பதிப்புகளில்

வீண்பொருளை வருமானம் ஆக்கி நிலையான நீடித்த முன்னேற்றத்திற்கு உழைக்கும் அம்ரிதா சாட்டர்ஜி!

வீண்பொருளில் வருமானம் – நிலையான நீடித்த முன்னேற்றத்திற்காக உழைக்கும் அம்ரிதா சாட்டர்ஜி

Sowmya Sankaran
11th Nov 2015
Add to
Shares
0
Comments
Share This
Add to
Shares
0
Comments
Share

கொல்கத்தாவில் இருக்கும் தெற்காசியச் சுற்றுச்சூழலுக்கான குழுமத்தின்(South Asian Forum for the Environment, SAFE) தலைவரான அம்ரிதா சாட்டர்ஜி குப்பை சேகரிப்பவர்கள், அதை வருமானமாக மாற்ற உதவுகிறார். அது எப்படி சாத்தியம் என நீங்கள் கேக்கலாம். இந்த முயற்சி திடக்கழிவுகளை அதன் தொடக்கத்திலேயே பிரித்து வகைப்படுத்தி, மறுசுழற்சி செய்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றி நிலையான சமுதாய, சுற்றுச்சூழல் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கிறது. சேரிவாழ் மக்களுக்கும், பொருளாதார விளிம்பு நிலையில் இருக்கும் பெண்களுக்கு காகிதக் கூழ் வினைப்பொருட்கள் செய்வதன் மூலம் வாழ்வாதாரம் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்.

image


இந்தமுயற்சி ஐ.நா சபையின் தட்பவெட்ப மாறுபாட்டுக் கழகத்தின் பரிசையும், டிசம்பரில் லிமா நாட்டின் பெருவில் நடைபெற்ற COP 20ன் 2014ஆம் ஆண்டிற்கான லைட்ஹவுஸ் ஆக்டிவிட்டி விருதையும் தட்டிச் சென்றுள்ளது.

இந்தியப் பெருநகரங்களில் திடக்கழிவு மேலான்மை சரிவர இல்லாமையால் குப்பைகள் இஷ்டத்திற்கு கொட்டப்பட்டு சுற்றுச்சூழலுக்கும் இயற்கை வளங்களுக்கும் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படுத்துகிறது. கொல்கத்தா மட்டும் ஒரு நாளைக்கு 5000 டன்கள் திடக்கழிவை வெளித்தள்ளுகிறது. 2010ல் SAFE நடத்திய ஒரு கணக்கெடுப்பில் நகர திடக்கழிவின் 86 சதவீதம் முறையற்ற, அறிவியல் பூர்வமற்ற முறையில் சேர்கிறது. நகரத்தின் ஏழைமக்களில் பாதிக்கு மேற்பட்டோர் இந்த குப்பைகளை சேகரித்து, பிரித்து அனுப்பும் வேலையில் ஈடுபடுவதால் அவர்கள் பெரும் ஆரோக்கியக் கேட்டிற்கு உள்ளாகிறார்கள். இந்த முறையற்ற சீராக பிரிக்கப்படாத ஊதியக் கொள்கையால் தரகுத் தொகையாக 2-5 சதவீதம் மட்டுமே ஊதியமாகப் பெறுகிறார்கள். அதற்குத்தான் நாங்கள் 2011ல் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த ஆரம்பித்தோம்.

image


இந்தத் திட்டம் கொல்கத்தாவின் தெருவிலும் சாலையோரங்களிலும் வாழ்பவர்கள் அந்த பொருளாதார, தட்பவெப்பம் மாறும் சுற்றுச்சூழல் உடைய ஒரு சூழலில் எப்படி வெற்றிகரமான தொழில்முனைவோராக மாறினர் என்னும் கதையைச் சொல்கிறது. இங்கு சுத்தமற்ற இடங்களில் வாழ்க்கை நடத்தும் பெண்களையும் அவர்கள் குழந்தைகளையும் வெறுத்து ஒதுக்குகிறார்களே தவிர அவர்களைப் பற்றி யாரும் பெரிய அளவில் அறிய முன்வரவில்லை. இந்தத் திட்டத்தின் மூலமாக தொழில்நுட்பமும் தொழிலுக்கான முதலும் மிகவும் தேவைப்படும் தொழில்முனைப்புள்ள பலரை கண்டெடுத்தோம். இது நகரத்தின் ஏழை பணக்காரன் என்னும் கண்ணோட்டத்தை முற்றிலும் மாற்றியது. இது நகரத்தின் திடக்கழிவிற்கு சூழலுக்கு உகந்த, ஏழைகளுக்கு ஏற்ற, பொருளாதார முன்னேற்றம் கொண்ட தீர்வைத் தந்தது. ஒருங்கிணைந்த நகராட்சியின் திடக்கழிவு மேலான்மையில் மறு உபயோகத்தையும் மறுசுழற்சியையும் உட்புகுத்தி சுற்றுச்சூழல் மாறுபடுதலையும், குப்பைமேடுகளுக்காக நிலங்கள் வீணாக்கப்படுதலையும் தவிர்க்கிறது. இந்தத் திட்டத்தில் ஈடுபடும் பெண்கள் “மறுசுழற்சி, வாழ்க்கையையும் வாழ்வாதாரத்தையும் நீட்டிக்கிறது” என்பதைப் புரிந்து கொண்டுள்ளனர். அது அவர்கள் பொருளீட்ட உதவுவதோடு மட்டும் நில்லாமல் எதிர்காலத்திற்காக அடுத்த தலைமுறைகயை நேர்த்தியாக வளர்க்கும் தாய்மார்கள் எனும் கௌரவத்தையும் கொடுத்துள்ளது.

