பதிப்புகளில்

அம்மாவின் கைமணத்துடன் உணவை அளிக்கும் 'பாபா ஃபட்டூஸ்'

cyber simman
23rd Oct 2015
Add to
Shares
2
Comments
Share This
Add to
Shares
2
Comments
Share

நீங்கள் வீட்டை விட்டு வெளியே வசிப்பவர் என்றால் இதை உங்களால் எளிதாக புரிந்து கொள்ள முடியும். வீடு தொடர்பாக நீங்கள் அதிகம் தவறவிடுவதாக உணர்வது எது?உணவுப்பிரியர்களை பொருத்தவரை இதற்கான பதில் அம்மாவின் கையால் சமைத்த உணவு என்பதாக தான் இருக்கும். அதோடு, இன்று சாப்பிட என்ன இருக்கிறது என்பது தான் நாம் அடிக்கடி எதிர்கொள்ளும் கேள்வியாக இருக்கிறது. சமைப்பதற்கும் நேரம் இல்லாமல், ஆரோக்கியமான வீட்டுச்சாப்பாடு சுவைக்கவும் வழி இல்லாதவர்களுக்கு இந்த கேள்வி சோதனையானது தான்.

இந்த பிரச்சனைக்கான தீர்வு காண தனது ஸ்டார்ட் அப் நிறுவனமான "பாபா ஃபட்டூஷ்" (Baba Fattoosh) மூலம் முயற்சிக்கிறார் தேவேஷ் வர்ஷனே( Devesh Varshney). 2010ல் தேவேஷ், தில்லியில் இருந்து பெங்களூரு வந்த போது தினமும் மூன்று வேளை நல்ல உணவு சாப்பிடுவது சிக்கலானது. பெங்களூருவில் இருந்த மூன்று ஆண்டுகளும் அவர் துரித உணவில் தான் காலம் தள்ளினார்.

பின்னர் முதலீட்டு வங்கியில் பணியாற்ற நியூயார்க் சென்ற போதும் இதே நிலை தான் தொடர்ந்தது. மிகவும் பிசியாக இருந்ததால அரோக்கிய உணவை தேடிச்செல்ல முடியவில்லை. இந்த அனுபவத்திற்கு பிறகே அவர் இதற்கான விடையை தேடுவதற்கு பதில் தானே அளிக்க தீர்மானித்தார். இப்படி தான் பாபா ஃபட்டூஷ் பிறந்தது.

ஆரோக்கியமான உணவு தேர்வை வலியுறுத்தும் நோக்கத்துடன் துவக்கப்பட்ட இந்த நிறுவனம், உணவுப்பழக்கத்தை மாற்ற வேண்டும் என விரும்புகிறவர்களுக்கு அதை சாத்தியமாக்க விரும்புகிறது. சுய நிதியில் துவக்கப்பட்ட இந்நிறுவனம் தேவைக்கேற்ப உணவை டெலிவரி செய்கிறது. தினமும் சாப்பிடக்கூடிய, வீட்டிலேயே தயார் செய்த தில்லி பாணி உணவில் கவனம் செலுத்துகிறது. துரித உணவு மையங்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு டெலிவரி செய்யும் வழக்கமான உணவு சேவை இணையதளங்கள் போல, இல்லாமல் உணவை தாங்களே பதப்படுத்தல் பொருட்கள் அல்லது எம்.எஸ்.ஜி இல்லாமல் தயாரித்து வழங்குகிறது.

பாபா ஃபட்டூஷ்  குழு

பாபா ஃபட்டூஷ் குழு


இப்போதைக்கு பெங்களூருவில் மட்டும் செயல்படும் இந்த ஸ்டார்ட் அப், ஒயிட் பீல்ட், மராத்தல்லி, கபுபேஷனஹல்லி, ப்ரூக்பீல்ட் பெல்லாண்டூர் மற்றும் முக்கிய தொழில்நுட்ப பூங்காக்களில் உணவை டெலிவரி செய்கிறது. ஆறு டெலிவரி பையன்களை கொண்டுள்ள நிறுவனம் ரோட்ரன்னருடனும் ஒப்பந்தம் செய்துள்ளது.

வாடிக்கையாளர் ஆர்டர் செய்ய வசதியாக தினமும் நிறுவனம் மெனுவை மாற்றுகிறது.

யார் இந்த பாபா?

