நடிகை சமந்தா மற்றும் சுஷ்ருதி கிருஷ்ணா-வின் ‘சகி’ பிராண்ட் உருவான கதை!

By YS TEAM TAMIL
November 24, 2022, Updated on : Thu Nov 24 2022 09:31:30 GMT+0000
நடிகை சமந்தா மற்றும் சுஷ்ருதி கிருஷ்ணா-வின் ‘சகி’ பிராண்ட் உருவான கதை!
சுஷ்ருதி கிருஷ்ணா மற்றும் நடிகை சமந்தா பிரபு, தங்கள் பாரம்பரிய ஆடைகள் பிராண்ட் ’Saaki'-யை 2020ல் துவக்கினர்.
  • +0
    Clap Icon
Share on
close
  • +0
    Clap Icon
Share on
close
Share on
close

இந்திய பாரம்பரிய ஆடைகள் உலகம் முழுவதும் பிரபலமாக இருப்பதோடு, இந்திய சந்தை 2025ல் 24 பில்லியன் டாலரை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்த வாய்ப்பை பயன்படுத்தி பல தொழில்முனைவோர்கள், BIBA, மீனா பஸார், குளோபல் தேசி, ஆண்ட் போன்ற பிராண்ட்களை அறிமுகம் செய்துள்ள நிலையில், பிரபல நட்சத்திரங்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி வருகின்றனர்.

ஆடைகள்

பெங்களூருவைச் சேர்ந்த ’சகி’ (Saaki) இத்தகைய பிராண்ட்களில் ஒன்றாக இருக்கிறது. 2020ல் இந்த பிராண்ட், 2020 பெமினா மிஸ் இந்தியாவில் 2வது இடம் பிடித்த சுஷ்ருதி கிருஷ்ணா மற்றும் பிரபல நடிகை சமந்தா பிரபுவால் மெர்ச் எனும் தாய் பிராண்ட் கீழ் உருவாக்கப்பட்டது. உலகம் முழுவதும் உள்ள பெண்களுக்கான ஆன்லைன் D2C பிராண்டாக இது விளங்குகிறது.  


வர்த்தக பங்குதாரரை தேடிக்கொண்டிருந்த நாட்களை நினைவு கூறும் சுஷ்ருதி, முதலீடு செய்வதற்கு மட்டும் அல்லாமல், ஒரு பிராண்டை இணைந்து உருவாக்கும் வாய்ப்பை எதிர்நோக்கியிருந்த சமந்தாவை பரஸ்பர நண்பர் மூலம் சந்தித்தாகக் கூறுகிறார்.

“எனக்கும், சமந்தாவுக்கும் வர்த்தகம் தொடர்பாக ஒரே மாதிரியான புரிதல் இருந்தது, பாரம்பரிய இந்திய ஆடைகள் பிரிவில் வாய்ப்பை உணர்ந்ததால் இதில் நுழைந்தோம். இந்த சந்தை ஒருங்கிணைக்கப்படாமல் இருக்கிறது. இதில் உள்ள பிராண்ட்கள் அதிக விலை பிரிவில் உள்ளன. வாடிக்கையாளர்கள் வாங்கக் கூடிய விலையில் பிரிமியம் ஆடைகளை அளிக்க ’சகி’ பிராண்டை உருவாக்கினோம்,” என்கிறார் சுஷ்ருதி கிருஷ்ணா.

இரண்டு ஆண்டுகளில், இந்திய அளவில் வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள பல கோடி மதிப்புள்ள பிராண்டாக சகி வளர்ந்திருப்பதாக அவர் கூறுகிறார். எனினும், நிறுவன வருவாய் பற்றிய தகவலை தெரிவிக்கவில்லை.

பிராண்ட் வளர்ச்சி

சகி பிராண்ட் இந்திய அளவில் 60,000 வாடிக்கையாளர்களைப் பெற்றிருப்பதாகவும், மிகவும் இயற்கையாக இந்த வாடிக்கையாளர்களை பெற்றிருப்பதாகவும் கூறுகிறார் சுஷ்ருதி.

“சமந்தா இருப்பதால் பெரும்பாலான பிராண்ட் அங்கீகாரம் கிடைக்கிறது. துவக்கம் முதல் சமூக ஊடக விளம்பரங்களுக்காக ஒரு ரூபாய் கூட செலவு செய்யவில்லை. நானும் சமந்தாவும் சகி ஆடைகளை அணிய விரும்புகிறோம், இதுவே பிராண்ட் விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது,” என்கிறார்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் சகி 180 % வளந்திருந்தாலும், இந்த பயணம் எளிதாக இருக்கவில்லை.


