பதிப்புகளில்

டெக் 30 ஸ்டார்ட் அப்பான ஊர்ஜன் இந்திய வீடுகளுக்கு மலிவான சூரிய சக்தியை வழங்க விரும்புகிறது

மேற்கூரையில் அமைக்கக்கூடிய சூரிய தள அமைப்பான ஊர்ஜன் க்ளீன்டெக் வீடுகளுக்கும் வணிகங்களுக்கும் க்ளீன் மின் ஆற்றலை வழங்குகிறது

YS TEAM TAMIL
10th Oct 2017
Add to
Shares
5
Comments
Share This
Add to
Shares
5
Comments
Share

ஒரு வீடோ அல்லது அலுவலகமோ முற்றிலும் மின்சக்தி தொகுப்பு (Power grid) சார்ந்திராமல் ஆற்றலுக்கான தேவைகளை தாமே பூர்த்தி செய்துகொள்வது என்பது எதிர்கால கனவாக இருக்கலாம். ஆனால் அதை நிஜமாக்குகிறது ஊர்ஜன் க்ளீன்டெக் (Oorjan Cleantech).

வீடுகளுக்கும் அலுவலகங்களுக்கும் சூரிய மின் தகடுகள் அமைப்பது மற்றும் பராமரிப்பது தொடர்பான தீர்வுகளை வழங்குகிறது மும்பையைச் சேர்ந்த இந்த ஸ்டார்ட் அப். அதிகபட்ச மக்களிடையே சூரிய மின் ஆற்றலை கொண்டு சேர்க்கவேண்டும் என்பதே இந்த ஸ்டார்ட் அப்பின் நோக்கம். இதற்காக தேவையிருப்போருக்கு ஏற்றவாறு வடிவமைத்து நிதியுதவி பெறுவதற்கும் உதவுகிறது.

இந்நிறுவனம் சமீபத்திய தொழில்நுட்பத்தைக் கொண்டு செயல்படுவதால் ஆரம்பகட்ட முதலீட்டை குறைக்க உதவுகிறது. பசுமை சக்தி சார்ந்த விழிப்புணர்வு மற்றும் துறையின் புதுமைகள் போன்றவற்றால் விலை குறைந்து மக்கள் எளிதாக இதற்கு மாறுவதற்கு உதவுகிறது. மிகப்பெரிய சூரிய மின் தகடுகளை அமைக்கும் காலம் மலையேறிவிட்டது. சிறிய அளவிலான அமைப்புகள் இத்துறையில் அதிகரித்து வருகிறது. ஜன்னல்களில் ஒட்டக்கூடிய சூரிய ஷீட்டுகள் போன்ற புதுமையான வடிவமைப்புகள் விரைவில் சந்தையில் அறிமுகமாக உள்ளது.

முன்னாள் ஐஐடி மும்பை மாணவியான 41 வயதான ரோலி குப்தா மற்றும் 43 வயதான கௌதம் தாஸ் ஆகியோர் 2014-ம் ஆண்டு நவம்பர் மாதம் ஊர்ஜன் நிறுவனத்தை நிறுவினர். மும்பை. பூனே, பெங்களூரு, சென்னை ஆகிய நான்கு நகரங்களில் செயல்பட்டு வருகிறது. 39 வயதான ஹ்ருஷிகேஷ் தேஷ்பாண்டே முக்கிய குழுவில் செயல்பட்டு தனது தொழில்நுட்ப நிபுணத்துவத்தைப் பகிர்ந்துகொள்கிறார். ”க்ளீன்டெக், ஃபின்டெக், IoT ஆகிய மூன்று பிரிவுகளை உள்ளடக்கியது ஊர்ஜன். நாங்கள் ஒவ்வொருவரும் இந்த ஒவ்வொரு பிரிவின் பின்னணியையும் கொண்டவர்கள்.” என்று புன்னகைத்தவாறே குறிப்பிட்டார் ரோலி.  


image


யுவர் ஸ்டோரியின் டெக்ஸ்பார்க்ஸ் நிகழ்வில் தேர்ந்தெடுக்கப்பட்ட டெக்30 ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் ஒன்றான ஊர்ஜன் நிறுவனர் ரோலி அந்நிகழ்வில் குறிப்பிடுகையில்,

