தல - தளபதி ஒன்று சேர்ந்தா எப்படி இருக்கும்? புது அவதாரம் எடுக்கப்போகும் தோனி!

தளபதி விஜய் தனது 48வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடியுள்ள நிலையில், தல தோனியுடன் அவர் இணையுள்ளது குறித்து வெளியாகியுள்ள தகவல் வைரலாகி வருகிறது.
0 CLAPS
0

தளபதி விஜய் தனது 48வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடியுள்ள நிலையில், தல தோனியுடன் அவர் இணையுள்ளது குறித்து வெளியாகியுள்ள தகவல் வைரலாகி வருகிறது.

தமிழ் திரையுலகின் முன்னணி ஹீரோவான தளபதி விஜயின் 48வது பிறந்தநாள் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. 18 வயதில் தனது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய ‘நாளைய தீர்ப்பு’ படம் மூலமாக திரையில் அடியெடுத்து வைத்த விஜய், தற்போது ‘பீஸ்ட்’ திரைப்படம் வரை இதுவரை 65 படங்களில் நடித்துள்ளார்.

தற்போது பீஸ்ட் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் தற்போது பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி படிப்பள்ளி இயக்கத்தில் நடித்து வருகிறார். ஒரே நேரத்தில் தமிழ் தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகி வரும் இந்த படத்தில், நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார்.

மேலும் சரத்குமார், பிரகாஷ்ராஜ். பிரபு. ஷாம் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். தமன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ இந்த படத்தை தயாரிக்கிறார். இந்த படத்திற்கு ‘வாரிசு’ என பெயரிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், விஜயின் 48வது பிறந்தநாளை கொண்டாட்டத்தின் டபுள் ட்ரீட்டாக தமிழ் ரசிகர்களின் மனம் கவர்ந்த கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனியுடன், தளபதி விஜய் கரம் கோர்க்க உள்ளதாக தகல்கள் வெளியாகியுள்ளன.

ஒன்றிணையும் தல - தளபதி!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கிரிக்கெட் பிளேயராக உள்ள எம்.எஸ். தோனி விரைவில் திரையுலகில் தடம் பதிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. அதுவும் கோலிவுட்டில் தயாரிப்பாளராக ஆஃப்-ஸ்கிரீன் வாழ்க்கையை தோனி தொடங்க உள்ளதாக கூறப்பட்டது.

ஏற்கனவே தல தோனிக்கு லட்சக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்கள் உள்ள நிலையில், இந்த அறிவிப்பு சினிமா ரசிகர்களையும் எதிர்பார்ப்பில் ஆழ்த்தியது.

இதனிடையே, தனது தயாரிப்பு நிறுவனத்தில் தளபதி விஜய் நடிக்க வேண்டும் என தல தோனி கேட்டுக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் தல தோனி தயாரிப்பில் தளபதி விஜய் நடிக்க உள்ள படத்திற்கு ‘தளபதி 68’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த படத்தில் தல மற்றும் தளபதி இருவரும் இணைந்து திரையில் வருவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் பல தகவல்கள் வெளியாகியுள்ளதால், இது கிரிக்கெட் மற்றும் சினிமாத்துறை ரசிகர்கள் இடையே உற்சாகத்தை அதிகரித்துள்ளது.

தோனியின் முதல் படத்தில் விஜய்க்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து விஜய் மற்றும் எம்.எஸ். தோனி தரப்பிலிருந்து எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகாத நிலையில், சோசியல் மீடியாவில் இருதரப்பு ரசிகர்களும் கொண்டாட்டத்தில் இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில ஆண்டுகளாகவே சென்னையை தனது இரண்டாம் வீடாக கருதிவரும் தோனி, இங்குள்ள பிரபல நிறுவனங்களின் ப்ராண்ட் அம்பாசிடராக, பங்குதாரராகவும், முதலீட்டாளராகவும் இருந்து வருகிறார்.

அண்மையில், சென்னையைச் சேர்ந்த ட்ரோன் நிறுவனமான ’கருடா ஏரோஸ்பேஸ்’-ல் முதலீடு செய்து அதன் பார்ட்னராகி இருப்பது குறிப்பிடத்தக்கது.