பதிப்புகளில்

சர்வதேச அளவில் இனம் சார்ந்த மக்களை இணைக்கும் ‘எத்னிசிட்டி’

Gajalakshmi Mahalingam
13th Nov 2015
 • Share Icon
 • Facebook Icon
 • Twitter Icon
 • LinkedIn Icon
 • Reddit Icon
 • WhatsApp Icon
Share on

தீபாவளிக்கான ஒன்றுகூடல் லண்டனிலோ அல்லது மும்பையில் உள்ள ஃபிரெஞ்ச் ரெஸ்டாரண்ட்டிலோ எங்கு நடந்தாலும், எத்னிசிட்டி அயல்நாடுகளில் இனம் சார்ந்த மக்கள், வாணிபத்தை கண்டுபிடிக்க உதவுகிறது.

ஒரு இந்திய மாணவரோ அல்லது அயல்நாட்டில் பணிபுரிபவரோ, அவர்கள் இருக்கும் இடத்தில், இந்தியாவின் உணவு, உடை, படக்காட்சிகள் மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் என தேடலில் ஈடுபடுவது சகஜம். ஏனெனில் இவை அனைத்தும் உங்களை நீங்கள் சொந்த ஊரிலேயே இருக்கும் அனுபவத்தை அளிக்கும். இது இந்தியர் மட்டுமின்றி பிற நாட்டவருக்கும், தேசிய இனம் என்ற நினைப்பையும் வீட்டில் இருப்பது போன்ற உணர்வையும் அளிக்கும்.

இதுவே எத்னிசிட்டி முழுமையடையச் செய்ய நினைப்பவை. இது இருப்பிடத்தை அடிப்படையாகக் கொண்ட இனம் சார்ந்தவர்களை சமூக வலைதளங்கள் மற்றும் சந்தையில் உள்ள உள்ளூர் சமூக மக்களையும் இணைக்கிறது, நீங்கள் இருக்கும் இடத்திலேயே. தேர்ந்தெடுக்கப்பட்ட இனம் சார்ந்த ஆர்வம் மற்றும் பல்வேறு வகைகளின் ஒருங்கிணைப்பு உள்ளிட்ட இருப்பிடம் சார்ந்த தகவல்களை இது செல்போன் ஹேண்ட்செட்டில் அளிக்கிறது. எத்னிசிட்டி சர்வதேச அளவில் ஒவ்வொருவருக்கும் ஏற்ற வகையில் அவர்கள் சொந்த ஊரில் இருக்கும் உணர்வை அளிக்க விரும்புகிறது.

image


நிறுவிய குழு

ஷாஜி தாமஸ் மற்றும் சோமகந்தன் சோமலிங்கம் இருவருமே இதை நிறுவியவர்கள். அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் வசித்த அனுபவங்களை வைத்து எத்னிசிட்டியை இந்த இருவர் கூட்டணி உருவாக்கியது.

ஷாஜி அமெரிக்கா மற்றம் ஜெர்மனியில் உள்ள நோக்கியா நிறுவனங்களில் 15 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். அவர் சர்வதேச நிறுவனங்களான ஃபேஸ்புக், கூகுள், பிபிசி, பி&ஜி, அடிடாஸ் மற்றும் நோக்கியாவுக்கான வாட்ஸ்அப் உள்ளிட்டவற்றின் பங்குதாரர்களோடு முக்கிய பொறுப்பை வகித்தவர். தற்போது இந்தியா மற்றும் ஜெர்மனியை அடிப்படையாகக் கொண்ட பல்வேறு நிறுவனங்களின் இணை நிறுவனராக அவற்றை தலைமையேற்று நடத்துகிறார். அவர் டல்லாஸ் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பட்டம் பெற்றவர்.

சோமகந்தன், ஜெர்மனியில் உள்ள டர்ம்ஸ்டட் தொழில்நுட்ப பல்கலைக்கழக அப்லைடு இயற்பியல் மையத்தின் முன்னாள் துணை ஆராய்ச்சியாளர். நோக்கியாவின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவில் அவற்றின் டிஸ்ப்பிளே மற்றும் தொடுதிரை மேம்பாட்டை கவனித்து வந்தார். அதே போன்று அவர் எண்ணிலடங்கா அறிவியல் பதிப்புகளின் ஆசிரியர் மற்றும் இணை ஆசிரியர். அவர் டர்ம்ஸ்டட் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் எம்எஸ்சி(MSc), இயற்பியலில் முனைவர் பட்டம் மற்றும் அப்லைடு ஆப்டிக்ஸ் பயின்றுள்ளார்.

பிரச்சனையை கண்டறிதல்

உலக அளவில் பல்வேறு மல்ட்டி நேஷனல் நிறுவனங்களுடன் கலந்துரையாடிய பின்னர், இந்த இருவரும் ஒரு வட்டத்தை உடைக்க இனம் சார்ந்த தகவல்களை எப்படி பயன்படுத்துவது என்று யோசித்தனர். இது அனைத்து இன மக்களும் சந்தித்த ஒரு பிரச்சனையாக இருந்தது, அவர்கள் தங்கள் சொந்த ஊரை விட்டு வேறு நவீன இடங்களுக்கும், பகுதிகளுக்கும் சென்றாலும் அவர்களுக்கு இது ஒரு சுமையாகவே இருந்தது.

இணையவழியில் இனம் சார்ந்த ஆர்வத்தை பகிர்ந்து கொள்வதற்கான நேரமும் குறிப்பிட்ட அளவிலேயே இருந்ததையும் அவர்கள் கண்டனர். தற்போது பல்வேறு இனம் சார்ந்த விஷயங்கள் இணையத்தில் கிடைக்கிறது அதில் கிடைக்கும் தகவல்கள் அனைத்தும் துண்டு துண்டாக உள்ளன. எத்னிசிட்டி அனைத்து கூறுபாடுகள் மற்றும் டிஜிட்டலை அடிப்படையாகக் கொண்ட இனம்சார்ந்த வணிகம் மற்றும் வணிகர்களை சர்வதேச மொபைல் சந்தை என்ற ஒன்றின் கீழ் கொண்டு வர திட்டமிட்டது.

தொழில்நுட்பத்தின் செயல்பாடுகள்

பயனாளர்கள் எளிமையான முறையில் இனம்சார்ந்த ஆர்வத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். அதோடு தங்கள் விருப்ப இடத்தை ஜிபிஎஸ் அல்லது நேரடியாகக் குறிப்பிட வேண்டும்(மேப்பை பயன்படுத்தி இடத்தை தேர்வு செய்யும் முறை உருவாக்கப்பட்டு வருகிறது). மேலும் அவர்களின் பிரிவை தேர்ந்தெடுக்க வேண்டும்: நிகழ்ச்சிகள், கடைகள், ரெஸ்ட்டாரண்ட்டுகள், இன்னும் பல., குறித்து தாங்கள் விரும்பிய நேரத்தில் இதன் மூலம் தகவல்களைப் பெறலாம்.

பயனாளர்கள் இனங்கள், வகைகள் மற்றும் இடங்களுக்கு ஏற்றாற் போல எளிதில் இடமாற்றம் செய்து கொள்ள முடியும். அதில் உள்ள புஷ் அடையாளம் உங்களுக்கு பிடித்த நிகழ்ச்சிகளை நீங்கள் தவறவிட்டு விடாமல் அதில் கட்டாயம் பங்கேற்க உதவும். வாட்ஸ் அப் மற்றும் இதர சமூக வலைதளங்கள் மூலம் இந்தத் தகவல்களை நீங்கள் உங்கள் நண்பர்கள் அல்லது குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்ளலாம். இதன் மைய வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டுக் குழு இந்தியாவின் திருவனந்தபுரத்திலும், ஜெர்மனியிலும் இயங்குகிறது.

சவால்கள்

“இதில் நாங்கள் சந்தித்த மிக முக்கியமான சவால் அந்தந்த புவிசார் பகுதிகளுக்கு ஏற்ற வகையில் உள்ள இனம் சார்ந்த மளிகைக்கடைகளைக் கண்டுபிடிப்பது. எங்களிடம் உள்ள எத்னிக் குழுக்கள் ஆஃப்லைனில் இதைப் பெறுகின்றனர். இந்தத் தகவல்களைப் பெற நாங்கள் பல்வேறு ஊடகங்கள் மற்றும் உள்ளூர் ஆதாரங்களை நாட வேண்டி இருந்ததாக” கூறுகிறார் ஷாஜி.

இந்த தடையை முறியடிக்க ‘உங்கள் வணிகம் மற்றும் நிகழ்ச்சிகளை இணையுங்கள்’ என்ற அம்சத்தை செயலியில் நாங்கள் இணைத்தோம். இதன் மூலம் வியாபாரிகளை ஒருங்கிணைக்க நாங்கள் நினைத்தோம்.

இந்த நிறுவனம் முப்பரிமாணத் தகவல்களை ஈட்டியது. சர்வதேச இடங்கள், இனங்கள் மற்றும் வகைகள்(நிகழ்ச்சிகள்,கடைகள்,இன்னும் பல.,) என்ற மேட்ரிக்ஸ்கள். இதற்கு பல்வேறு ஆதாரங்கள் தேவைப்பட்ட போதும், இந்த நிறுவனம் தற்போது வட அமெரிக்கா, ஐரோப்பா, தென் கிழக்கு ஆசியா மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளை மையப்படுத்தி செயல்படுகிறது. முக்கியமாக இந்தியர்களைப் போன்ற ஆசியர்களுக்காக பல வகைகள் நிகழ்ச்சிகள், கடைகள் மற்றும் ரெஸ்ட்டாரண்ட்டுகள் என்று செயல்படுகிறது. “இந்தியாவில் நாங்கள் சில ஐரோப்பிய இனம் சார்ந்த குழுக்களை ஆங்கிலம், பிரெஞ்ச் மற்றும் இத்தாலியன் என்று எங்களோடு இணைத்துள்ளோம்” என்று கூறுகிறார் ஷாஜி.

ஈர்ப்பு மற்றும் வளர்ச்சி

தொடக்கத்தில் அவர்கள் ஐஓஎஸ் மற்றும் ஆண்டிராய்டு தளங்களை அறிமுகம் செய்தார்கள். இருந்தபோதும் 2015 செப்டம்பர் முதல் இந்த நிறுவனம் எத்னிசிட்டி என்று பெயர்மாற்றம் செய்யப்பட்டது. அதே போன்று UI/UX புதுப்பித்து தங்கள் செயல்பாடுகளையும் புதிதாக மாற்றியது அதாவது புஷ் அடையாளம், ஒருங்கிணைந்த மேப் மற்றும் சமூக அடிப்படை தத்துவங்களில் மாற்றத்தை புகுத்தியது. அவர்கள் புதிய இனம் சார்ந்த சமூக அம்சங்களை அடுத்த கட்டத்தை நோக்கி எடுத்துச் செல்கின்றனர். இது அடுத்த மாதத்தில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

மறு அறிமுகத்திற்கு பிறகும் எத்னிசிட்டியை 1,500 பேர் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ்-ல் பதிவிறக்கம் செய்துள்ளனர். முந்தைய வெர்ஷனை 500 பேர் பதிந்துள்ளனர். தற்போது இந்தக் குழு தெற்கு ஆசிய வணிகர்களை வடஅமெரிக்கா, ஐரோப்பா மற்றும் தென்கிழக்கு ஆசியா, ஆஸ்திரேலியா போன்ற இடங்களிலேயே தழுவியுள்ளது. “போட்டியை சமாளிப்பதில் எங்களுக்கு இருக்கும் ஒரே ஒரு நன்மை பல்வேறு அமைப்புகள் மூலம் உள்ளூர் நெட்வொர்க்கை ஏற்படுத்தும் திறமையோடு, இதை உலகம் முழுவதிலும் உள்ள முக்கிய எத்னிக் மையங்களுக்கு பரப்புவதுமே” என்று சொல்கிறார் ஷாஜி.

தற்போது சொந்த தொடக்கத்திற்காக இந்தக் குழு ஐரோப்பா மற்றும் ஆசிய நாட்டுகளுடன் வளர்ச்சிக்கான நிதியை அதிகரிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்தக் குழுவிற்கு லாபத்தை ஈட்டும் இடத்தில் இருப்பது இன்- செயலி வழி விளம்பரமே. எதிர்காலத்தில் இருப்பிடம் மற்றும் எத்னிக் அடிப்படையிலான முன்எடுப்புகளை கட்டணத்தோடும் அதே சமயம் உள்ளூர் செயல்பாடுகளையும் மேற்கொள்ள திட்டமிட்டு வருகின்றனர்.

அவர்கள் சமூக அடிப்படைத் தத்துவங்களை எத்னிசிட்டியில் புகுத்தி வருகின்றனர், இது பயனார்கள் தாங்கள் தற்போது வசிக்கும் இடத்தை சுற்றியுள்ள தங்கள் சொந்த சமூகத்தை சேர்ந்த மக்களோடு இணைக்க உதவும்.

இணையதள முகவரி: EthniCiti

 • Share Icon
 • Facebook Icon
 • Twitter Icon
 • LinkedIn Icon
 • Reddit Icon
 • WhatsApp Icon
Share on
Report an issue
Authors

Related Tags

Latest Stories