ரூ.1,058 கோடிக்கு விற்பனையாகி சாதனை படைத்த மர்லின் மன்றோவின் ஓவியம்!

1964ம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த ஆண்டி வர்ஹால் என்பவரால் வரையப்பட்ட மறைந்த ஹாலிவுட் நடிகை மர்லின் மன்றோவின் ஓவியம் 1,508 கோடிக்கு விற்பனையாகி சாதனை படைத்துள்ளது.
0 CLAPS
0

1964ம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த ஆண்டி வர்ஹால் என்பவரால் வரையப்பட்ட மறைந்த ஹாலிவுட் நடிகை மர்லின் மன்றோவின் ஓவியம் 1,508 கோடிக்கு விற்பனையாகி சாதனை படைத்துள்ளது.

1947 முதல் தான் 1962ம் ஆண்டு முதல் ஹாலிவுட்டில் முன்னணி நடிகையாக கொடிக்கட்டி பறந்தவர் மர்லின் மன்றோ. 1950-களில் ஹாலிவுட்டின் கனவு தேவதையாக வலம் வந்த மர்லின் மன்றோ, தனது இறுதி நாட்களில் போதைப்பொருட்களுக்கு அடிமையாகி, குடும்பப் பிரச்சினைகளால் அவதியுற்றார். 36 வயதில் தற்கொலை செய்துகொண்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டாலும், அவரது மரணம் இன்னும் புதிராகவே இருந்து வருகிறது.

1944ம் ஆண்டு தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றிக் கொண்டிருக்கும் போது மர்லின் மன்றோவை புகைப்படக் கலைஞர் ஒருவர் எடுத்த போட்டோ, மாடலிங் துறையில் காலூன்ற வைத்தது. இதனையடுத்து, ஹாலிவுட்டின் ஜாம்பவான் தயாரிப்பு நிறுவனங்களான 20ஆம் சென்சுரி ஃபாக்ஸ், கொலம்பியா பிக்சர்ஸ் பார்வை மர்லின் மீது பதித்தது.

முதலில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தவருக்கு, 1953ம் ஆண்டு முதல் அதிர்ஷ்டம் அடித்தது. அடுத்தடுத்து படங்களில் முன்னணி நடிகையாக நடித்து, ஹாலிவுட்டில் அழகு தேவதையாய் வலம் வர ஆரம்பித்தார்.

ஏலத்தில் விலை போன மர்லின் மன்றோவின் ஓவியம்

பஸ் ஸ்டாப் (1956), பிரின்ஸ் அண்ட் தி ஷோர்கர் (1957), படத்தில் விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்டார், சம் லைக் இட் ஹாட் (1959) படத்திற்காக சிறந்த நடிகைக்கான கோல்டன் குளோப் விருதைப் பெற்றார். இவரது இறுதித் திரைப்படம் தி மிஸ்ஃபிட்ஸ் (1961) ஆகும். 1962ம் ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள அவரது வீட்டில் அதிகமான பார்பிகுரேட்டட்ஸின் மருந்தை உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் மனதில் இன்று வரை வாழ்ந்து கொண்டிருக்கும் மர்லின் மன்றோ மரணித்த பிறகும் கூட சாதனை படைத்துள்ளார்.

ரூ.1,508 கோடிக்கு விலை போன மர்லின் மன்றோ ஓவியம்:

ஆண்டி வார்ஹோல் என்ற ஓவியர் 1964ம் ஆண்டு வரைந்த "ஷாட் சேஜ் ப்ளூ மர்லின்" என்ற ஓவியம் 195 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது. அதாவது இந்திய மதிப்பில் 1,508 கோடி ரூபாய் ஆகும். இதன் மூலம் மர்லின் மன்றோவின் ஓவியம் ஏலத்தில் விற்கப்பட்ட அமெரிக்க கலைஞரின் மிக விலையுயர்ந்த கலைப்படைப்பு என்ற சாதனையை படைத்துள்ளது.

டர்க்கைஸ் பின்னணியில் குளோஸ்-அப்பில் வரையப்பட்டுள்ள அந்த ஒவியத்தில் தனது சிக்னேச்சர் ஸ்டைலான மஞ்சள் நிற முடி, நீல நிற ஐ ஷேடோ, அடர் சிவப்பு நிற லிப்ஸ்டிக், பற்கள் தெரிய புன்னகையுடன் மர்லின் மன்றோ காட்சியளிக்கிறார்.

நியூயார்க்கில் உள்ள கிறிஸ்டியின் ஏல நிறுவனம் இதுகுறித்து கூறுகையில்,

“வார்ஹோலின் வரைந்த மர்லின் மன்றோவின் உருவப்படம் 20 ஆம் நூற்றாண்டிலிருந்து இதுவரை ஏலம் விடப்பட்டதில் மிகவும் விலை உயர்ந்தது. இந்த ஓவியத்தை பெயர் தெரியாத ஒரு நபர் வாங்கியுள்ளதாகவும், அவர் தனது அடையாளத்தை வெளிப்படுத்தவில்லை,” என்றும் தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னதாக மார்டன் ஆர்ட் ஓவியரான ஜீன் மைக்கேல் பாஸ்குயட் என்பவர் 1982 ஆம் ஆண்டு வரைந்த ஓவியம் ஒன்று, 2017ம் ஆண்டு சோதேபியில் 110.5 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு விற்பனையானது.

மர்லின் மன்றோ ஓவியத்தை விற்றதன் மூலமாகக் கிடைத்த தொகை முழுவதும் தாமஸ் மற்றும் டோரிஸ் அம்மான் அறக்கட்டளைக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த அறக்கட்டளையானது குழந்தைகளுக்கு சுகாதாரம் மற்றும் கல்வித் திட்டங்களுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.

Latest

Updates from around the world