இது 2017-ம் ஆண்டு. இன்றும் மின் தடை பிரச்சனைகளை சந்தித்து வருகிறோம். சில நேரங்களில் பல மணி நேரம் மின் தடை ஏற்படுகிறது. நாங்கள் மக்களுக்கு ஒரு மாற்று மின் சக்தியை வழங்குகிறோம். மேலும் பெரும்பாலான மக்கள் க்ளீன் ஆற்றலை பயன்படுத்த விரும்புகின்றனர். ஆனால் அதற்கான வழிமுறைகள் தெரிவதில்லை. இங்குதான் உதவிக்கரம் நீட்டுகிறது ஊர்ஜன்.

பால்கனியில் சூரிய சக்தி ஆலை

ஊர்ஜனின் மேற்கூரை PV (photovoltaic) அமைப்புகளை மேற்கூரையிலோ அல்லது சுமார் 300 முதல் 500 சதுர அடி கொண்ட நிழலில்லாத பால்கனியிலோ நிறுவலாம். ஊர்ஜன் IoT சார்ந்த செயலி வாடிக்கையாளர் தங்களது அமைப்பின் செயல்திறனை தொடர்ந்து கண்காணிக்கவும் பிரச்சனைகள் அல்லது பராமரிப்பு குறித்து அறிவிப்புகளைப் பெறவும் உதவும். இந்த செயலி ஒருங்கிணைந்த தொழில்நுட்ப ஸ்டேக்கால் இயங்குகிறது. இதில் கிடைக்கும் தரவுகள் வழிமுறைகளை மேம்படுத்த உதவும்.

உதாரணத்திற்கு அமைப்பின் மீது ஏதாவது விழுந்தோ அல்லது அழுக்கு படிந்தோ அமைப்பு முழு திறனுடன் இயங்கவில்லையெனில் செயலி வாடிக்கையாளருக்குத் தகவலைத் தெரிவிக்கும். வாடிக்கையாளரின் பகுதியில் அருகாமையிருக்கும் சாத்தியக்கூறுகள் நிறைந்த வாடிக்கையாளர்களுக்கு பயன்பாடு மற்றும் திறன் குறித்த தகவல்கள் தெரிவிக்கப்படுவதால் அவர்கள் ஊர்ஜனில் இணைவது குறித்து தீர்மானிக்க உதவுகிறது. 


image


ரோலி கூறுகையில், “எங்களது IoT ஸ்டேக்கில் டைம் சீரிஸ் டேட்டாபேஸ் (time-series databases), எச்சரிக்கை செய்வதற்காக மெசேஜ் க்யூஸ் (message queues – Rabbit MQ), செயல்திறனை கண்காணிப்பதற்காக asynchronous task queues (Celery) உள்ளிட்டவை காணப்படும். Restful API சார்ந்த Djana செயலி ஆண்டிராய்ட் மற்றும் iOS frontends-ல் செயல்படுகிறது.

சூரிய ஆற்றல் உற்பத்தி அமைப்பின் அளவு மற்றும் விலை குறிப்பிட்ட பகுதியின் பருவநிலை அமைப்பைப் சார்ந்ததாகும். நிலப்பரப்பு குறித்த தகவல்கள், வானிலை APIs (application programme interfaces), சூரிய கதிர்வீச்சு தரவுகள், நுகர்வோர் மின் பயன்பாடு ஆகியவற்றைப் பொருத்து ஊர்ஜன் குழு, அளவையும் குறைந்தபட்ச விலையையும் நிர்ணயித்து வாடிக்கையாளருக்குத் தெரிவிக்கிறது. ஒரே முறை முதலீடு செய்யும் விதத்தில் இருப்பதால் வாடிக்கையாளர்கள் லோன் அல்லது மாதத் தவணை முறையை பயன்படுத்தலாம். ஊர்ஜன் ஐடிபிஐ வங்கியுடன் இணைந்து மத்திய மற்றும் மாநில அரசின் உதவித்தொகைகளை வாடிக்கையாளர்கள் பெறவும் உதவுகிறது.

