பதிப்புகளில்

பயிர் அறுவடையை பெருக்க ஐஐடி மாணவர்கள் கண்டுபிடித்த புதிய தீர்வு!

YS TEAM TAMIL
30th Sep 2017
Add to
Shares
29
Comments
Share This
Add to
Shares
29
Comments
Share

மண் பரிசோதனை செய்யக்கூடிய விலை மலிவான ஒரு முறையை ஐஐடி ரூர்கி மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த கருவியின் மூலம் விவசாயிகள் தங்கள் அறுவடையை பெருக்கி, பாதிப்பில்லாமல் பயன் பெறமுடியும். Solving Nitrogen Application Problems (SNAP) என்ற தீர்வை உருவாக்கியுள்ள மாணவர்கள், அளவான பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்தும் வகையில் இதை வடிவமைத்துள்ளனர்.

இந்த கருவி, பூச்சிக்கொல்லி மருந்துகளால் பாதிக்கப்பட்டு, அறுவடையை குறைக்கும் முறையை சரிசெய்ய தயாரிக்கப்பட்டுள்ளது. இக்கருவியில் உள்ள ஆப்டிகல் இமேஜிங் ஆப், தேவையான மருந்துகளை செலுத்தி, அதிக அளவில் தரமான பயிர்களை பெற உதவும். அதில் பொருத்தப்பட்டுள்ள கேமரா, பயிரின் இலைகளை படமெடுத்தும் மண்ணில் உள்ள நைட்ரோஜென் அளவை கணித்து சொல்லும். 

image


குழுவில் பிடெக் மாணவர்கள் அன்கித் பகாரியா, அனிஷா கோதா மற்றும் உத்கர்ஷ் சேத் சக்சேனா மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர் ஏக்தீப் லுபானா இக்குழுவை வழி நடத்தினார்.

இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்திகளின்படி,

"அறியாமை மற்றும் கல்வியறிவின்மையே விவசாயிகள் தவறான நம்பிக்கையுடன் வழிநடத்தப்படுவதன் காரணமாகும். அதனால் சரியான மருந்துகளை பயன்படுத்தாமல் குறைவான அறுவடையை பெறுகின்றனர். SNAP ‘புத்திசாலித்தனமான மண் ஆய்வு’ செய்து விவசாயிகளுக்கு உதவ உள்ளது.” 

குழுவின் தலைவர் ஏக்தீப் கூறுகையில்,

”எங்கள் முக்கிய இலக்கே, குறைந்த விலையில் சுலபமான தீர்வை வழங்கி, தேவையான அளவு மட்டும் பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்த விவசாயிகளுக்கு வழிகாட்டவேண்டும் என்பதே.” 

சர்வதேச அளவில் விவசாய பயிர்களுக்கு அதிக தேவையும், பயன்பாடும் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது. இதை சமாளிக்க, ஒருவர் இருக்கும் நிலத்தில் அதிக பயிர் அறுவடையை பெறவேண்டும் அல்லது விவசாய நிலப்பரப்பை பெருக்கவேண்டும். இதில் முதலில் சொன்னதே சாத்தியமாக உள்ளது. அதனால் அதற்கான சரியான தீர்வு கருவிகளை உருவாக்கி, தொழில்நுட்ப வசதியுடன் பயிர்களை பெருக்கி, வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்ய முயல்கிறார்கள். 

SNAP ஆய்வு சுலபமாக கையாளப்பட்டு, சரியான மருந்து அளவை விவசாயிகள் பயன்படுத்த உதவுகிறது. இக்குழுவினர், 70 நாடுகளில் இருந்து வந்த 900 குழுவினர் இடையே சிறந்த குழுவாக தேர்வாகி, எரிக்சன் இன்னோவேஷன் விருதின் இந்த ஆண்டு வெற்றியாளராகி உள்ளது. 25000 யூரோக்களை பரிசாகப் பெற்றுள்ளனர் ஐஐடி ரூர்கி மாணவர்கள். 

கட்டுரை: Think Change India

Add to
Shares
29
Comments
Share This
Add to
Shares
29
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக