு லாபம் அளிப்பதாக இருந்தாலும் கூட ரமேஷ் உருவாக்கி இருக்கும் பிராண்ட் அபிமானத்தை அத்தனை எளிதாக பெற்றுவிட முடியாது என உணர்வது அவசியம். ஒவ்வொரு முறையும் அவர் கொஞ்சம் கூடுதலாக வழங்குகிறார். சூடான காபியோடு கொஞ்சம் ஊக்கத்தையும் அல்லவா அவர் அளித்துவிட்டுச்செல்கிறார்!.

ஆக்கம்; ரேஷ்மா தாமஸ் | தமிழில்;சைபர்சிம்மன் 

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்

தொடர்பு கட்டுரைகள்:

உங்கள் வர்த்தகம் வளர கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!

தொழில் என்பது உற்பத்தியே தவிர லாபம் அல்ல!


25+ Shares
 • Share Icon
 • Facebook Icon
 • Twitter Icon
 • LinkedIn Icon
 • Reddit Icon
 • WhatsApp Icon
Share on
Report an issue
Authors

Related Tags