நிறுவன பெயரில் இடம்பெற்றுள்ள பாபா யார்? வட இந்தியாவில் அதிகம் பார்க்க கூடிய, உணவின் வாசனையை வைத்து ஏதாவது வீட்டின் கதவை தட்டும் உணவு பிரியர் தான் இந்த பாபா என்கிறார் தேவேஷ். சுற்றுப்புறத்தில் உள்ள அனைத்து வீடுகளின் உணவு சுவையையும் அறிந்தவர் என்பதால் தான் இந்த பெயரை தேர்வு செய்தோம் என்கிறார் அவர். தில்லி உணவின் மணமும், மசாலாவும் அவரைப்போல அறிந்தவர் யாருமில்லை.

இந்த குழுவில் 9 சமையல் அறை ஊழியர்கள் உட்பட 21 பேர் இருக்கின்றனர். நிறுவனம் 1400 வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது. இவர்களில் 243 பேர் தொடர் வாடிக்கையாளர்கள். முதல் மாதத்தில் பதிவான 500 உறுப்பினர்களில் இருந்து அதன் வாடிக்கையாளர் பரப்பு அதிகரித்துள்ளது.

இந்த இளம் ஸ்டார்ட் அப் நுகர்வோரை மையமாக கொண்ட உணவு சேவையில் கவனம் செலுத்த விரும்புகிறது. யுவர்ஸ்டோரி நடத்திய ஆய்வுபடி இந்த பிரிவில் 2015 ந் முதல் ஆறு மாதங்களில் 380 ஒப்பந்தங்களீல் 3.5 பில்லியன் டாலர் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இந்த சந்தை 50 பில்லியன் டாலர் மதிப்பு கொண்டதாக கருதப்படுகிறது. 16 முதல் 20 சதவீதம் வளரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாபா ஃபட்டூஷ்  நிறுவனர் தேவேஷ் வர்ஷனே

பாபா ஃபட்டூஷ் நிறுவனர் தேவேஷ் வர்ஷனே


நிறுவனம் முதலீட்டாளர்களையும் எதிர்நோக்கியுள்ளது. மேலும் தனது செயலியை மேம்படுத்தவும் திட்டமிட்டுள்ளது. ஆரோக்கியமான உணவு பழக்கத்தை வலியுறுத்துவதால் செயலியின் அம்சம், வாடிக்கையாளர் உணவு பழக்கத்தை கவனித்து ஆலோசனைகளை அளிக்கும். "நீங்கள் மதிய உணவுக்கு இரட்டை சீஸ் பிட்சா சாப்பிட்டிருந்தால், உங்கள் அம்மா சொல்லக்கூடியது போலவே இந்த செயலி டின்னருக்கு கிச்சடி போன்ற லேசான உணவை பரிந்துரைக்கும். நீரிழிவு நோய்க்கான டயட் திட்டத்தையும் இது முன்வைக்கும்” என்று அவர் விளக்குகிறார்.

இன்னமும் நிலைபெற முயன்று வரும் நிறுவனம் மாதாந்திர உணவு சந்தா சேவை மற்றும் பல்வேறு உணவு வகைகளை அறிமுகம் செய்யவும் திட்டமிட்டுள்ளது.

சரியான குழுவை உருவாக்குவது தான் மிகப்பெரிய சவால் என்கிறார் தேவேஷ். ஸ்டார்ட் அப்கள் பயணத்தில், இணைந்து பணியாற்றும் நபர்கள் மிகவும் முக்கியம் என்கிறார் அவர்.

image


பாடங்கள்

எல்லாவற்றையும் புரிந்து கொள்ள சில மாதங்கள் ஆனது என்கிறார் தேவேஷ். தனது அனுபவ பாடத்தையும் பகிர்ந்து கொள்கிறார்.

என்ன செய்ய விரும்புகிறோம் என அறிவது மற்றும் ஆதரவான இணை நிறுவனரை பெறுவது முக்கியம். அதோடு குடும்பத்திற்கு நேரம் ஒதுக்க முடியாமல் ஓடிக்கொண்டிருகக தயாராக இருக்க வேண்டும். இது சவாலாகவும், கஷ்டமானதாகவும் இருக்கலாம்.

பல்வேறு பின்னணியை கொண்டவர்களை சந்தித்துப்பேசி, அவர்களிடம் சந்தை பற்றிய கருத்துக்களை கேட்டறியவும் என்று தொழில்முனைவோர்களுக்கு அவர் ஆலோசனை சொல்கிறார்.

இணையதள முகவரி: Baba Fattoosh

Add to
Shares
2
Comments
Share This
Add to
Shares
2
Comments
Share
Report an issue
Authors

Related Tags