பதிப்புகளில்

தைர்யா புஜாராவின் படையெடுப்பு : பிலடெல்பியா முதல் மொசாம்பிக் வரை; மலேரியா முதல் எச்ஐவி வரை

6th Nov 2015
Add to
Shares
1
Comments
Share This
Add to
Shares
1
Comments
Share

25 வயது தைர்யா புஜாரா, அமெரிக்காவில் அவரது வேலையை முதல் நாளே ராஜினாமா செய்தார். அன்று அவர் எடுத்த முடிவு, வீரமானது என்று சிலர் கூறினாலும், அதன் தாக்கம் அதிகம். ஜூலை 02 ,2012 ஆம் ஆண்டு, மற்றவர்களை போன்று, தனது மேல் படிப்பை முடித்துவிட்டு, அமெரிக்காவில் ஐடி துறையில் ஒரு பணியில் இணைந்திருந்தார். ஆனால் முதல் தினமே, தனது பணியை முடித்து விட்டு, 5.30 மணிக்கு தனக்கு தன் நிறுவனம் தந்திருந்த சொகுசு அறைக்கு அவர் வந்த போது, தனக்கு இது போதும் என்ற முடிவை எடுத்தார். மிக சீக்கரம் என நினைத்தாலும், அம்முடிவே இறுதியானது என்பதில் அவர் உறுதியாக நின்றார்.

image


மும்பை நகரத்தில் பிறந்து வளர்ந்த புஜாரா, தனது 19வது வயதிலேயே தொழில் முனைவுக்குள் நுழைந்திருந்தார். அப்போது அவர் கல்லூரி முடிக்கவில்லை. அவரது நிறுவனம் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு, பழைய புத்தகங்களை விற்கும் ஒரு மின் வணிகமாகும். 2009 ஆம் ஆண்டு அவரது நிறுவனம், எகனாமிக் டைம்ஸ் பத்திரிக்கை நடத்திய, "பவர் ஆஃப் ஐடியாஸ்" என்ற நிகழ்ச்சியில் தேர்வு பெற்றது.

"என் வாழ்வில் முதன் முறையாக "எலிவேட்டர் பிட்ச்", மற்றும் பிசினஸ் பிளான் போன்ற வார்த்தைகளை நான் கேட்டேன். எனக்கு இன்றும் நினைவு இருக்கின்றது. நாங்கள் அந்த நிகழ்ச்சிக்கு வந்த போது, வாயிற்காவலர், எங்களை கல்லூரி மாணவர்கள் என்றே கருதினார்கள். எங்களை தொழில் முனைவோராக அவர்கள் ஏற்கவில்லை" என்கிறார் புஜாரா. ஆனால் அவரது நிறுவனம், விரைவில் மூடுவிழா கண்டது. முக்கிய நபர்கள் ஒன்றன் பின் ஒன்றாக அமெரிக்க பறந்ததே அதற்கு காரணம்.

ஆனால் தனது முதல் முயற்சி தோற்றது என்பதை ஒத்துக்கொள்வது, முதலீட்டாளர்களை கவர தனக்கு உதவுவதாக அவர் கூறுகிறார். எதை செய்யக்கூடாது என்பதை இவர் அறிவார் என்று அவர்கள் மனதில் கருத்து ஏற்படும் என்கிறார் அவர்.

19 வது வயதில், தொழில் முனைந்த தன்னால், 9 முதல், 5 மணி வரை ஒரே மாதிரியான வேலையில் அமர முடியாது என்பதை அறிந்திருந்தார் புஜாரா. தனக்கு 15 வயது இருந்த போது, தனது தந்தை, தன்னிடம் ஒரு வருடத்திற்கு 75 லட்சம் வருமானம் பெற்ற ஒரு ஐஐடி பொறியாளரை பற்றி கூற, இவர் தனது தந்தையிடம், "அவரை போன்ற ஒருவரை எனது நிறுவனத்தில் பணி அமர்துவதே என் குறிக்கோள்" என கூறியுள்ளார்.

டிரெக்செல் முதல் மொசாம்பிக் வரை

தனது வேலையை முதல் நாள் ராஜினாமா செய்து விட்டு, தான் படித்த டிரெக்செல் பல்கலையின் டீனை தொடர்பு கொண்டார். அங்கு, சர்வதேச படிப்பை நிறுவ முடிவெடுத்திருந்தார். மேலும் தனக்கு சம்பளம் வேண்டாம் என்றும், அந்த படிப்பை நிறுவுவதே தனக்கு தேவை என்றும் அவர் கூறியுள்ளார்.

image


மேலும் அவர் பணம் மற்றும் மருத்துவ காப்பீடு இன்றி எப்படி தன் நாட்களை கடத்துவார் என கேட்டபோது, தொழில் முனைவின் போது, இது போன்ற தடைகள் ஏராளம். எனவே அவை பற்றி தான் வருந்தப்போவது இல்லை எனக் கூறியுள்ளார். 

மேலும் அவர் கூறியது, "சர்வதேச படிப்பினை நிறுவுவது, அவரின் கனவை நிஜமாக்க அவருக்கு ஒரு வழியாக பட்டது. அதற்காக முதலீட்டாளர்களை சந்தித்தார். அதில் ஐநா சபையை சார்ந்தோரும் அடக்கம். அவ்வாறு ஒரு சந்திப்பின் போது, மிக முக்கியமான ஒரு கேள்வி அவர் முன் வைக்கப்பட்டது.

"24 வயதான நீங்கள், ஒரு தனியார் பல்கலைகழகத்தில், சர்வதேச படிப்பினை நடத்தி வருகுறீர்கள். ஆனால் இது வரை ஆப்ரிக்கா சென்றது இல்லை என்று கூறுகிறீர்கள். எனவே நீங்கள் நடத்தும் சர்வதேச படிப்பில், உங்கள் மீது நம்பிக்கை வைத்து எவ்வாறு நான் எனது பணத்தை, மற்றும் குழந்தைகளை ஒப்படைப்பது??" இதுவே அந்த கேள்வி.

புஜாரா அந்த கேள்விக்கான விடை தன்னிடம் இல்லை என்பதை உணர்ந்தவுடன், அவர் செய்தது, சர்வதேச படிபிற்கான தளமாக அவர் வைத்திருந்த இடத்திருக்கு சென்றதுதான். அது மொசாம்பிக். ஆப்ரிக்காவில் போரினால் சின்னாபின்னமான ஒரு தேசம். "வரை படத்தில் அந்த இடம் எங்கு இருந்தது என்பதை நான் கண்டுபிடிக்க வேண்டி இருந்தது" என்கிறார் புஜாரா. ஏன் என்றால், வாழ்வில் ஒரு முறை கூட அங்கு செல்லும் எண்ணம் முன்பு அவருக்கு இல்லை.

மொசாம்பிக்கில் க்வாம்பாவாக

அங்கு சென்றவுடன் அவர் சந்தித்த முதல் தடை அங்கு பேசப்பட்ட மொழி. பின்பு மிகவும் சிரமப்பட்டு, போர்சுகீஸ் மொழி பயின்று, அங்கு இருந்த மக்களுடன் ஒன்ற முயன்றார். 5 மாதங்களுக்கு, ஒரு மருத்துவமனையில், பயோ மெடிக்கல் பொறியாளராக பணி[புரிந்தார்.

அந்நேரத்தில், அவர் முக்கிய பிரச்சனையாக கருதியது, அங்கு இருந்த மருத்துவ உபகரணங்களை, மக்களால் உபயோகிக்க இயலவில்லை. அவற்றின் மதிப்பு, 50,000 முதல் 80,000 அமெரிக்க டாலர்களாக இருந்தது. எனவே, அவற்றை உபயோகிக்க அங்கு இருந்த மக்களுக்கு அவர் கற்றுகொடுத்தார். களத்தில் இறங்கி, முதல் உபகரணத்தை தானே சரி செய்தார். அது சிறிய பகுதி என்பதால் வாய் வார்த்தையாக ஒரு இந்தியன் உபகரணங்களை சரி செய்யும் தகவல் வேகமாக பரவியது.

image


"நான் அங்கு அழைப்பின் பேரில், நேரில் சென்று உபகரணங்களை சரி செய்யும் மனிதனானேன். மக்கள், அவர்கள் வீட்டில் இருந்த மின்னணு உபகரணங்களை, சரி செய்ய என்னை அழைத்தனர். அங்கு எனது படிப்பு உதவவில்லை. நான் அவர்கள் கிராமத்தில் வசிக்கும் ஒருவனானேன்".

விரைவில் அவர்களுள் ஒருவராக இவரை ஏற்று, அவருக்கு "க்வாம்பா" என்ற பெயரும் தந்துள்ளனர்.

மொசாம்பிக்கில் டெட் கருத்தரங்கு நடத்தியது

அந்த நாட்டில் நடந்த முதல் டெட் கருத்தரங்கை புஜாரா நடத்தினார். அவர் அதை நடத்தியதற்கு ஒரே காரணம், அங்கு வெளிஉலகிற்கு தெரியாமல் இருந்த, ஆய்வாளர்கள், மற்றும் கண்டுபிடிப்பாளர்களை வெளியே கொண்டு வருவதே. " அவர்கள் அசாத்தியமானவர்களாகவும், அறிவாளிகளாகவும் இருந்தனர். அவர்களுக்கு நாம் கற்று தரவேண்டியது என்பது எதுவும் இல்லை. அவர்கள் கதைகளை பகிர ஒரு தளம் தந்தால் போதும்" என்கிறார் புஜாரா.

அந்த நிகழ்ச்சி ஒரு பெட்டியினுள் நிகழ்ந்துள்ளது. அங்கு நிகழ்ச்சியை நடத்துவதற்காக, டெட் ஆட்களிடம் புஜாரா பேச, அவர்கள், 3000 அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள பொருட்களை, ஒரு பெட்டியில், வைத்து அனுபியுள்ளனர். ஆனால் சுங்க சாவடி சோதனையின் போது அந்த பெட்டி தொலைந்துவிட்டது. ஆனால், அதற்காக நிகழ்ச்சி தடைபடவில்லை. தென்னை மற்றும், வாழை இலைகளை வைத்து, டெட் என்ற வார்த்தைகளை அமைத்து, வந்தவர்களுக்கு, பாட்டில் குடிநீர் மற்றும் பார்லே-ஜி பிஸ்கட் கொடுத்து, நிகழ்ச்சியை முடித்துள்ளனர். அதற்கு தேவை பட்ட புகைப்பட கருவிகளை உள்ளூரிலேயே ஏற்பாடு செய்துள்ளனர்.

Y சென்டர் துவக்கம்

மொசாம்பிக்கில், சங்கடங்களின் ஆணிவேரை ஆராய்ந்து புஜாரா புரிந்து கொண்டுருந்த போது, டிரெக்செல் பல்கலைகழகத்தின் சர்வதேச படிப்பிற்கு, சில சங்கடங்கள் வந்துள்ளன. புஜாரா மீண்டும் அங்கு வந்த போது, அந்த படிப்பினை பல்கலைகழகம் நிறுத்தியிருந்தது. இதற்கு காரணமாக புஜாரா கூறுவது, அங்கு பொறுப்பு ஏற்க யாரும் இல்லை என்பதே.

மேலும் அந்த படிப்பின் தாக்கம் சரியாக அளக்கப்படவில்லை. இந்த நிகழ்வே, புஜாராவை தனது அடுத்த தொழில் முனைவை நோக்கி நகர்த்தியது. அது Y சென்டர்.

என்ன செய்யும் Y சென்டர் :

சர்வதேச தளங்களுக்கு, மாணவர்களை ஆக்கபூர்வமான காரியங்களை நிகழ்த்த Y சென்டர் அழைத்துச்செல்லும். "நீங்கள் இந்த நிகழ்வின் ஒரு அங்கமாங்க இருந்தால், உங்கள் மீது அதிகமான பொறுப்பு இருக்கும். நீங்கள் செய்யும் வேலைகள் அனைத்திற்கும் நீங்கள் பொறுப்பு மற்றும் அவற்றை முறையாக ஆவணப்படுத்தி, எங்களோடு பகிர வேண்டும். நீங்கள் செய்வது சமூகத்திற்காக என்பதால், அதற்காக பொறுப்பு ஏற்பது மிக முக்கியம் என்கிறார் புஜாரா.

image


சில மாதங்கள் எடுத்து திட்டங்கள் தீட்டிய பிறகு, ஒரு சிறிய குழு ஒருங்கிணைத்து, Y சென்டரை, அதிகாரபூர்வமாக, பிலடெல்பியா மாகணத்தில் 2014ல், பதிவு செய்தார் புஜாரா.

அவரிடம் ஒரு அமெரிக்க கம்பெனி இருந்தாலும், அவர் சந்தித்த முக்கிய சவால், அவரது மாணவ கடவுசீட்டு காலாவதி ஆவது தான். எனவே அங்கு இருந்த பல்கலைகழகங்களில், சிறப்பு பேராசிரியராக சிறப்புரை ஆற்ற ஆரம்பித்தார். முதன் முதலில் அவரை சிறப்புரை ஆற்ற அழைத்தது, " தி வார்டான் ஸ்கூல்" ஆகும்.

மேலும் Y சென்டர் ஆரம்பித்து, அங்கு இருந்த மற்ற பல்கலைகழகங்களை அணுகியபோது, "முதலில் அவர்கள் கூறியது, அவர்கள் அலுவலகத்தை விட்டு வெளியே செல்லுமாறுதான்" என்று சிரிகின்றார் புஜாரா. அதற்கு காரணம் அவர் அத்துறையில் பட்டபடிப்பு பயிலவில்லை என்பதே. எனவே மற்றவர் நம்பிக்கையை பெற, விவரம் அறிந்தவர்களை தன் அணியில் சேர்க்க முடிவு செய்தார் புஜாரா. அவரது செயல்களை பார்த்து, ஐநா சபையின் ஒசிஹச்எ பிரிவில் செயலராக இருந்த, டெண்சாய் ஆஸ்பா, இவரது நிறுவனத்தின் ஆலோசகராக இணைந்தார்.

மேலும் அவர் தனது நிறுவனத்தை நடத்த இடம் தந்த பேராசிரியர் மைகல் க்லேசர், நிறுவன இயக்குனராக இணைந்தார். ஆதித்ய பிரம்மபட், நியூயார்கில் படித்து பட்டம் பெற்ற மும்பை நபர், இயக்குனராக நிறுவனத்தில் இணைந்தார்.

இவை ஒன்றன் பின் ஒன்றாக நிகழ, பென்சில்வேனிய மற்றும் டிரெக்செல் பல்கலைகழகங்களில், சர்வதேச படிப்பினை ஏற்க ஆரம்பித்தனர். மேலும் "பில்லி- டூகுட்டர்" என்ற விருதும், அதோடு, 30,000 அமெரிக்க டாலர் அவருக்கு பரிசாக கிடைத்தது. அதனை, நிறுவனத்தின் விளம்பரத்திற்காக உபயோகிக்க முடிந்தது.

"அந்நேரத்தில், முதல் நாளில் வேலையை ராஜினாமா செய்தது, குடியேற்றம் சமந்தமாக எனக்கு இருந்த சவால்கள் ஆகியவை பிலடெல்பியா நாளிதழில் கட்டுரையாக வர, அது நகரத்தில் சில பெரியமனிதர்களின் கவனத்தை ஈர்த்தது. அதனால் விரைவிலேயே, அங்கு நான் நிறுவனத்தை நிறுவ, ஒரு இடம் கிடைத்தது" என்கிறார் புஜாரா.

மலேரியா மற்றும் கர்ப்பத்துகாக ஒரு செயலி :

Y சென்டர் நிறுவிய பின்பு, மொசாம்பிக் சென்று அங்கு மலேரியாவோடு போராட வேண்டும் என்பதை புஜாரா உணர்ந்திருந்தார். இம்முறை அதற்காக அவர் ஒரு செயலியை உருவாக்கினர். சர்வதேச உதவி இருப்பதால் மருந்துகள் மற்றும் மருத்துவ சோதனைகள் மக்களுக்கு இலவசமாக கிடைகின்றன. அவர்கள் மருத்துவமனை சென்றால் போதும். ஆனால் படிப்பின்மை மற்றும் மருத்துவ உதவி மையங்கள் தொலைவில் இருக்கும் காரணத்தால் அவர்கள் செல்வதில்லை, என்கிறார் புஜாரா.

அவர்கள் கைவைத்தியம் வைத்திருந்தனர் .மேலும் மலேரியா பற்றி அவர்கள் அறியவில்லை. எனவே இறப்போர் எண்ணிக்கையும் அதிகமாக இருந்தது. அப்போது யாரோ கூறியது என் நினைவிற்கு வந்தது. "மூன்று விஷயங்கள் எப்போதும் மொசாம்பிக்கில் இருக்கும். அவை : தொலைபேசி, கோகோ கோலா புட்டி, கடவுள் மீதான நம்பிக்கை." மேலும், அங்கு தண்ணீர் இல்லாத இடங்களில் கூட உங்களுக்கு கோகோ கோலா கிடைக்கும் என்று வருத்ததோடு கூறுகிறார் புஜாரா.

எனவே தற்போது புஜாரா செய்ய வேண்டியது ஒரு செயலியின் உருவாக்கம் மட்டுமே. அனைவரிடமும் தொலைபேசி இருக்கும் என்றாலும், செயலியை தரவிறக்கம் செய்து, உபயோகிக்க மக்களுக்கு தெரியாது என்பதால் அதை முன்னரே தொலைபேசியில் வைத்து மக்களிடம் கொடுக்க ஆரம்பித்தனர். இதன் மூலம் மக்கள் ஒரு எண்ணிற்கு குறுந்தகவல் அனுப்பினால், அது மருத்துவமனைகள் மூலம், மருத்துவ உதவி குழுக்களுக்கு சென்று அவர்கள், சம்மந்தப்பட்ட நோயாளியை காப்பாற்ற விரைவார்கள்.

நான் நம்பிக்கையை உருவாக்க நினைத்தேன். ஏன் என்றால் , ஆப்ரிக்காவில் வளர்ந்த நாடுகளில் இருந்து வருவோர் மீது நம்பிக்கை இருப்பதில்லை. அவர்கள் நினைப்பது, நாம் சுற்றுள்ளாவாகவே அங்கு செல்கிறோம் என்று. ஆனால் இந்த குறுந்தகவல் செயலியை உருவாக்கிய பின்பு, உதவி தேவைபட்ட நோயாளிக்கு உதவி சேர்ந்ததா, இல்லையா என்பதை எங்களால் தொடர்ந்து கண்காணிக்க முடிந்தது என்கிறார் புஜாரா.

தற்போது இந்த செயலி, தாய் மூலம் குழந்தைக்கு எச்ஐவி பரவுவதை தடுக்கும், ஐநா சபையும் இந்த முயற்சிக்கு உதவுகிறது. மேலும் "மொசாம்பிக்கில், கர்ப்பம் தரிக்கும் எச்ஐவி பாதிக்கப்பட்ட தாய்மார்கள் அங்கு நிலவும் சூழ்நிலை மற்றும் பழக்கங்கள் காரணமாக அதை வெளியில் கூறுவதில்லை. அது வெளியே தெரியவரும்போது, நேரம் அதிகமாகிவிடுகிறது.

கர்ப்பம் தரிக்கும் பெண்கள், மிக முன்னதாகவே சோதனைகளுக்கு செல்ல வேண்டும். தாய் மூலம் எச்ஐவி குழந்தைக்கு பரவுவதை தடுக்க, இந்த செயலி மூலம் பெண்கள், சுகாதார நிலையங்களுக்கு நேரடியாக தகவல் அனுப்ப முடியும். இதன் மூலம் அவர்கள் அடையாளம் பாதுகாக்கப்படும். இதை அவர், மலேரியா நோயாளிகள் மற்றும் கர்ப்பிணி பெண்களின் ஊபர் என்கிறார்.

வருங்காலத் திட்டம்

தற்போது Y சென்டர் , மொசாம்பிக்கின், சுகாதாரத்துறை அமைச்சகத்தோடும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சகத்தோடும் இணைந்து பணியாற்றி வருகின்றது. அவர்களின் உதவியோடு, அமெரிக்கவில் உள்ள 4 பல்கலைகழக மாணவர்களை, மொசாம்பிக் வந்து, இங்கு உள்ளவற்றை உணர்ந்து, மாற்றம் உண்டாக்கும் வகையில் பணிபுரிய வாய்ப்பு ஏற்படுத்தி தருகின்றது. மேலும் புஜாரா, உலக பொருளாதார மன்றத்தின் பிலடெல்பியா மாகாண, அத்தியாயத்தில் உறுப்பினராக உள்ளார்.

மேலும், பிலடெல்பியா, நியூ டென்வர், ஆகிய இடங்களில் உள்ள பல்கலைகழகங்களில் இவர் இருபத்தைந்திர்க்கும் மேற்பட்ட சிறப்புரை ஆற்றியுள்ளார். அவற்றில் மொத்தமாக 800 மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். மேலும் மைக்ரோசாப்ட்டோடு இணைந்து, நகர அளவில், ஒரு ஹேக்கத்தான் ஒருங்கிணைத்துள்ளர்.

பிலடெல்பியா பிசினெஸ் ஜெர்னலின், அட்டை பகுதியில் இவர் புகைப்படம் இடம்பெற்றதோடு, இவருக்கு ஓ1 ஏ விசாவும் வழங்கப்பட்டுள்ளது. அந்த வகை விசா அசாதாரண திறமைகள் உடையவர்களுக்கு மட்டும் வழங்கப்படும் விசாவாகும்.

Add to
Shares
1
Comments
Share This
Add to
Shares
1
Comments
Share
Report an issue
Authors

Related Tags