2019ல் வர்த்தக திட்டமிடல், சப்ளை செயின் மற்றும் கையிருப்பு தொடர்பான பேச்சுகளுடன் துவங்கியதாக சுஷ்ருதி கூறுகிறார். 2020 மார்ச் மாதம், பொது முடக்கத்திற்கு முன்பாக பிராண்ட் அறிமுகமானது.

“என்ன நடந்திருக்கும் என்பதை நீங்கள் நினைத்துப்பார்க்கலாம். காத்திருந்து பிராண்டை அறிமுகம் செய்த பிறகு 2020 செப்டம்பர் வரை வர்த்தகம் செய்ய முடியவில்லை. இது ஏமாற்றம் அளித்தாலும் இந்த காலத்தில் சந்தை ஆய்வை மேற்கொண்டோம். D2C வளர்ச்சி பெற்றது எங்களுக்கு உதவியது,” என்கிறார்.

இதனிடையே, இந்தியா முழுவதும் உற்பத்தி வசதியை உருவாக்கினர். தில்லி, மும்பை, ஜெய்பூர், திருப்பூர் ஆகிய நகரங்களில் உற்பத்தியாளர்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

பாரம்பரிய ஆடைகள் சந்தை

இந்தியா அதன் பாரம்பரிய ஆடைகளுக்காக அறியப்படுகிறது. நாடு முழுவதும் பல பிராண்ட்கள் உள்ளன. எனினும், பிராண்ட்கள் ஒருங்கிணைக்கப்படாத பிரிவினரிடம் இருந்து பெரும் சவாலை சந்திக்கின்றன.


டிசைனர் ஆடைகளை அணிய விரும்பும் ஆனால் அதற்கான விலையை கொடுக்க முடியாத வாடிக்கையாளர்களுக்கு சேவை அளிப்பதே தங்கள் பிராண்டின் நோக்கம் என்கிறார் சுஷ்ருதி.

“BIBA, Indya, ஃபேப் இண்டியாவின் Fab New ஆகியவை எங்களுக்கு போட்டியாக உள்ளன. இன்றைய இளம் பெண்களுக்கான பாரம்பரிய ஆடைகளை அளிப்பதன் மூலம் மற்ற பிராண்ட்களில் இருந்து தனித்து நிற்கிறோம்,” என்று எஸ்.எம்.பி ஸ்டோரியிடம் கூறுகிறார்  சுஷ்ருதி .

சகியின் SKU வகைகள் ரூ. 2,300 முதல் ரூ. 2,800 வரை உள்ளன. குர்தி, குர்தால் டியுனிக், டாப்கள் உள்ளிட்டவற்றை வழங்குகிறது.

எதிர்கால சவால்கள்

சப்ளை செயின் நிர்வாகத்தில் தான் உண்மையான சவால் இருப்பதாக சுஷ்ருதி  கூறுகிறார்.

“ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் போது உங்கள் உற்பத்தியாளரை கட்டுப்படுத்த முடியாது. எங்கள் சொந்த உற்பத்திக்கான பேச்சுவார்த்தையில் உள்ளோம்,” என்கிறார்.

அமெரிக்கா, ஆஸ்திரேலியா, யுகே உள்ளிட்ட 15 நாடுகளிலும் சகி கிடைக்கிறது.


சர்வதேச விரிவாக்கத்தில் கவனம் செலுத்தி வருவதாகவும், தற்போது 25 சதவீத வருவாய் சர்வதேச விற்பனையில் இருந்து கிடைப்பதாகவும் கூறுகிறார்.

“இந்திய வம்சாவளியினர் உலகில் அதிகம் உள்ளனர். இதை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இந்தியாவில் பல சர்வதேச பிராண்ட்கள் உள்ளன. உலகிற்கான இந்திய தயாரிப்பை அளிப்பதே எங்கள் கவனம்,”என்கிறார்.

சகி மற்ற பிரிவுகளிலும் விரிவாக்கம் செய்து, குழந்தைகள் ஆடைகள், இல்ல அலங்காரம் போன்றவற்றில் ஈடுபடவும் திட்டமிட்டுள்ளது. பல பிரிவுகளில் செயல்படும் வாழ்வியல் பிராண்டாக இருப்போம் என்கிறார் சுஷ்ருதி.


ஆங்கிலத்தில்: பலக் அகர்வால் | தமிழில்: சைபர் சிம்மன்


Edited by Induja Raghunathan