image


அம்ரிதா சாட்டர்ஜியின் இந்த முயற்சிகள் 'க்ளீன் அப் தி வேர்ல்ட் ' என்னும் ஐ.நா சமையின் சுற்றுச்சூழல் திட்டத்தால் அங்கீகரிக்கப் பட்டுள்ளன. இந்தத் திடக்கழிவு மறுசுழற்சித் திட்டம் ஒரு நுண்பொருளாதார அமைப்பாகத் சேரிவாழ் மக்களைத் தொழில்முனைவோர் ஆக்குவதற்காகத் தொடங்கப்பட்டது. சமுதாயத்தில் ஒடுக்கப்பட்டவர்களான அங்கீகாரத்தை இது வழங்குகிறது. “இத்திட்டத்தை நாங்கள் சேரிகளில் உள்ளவர்களிடம் விளக்குவதில் இருந்து தொடங்கினோம். இது அங்கு இருப்பவர்கள் இத்திட்டதின் மேல் காட்டும் முனைப்பை அறியவும் உதவியது. முன்வந்தவர்களை பத்துப் பத்து பேர் கொண்ட குழுவாக மாற்றி அவர்களுக்கு காகிதக் கூழில் அன்பளிப்புப் பொருட்கள் செய்யச் சொல்லிக் கொடுத்தோம். அவர்களுக்கான வங்கிக் கணக்குகள் துவங்குவது மிகப்பெரிய சவாலாக இருந்தது, ஏனெனில் பெரும்பாலானோர்க்கு அடையாளமாக எந்த ஆவணமும் இல்லை. இந்த திட்டத்தின் அதிகாரிகளின் பொறுமையாலும் விடாமுயற்சியாலும் UCO வங்கி இந்த குழுக்களுக்கான வங்கிக் கணக்குகளை துவக்க ஒப்புக்கொண்டது. தேர்ந்த பயிற்றுனர்களைக் கொண்டு சந்தைப்படுத்துதல், தொழில்முனைவோருக்குத் தேவையான தகுதிகள், கணக்கு வழக்கு பார்த்தல், நிதி மேலாண்மை போன்றவை இந்த குழுக்களில் உள்ளோர்க்கு பயிற்றுவிக்கப்பட்டது. வீட்டிலிருந்து வேலை செய்ய விரும்பும் பெண்கள் இந்த வீண் காகிதங்களில் இருந்து அன்பளிப்புப் பொருட்கள் செய்யக் கற்றுக்கொண்டனர். சில பெருநிறுவனங்கள் அவர்களே தங்கள் இடத்தில் காகிதங்களை பிரித்துத் தர ஒப்புக்கொண்டனர், அவர்கள் அலுவலகங்களில் அவற்றைச் சேகரிக்க தனியே குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டன. குழுவில் இருக்கும் ஆண்களுக்கு இந்தக் காகிதங்களை பெருநிறுவனங்களில் சேகரிக்கப் போகையில் தன்னம்பிக்கையுடன் பேச, திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் அளிக்கப்பட்டன. இந்தக் குழுக்கள் தயாரித்த வினைப்பொருட்களைச் சந்தைப்படுத்த SAFE குழுமம் வணிகக் கண்காட்சிகளை, சமூக வலைதளங்களை, பெருநிறுவனங்களை அனுகியது. “இந்தத் திட்டம் முழுக்க முழுக்க பெண்கள் தலைமையில் அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மூலம் நடத்தப்பெறுகிறது” என அமிர்தா கூறுகிறார்.

இந்தத் திட்டத்தின் தலைவர் “இந்தத் திட்டத்தில் இருப்பவர்கள் பெரும்பாலும் இடைநிலைக் கல்வியோடு நிறுத்திவிட்டோ அல்லது படிப்பறிவு இல்லாமலோ இங்குள்ள குப்பைக்கூளங்களில் குப்பை சேகரிப்பவர்கள். இவர்கள் அனைவருமே வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழ்பவர்கள். குப்பை மேடுகளுக்கு அருகிலேயே வசிப்பவர்கள். இந்தத் திட்டத்தில் 350 குப்பை சேகரிப்பவர்கள் பணியாற்றுகிறார்கள். ரிஸால்வ் திட்டம் அவர்கள் முயற்சிகளை தொழில்நுட்பப் பகிர்வின் மூலமும் நிதியைப் பற்றிய புரிதலை ஏற்படுத்தியதன் மூலமும் ஒரு முறையான பொருளாதார சுழற்சிக்குள் கொண்டுவந்திருக்கிறது. பொருளாதார மேம்பாடு முன்பைவிட 35% கூடுதல் வருமானம் ஈட்டுவதில் தெரிகிறது. இதில் பங்குகொண்டிருக்கும் சுமார் 400 பேர் நுண்பொருளாதாரக் காப்பீட்டால் பாதுகாக்கப்படுகிறார்கள். டாடா ஏஐஜி நிறுவனம் இதற்கென சிறப்புக் காப்பீட்டுத் திட்டங்களைக் கொண்டுவந்தது. சூழலின் பார்வையில் இது திடக்கழிவை அதன் தொடக்கத்திலேயே பிரித்தலின் அவசியத்தை புரிய வைத்திருக்கிறது. அதனால் குப்பை மேடுகளால் ஆக்கிரமிக்கப்படும் நிலங்களும் சுற்றுச் சூழல் மாசுபாடுகளும் குறைந்திருக்கிறது” என்கிறார்.

பயனடைந்தவர்கள் குரல்

அலாவுதீன் ஷேக் என்னும் வீண்பொருட்கள் சேகரிப்பவர், இருபது வருடத்திற்கு முன் சுந்தரவனக் காடுகளில் இருந்து நகரத்திற்கு வேலைதேடி குடிபெயர்ந்திருக்கிறார். அவரைச் சார்ந்தவர்களை உயர்த்தியதற்காக அவர் இத்திட்டத்திற்கு நன்றி சொல்கிறார். “நான் ஒரு நாளும் பெருநிறுவனங்களுக்குள் சீருடையுடனும், புகைப்பட அடையாள அட்டையுடனும் நுழைவேன் என நினைத்துக்கூட பார்த்ததில்லை. இந்தத் திட்டம் உண்மையான முயற்சி ஒருவனை முன்னுக்குக் கொண்டுவரும் எனக் கற்றுக் கொடுத்திருக்கிறது. ஏபீஜே குழுமத்தில் இருந்து வாங்கிய விருது எனக்கு ஊக்கமளிக்கிறது” என்கிறார்.

அலாவுதீனைப் போலவே மாயா மண்டலும் இந்தத் திட்டத்தினால் பயனடைந்திருக்கிறார். அவர் கழிவு நீரில் மீன்பிடிக்கும் வேலையில் இருக்கையில் மாதம் வெறும் 750-1800 ரூபாய் சம்பாதித்தார். அந்த வேலைச் சூழலால் அவருக்கு தோல் நோய்களும், குடல் வியாதிகளும் வந்தன. இப்போது அவர் ஆரோக்கியமாக இருப்பது மட்டுமல்லாமல் இந்த காகிதக் கூழால் பொருட்கள் செய்வதன் மூலம் முன்பை விட ஐந்து மடங்கு அதிகம் சம்பாதிக்கிறார். தன் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் அளவு பொருளாதார சுதந்திரம் பெற்று, வங்காள மொழியில் எழுதவும் படிக்கவும் கற்றுக்கொண்டிருக்கிறார். “தலைமுறை தலைமுறையாக நாங்கள் கழிவு நீரில்தான் வேலை செய்துவந்தோம். ஓவியங்களையும் கைவினைப்பொருட்களையும் செய்வதன் மூலம் வாழ்வாதாரம் அமைத்துக்கொள்ள முடியுமென்றும், இந்த நாற்றமடிக்கும் கழிவுநீர் வேலையில் இருந்து விடுதலை பெறமுடியும் கனவிலும் எதிர்பார்க்கவில்லை. நாம் சேர்ந்து செய்தால் எதையும் செய்யலாம் என அக்கா(அம்ரிதா) சொல்கிறார். நாங்கள் இதை இந்தத் திட்டத்தில் இருந்து கற்றுக்கொண்டிருக்கிறோம். இன்னும் சிறப்பான வாழ்க்கை முறைக்கு முயற்சிப்போம்” என நம்பிக்கையுடன் கூறுகிறார்.

இந்தத் திட்ட்த்தின் வெற்றி SAFE குழுமத்தை ஈரக் கழிவுகள் எனப்படும் சமையலறைக் கழிவுகளைக் கொண்டு மண்புழு உரம் தயாரித்தல்(இதனால் குப்பை மேடுகளில் இருந்து வாயு வெளியேறுதல் குறையும் மேலும் இயற்கை விவசாயத்தை திறம்பட நடத்த முடியும்) மற்றும் மக்காத ப்ளாஸ்டிக் பாட்டில்களைக் கொண்டு வீட்டுத்தோட்டம் அமைத்தல் எனமேலும் சில திட்டங்களை துவக்க ஊக்குவித்திருக்கிறது.

Add to
Shares
0
Comments
Share This
Add to
Shares
0
Comments
Share
Report an issue
Authors

Related Tags