மழை மற்றும் வெயில்

ஊர்ஜனின் பெரும்பாலான க்ளையண்டுகள் தனிப்பட்ட வீடுகளைக் கொண்டவர்களும் வணிக நிறுவனங்களுமே என்பதால் அடுக்குமாடிக் குடியிருப்புகளை இணைத்துக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது ஊர்ஜன். ரோலி கூறுகையில், “அடுக்குமாடிக் குடியிருப்பில் ஒரே ஒரு பெட்ரூமைக்கூட க்ரிட்டை சார்ந்திராமல் மாற்றலாம். இது க்ரீன் ரூமாக மாறி மின் தடைகளால் பாதிப்படையாமல் இருக்கும்.”

ஏற்கெனவே கட்டமைக்கப்பட்ட வீடுகள் சூரிய மின் ஆற்றலுக்கு பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ மாறலாம். அதே சமயம் புதிதாக கட்டமைக்கப்படவுள்ள வீடுகளுக்கு முன்கூட்டியே திட்டமிடலாம். பருவமழையின்போதிருக்கும் திறன் குறித்து ரோலி கூறுகையில்,

கோடைக்காலத்தில் நூறு சதவீத உற்பத்தி இருக்கும். இத்துடன் ஒப்பிடுகையில் மழை நாட்களிலோ அல்லது மேகமூட்டமான நாட்களிலோகூட 30 முதல் 40 சதவீத உற்பத்தி இருப்பதாக கடந்த மூன்று பருவமழையின்போது சேகரிக்கப்பட்ட தரவுகள் தெரிவிக்கிறது. கோடைக் காலங்களில் ஏசியை பயன்படுத்துவதால் மின் உற்பத்தி நூறு சதவீதம் இருப்பதைப் போன்று மின் பயன்பாடும் அதிகளவில் இருக்கும். அதே சமயம் பருவமழை காலத்தில் மின் பயன்பாடும் உற்பத்தியும் குறைந்துவிடுகிறது. இதனால் உற்பத்தியும் பயன்பாடும் சமநிலையில் உள்ளது.

சூரிய மின் ஆற்றலானது அதிக நெகிழ்வுத் திறன் கொண்டது. பல வீடுகளில் பொதுவான பகுதிகளில் எரியும் விளக்குகளுக்கும், லிஃப்ட்களுக்கும், பம்ப்களுக்கும் இதைப் பயன்படுத்துகின்றனர். சில வீடுகளில் ஒரு ஃபேன், விளக்கு, ஒரு சார்ஜிங் பாயிண்ட் ஆகியவற்றிற்கு மட்டும் இதை ஒதுக்குகின்றனர். 


image


Anita Borg Foundation மற்றும் இந்திய அரசாங்கத்தால் இந்தியாவில் பெண்கள் தலைமையில் இயங்கும் தொழில்நுட்ப ஸ்டார்ட் அப்களில் சிறந்த 10 ஸ்டார்ட் அப்களில் ஒன்றாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது ஊர்ஜன். இந்த சோலார் ஸ்டார்ட் அப் இரண்டு நகரங்களில் 13 பேர் அடங்கிய குழுவாக செயல்படுகிறது. மற்ற இரு நகரங்களில் துப்புரவு மற்றும் பராமரிப்பிற்காக பார்ட்னர்களுடன் இணைந்து செயல்படுகிறது. இந்த பார்ட்னர்ஷிப் மாதிரி வாயிலாக புதிய பகுதிகளில் வளர்ச்சியடைய திட்டமிட்டுள்ளது. இதுவரை இக்குழுவினர் 70 ப்ராஜெக்டுகளை நிறைவு செய்துள்ளனர். 2017-18-ம் ஆண்டிற்கான வருவாயாக 15 கோடி ரூபாய் மதிப்பிடப்படுகிறது. Globevestor உள்ளிட்டோரிடமிருந்து ஏஞ்சல் மற்றும் சீட் முதலீடாக 450,000 டாலர்கள் நிதி உயர்த்தியுள்ளது ஊர்ஜன். வளர்ச்சிப் பணிகளுக்காக அடுத்த சுற்று நிதியை உயர்த்த எதிர்நோக்கியுள்ளது.

ஆங்கில கட்டுரையாளர் : ஷரிகா நாயர்

Add to
Shares
5
Comments
Share This
Add to
Shares
5
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக