பதிப்புகளில்

ரூ.100 கோடி நிதி உயர்த்தி சிறு, நடுத்தர வணிகங்களுக்கு கடன் வழங்கும் FlexiLoans

22nd Nov 2017
Add to
Shares
179
Comments
Share This
Add to
Shares
179
Comments
Share

குறைவான க்ரெடிட் ஸ்கோர் அல்லது க்ரெடிட் ஸ்கோர் இல்லாத நிலை, அடமானப் பொருள் இல்லாத நிலை, குறுகிய கால நெகிழ்வான கடன்களுக்கான தேவை – இவையே சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் கடன்களை விவரிக்கும் பண்புகள். இதனால் வங்கி கடன் வழங்குவதில் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படுகிறது.

சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனஙகள் ஆகியவற்றின் நிதித் தேவைகளை பூர்த்தி செய்து இந்த இடைவெளியை நிரப்ப பல தொழில்நுட்பம் சார்ந்த நிதி நிறுவனங்கள் இத்துறையில் செயல்படத் துவங்கியது.

அப்படிப்பட்ட ஒரு நிறுவனம்தான் ஃப்ளெக்ஸிலோன்ஸ் (FlexiLoans). மனீஷ் லூனியா, ரித்தேஷ் ஜெயின், தீபக் ஜெயின் ஆகிய மூன்று பட்டயக் கணக்கர்கள் (CA) மற்றும் டேட்டா சயிண்டிஸ்டான அபிஷேக் கோத்தாரி ஆகியோர் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான கடன் பிரிவில் மிகப்பெரிய வாய்ப்பு இருப்பதைக் கண்டனர். 2015-ம் ஆண்டு அக்டோபர் மாதம் டிஜிட்டல் கடன் வழங்கும் ஸ்டார்ட் அப்பை அறிமுகப்படுத்தினர். இது பயன்பாட்டு மூலதனத்திற்கான (working capital) நிதியை SME மற்றும் MSME-க்களுக்கு வழங்குகிறது.

image


SME-க்களுக்கு சிறிய தொகையாக 5 லட்ச ரூபாய் கடனாக வழங்குவதில் வங்கிகள் ஆர்வம் காட்டுவதில்லை. சிபில் ஸ்கோர் 700-க்கும் குறைவாக இருக்கும் வாடிக்கையாளர்கள் பெரிதும் நிராகரிக்கப்படுகின்றனர். இதில் முரண்பாடான விஷயம் என்னவென்று மனீஷ் குறிப்பிடுகையில்,

20 சதவீத வணிகங்களுக்கு மட்டுமே ஸ்கோர்கள் இருக்கும். கடன்களை வழங்க ஏதேனும் எளிதான வழி இருக்கும் என்பதை உணர்ந்தோம். மேலும் தரவுகள் சார்ந்த கடன் வழங்கும் முறை பல ஐயங்களை நீக்கிவிடும். அத்துடன் கிரெடிட் ஏஜென்சிக்களை சார்ந்திருக்கவேண்டிய அவசியமும் குறையும்.

MSME-க்களுக்கு நிதி வழங்குதல்

ஃப்ளெக்ஸிலோன்ஸ் முதலில் சந்தை மாதிரியில் செயல்பட்டது. அதன் பிறகு தனது உத்தியை மாற்றியமைத்து சிறு வணிகங்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கு கடன் வழங்கத் துவங்கினர்.

2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம் கேகேஆர் சிஇஓ சஞ்சய் நாயர், சிட்டிபேங்க் செயல்பாடு மற்றும் தொழில்நுட்பத்துறையின் முன்னாள் தலைவர் விக்ரம் சத், எச்டிஎஃப்சி வங்கி தலைமை முதலீட்டு அதிகாரி அனில் ஜகியா, கேபிஎம்ஜி-யின் முன்னாள் நிர்வாக இயக்குனர் நாராயன் சேஷாத்ரி ஆகியோர் 100 கோடி ரூபாய் முதலீடு செய்தனர். இந்த ஒப்பந்தத்தில் ஒரு பகுதியாக ஃப்ளெக்ஸிலோன்ஸ் பங்குகளில் 20 சதவீதத்தை EpiMoney பெற்றுக்கொண்டது.

ஃப்ளெக்ஸிலோன்ஸ் கடன் வழங்கும் விதத்தில் மாறுபட்டுள்ளது என்கின்றனர் அதன் நிறுவனர்கள். “நாங்கள் பார்ட்னர்ஷிப் முறையில் செயல்படுகிறோம்,” என்றார் மனீஷ்.

ஃப்ளெக்ஸிலோன்ஸ் 65 தேசிய பார்ட்னர்ஷிப்புகளைக் கொண்டுள்ளது. ஃப்ளிப்கார்ட், ஷாப்க்ளூஸ் போன்ற மின் வணிக வலைதளங்களுடன் இணைந்துள்ளது. மேலும் பைன்லேப்ஸ் போன்ற PoS கட்டண முறையை வழங்குவோருடனும் இணைந்து கடன் வழங்குகிறது.

இந்த பார்ட்னர்ஷிப் காரணமாக வணிகரின் பரிவர்த்தனைகளை ஃப்ளெக்சி லோன்ஸ் பார்க்கமுடியும். இதனால் கடன் பெறுவதற்கான தகுதியை ஸ்டார்ட் அப் மதிப்பிடுவதற்கான வழிமுறைகளை அளிக்கிறது. பார்ட்னர்ஷிப் மாதிரி காரணமாக 2 மில்லியனுக்கும் அதிகமான சாத்தியக்கூறுகள் நிறைந்த பகுதியில் நிறுவனம் செயல்பட வாய்ப்பு கிடைத்துள்ளதாக மனீஷ் விவரித்தார்.

2016-ம் ஆண்டு மிகப்பெரிய டேக்ஸி நிறுவனமான ஊபருடன் இந்நிறுவனம் இணைந்து அதன் ஓட்டுநர்கள் புதிய ஸ்மார்ட்ஃபோன்களை வாங்க உதவியது. ஃப்ளெக்ஸிலோன் நிறுவனத்தின் வாயிலாக கடன் பெறுபவர்கள் கடன் தொகையை செலுத்தாமல் போகும் நிலையையும் இந்த பார்ட்னர்ஷிப் மாதிரி பாதுகாக்கிறது. ஏனெனில் பார்ட்னர்கள் தளமும் வணிகர்களிடமிருந்து கடன் தொகையை திரும்பப் பெறுவதில் சமமாக பொறுப்பேற்றுக் கொள்கின்றனர்.

ஒட்டுமொத்த வாடிக்கையாளர்களில் 40 சதவீதம் மட்டுமே ஆன்லைன் வணிகர்கள். மீதமிருக்கும் ஆஃப்லைன் வணிகர்களை நேரடியாகவும் PoS வழங்குபவர்கள் மூலமாகவும் அணுகப்படுவார்கள்.

வாடிக்கையாளர் தொகுப்பு

சராசரியாக 5 லட்ச ரூபாய் முதல் 6 ரூபாய் வரை கடன் தொகை வழங்கப்படுகிறது. வாடிக்கையாளர்கள் பொதுவாக 35 வயதிற்குள் இருப்பார்கள் என்று மனீஷ் குறிப்பிட்டார். இவர்கள் 5 லட்ச ரூபாய் முதல் 50 கோடி ரூபாய் வரை வருவாய் ஈட்டும் வர்த்தகர்களாவார்கள்.

ஃப்ளெக்ஸிலோனில் கடன் தொகைக்கு விண்ணப்பிக்கும் நிறுவனங்கள் குறைந்தது ஆறு மாதங்களாவது வணிகத்தில் ஈடுபட்டிருக்கவேண்டும். வங்கிகளில் விண்ணப்பிக்க மூன்றாண்டு நடவடிக்கைகள் அவசியம். கடன் தொகை 50,000 ரூபாயிலிருந்து துவங்குவதாகவும் பொதுவாக விண்ணப்பித்த 48 மணி நேரத்தில் கடன் தொகை வழங்கப்படும் என்றும் நிறுவனர்கள் தெரிவிக்கின்றனர்.

ஃப்ளெக்ஸிலோன்ஸ் பயன்பாட்டு மூலதனத்திற்கான கடன் தொகையாக ஒரு கோடி ரூபாய் வரை 36 மாதகாலத்திற்குள் மாதத்தவணையாகவோ அல்லது வாரத்தவணையாகவோ திருப்பி செலுத்தும் விதத்தில் கடன் வழங்குவதாக அதன் வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளது. சராசரி வட்டி விகிதம் 15 சதவீதத்திலிலிருந்து துவங்குகிறது.

நிறுவனத்தின் வருவாய் குறித்த தகவலை மனீஷ் வெளியிடவில்லை. ஆனால் ஒவ்வொரு கடன் வழங்கும்போதும் கிட்டத்தட்ட 2.5 சதவீத வருவாய் ஈட்டுவதாக அவர் குறிப்பிட்டார்.

கடன் வகைகள்

இந்த ஸ்டார்ட் அப் பயன்பாட்டு மூலதன கடன், PoS பரிவர்த்தனைகளின் அடிப்படையில் கடன், விநியோக சங்கிலி நிதி, குறிப்பிட்ட தொகை கடன் என பல்வேறு வகையான கடன்களை வழங்குகிறது. இந்த வருடம் மே மாதம் விநியோக சங்கிலி நிதித்தளமான கிரெடிட்பீரியட்.காம் (CreditPeriod.com) தளத்தை இந்த ஸ்டார்ட் அப் வாங்கியுள்ளது. இதன் மூலம் அடுத்த காலாண்டில் SME-க்களுக்கான இன்வாய்ஸ் அடிப்படையிலான கடன் வழங்க திட்டமிட்டுள்ளது.

இது குறித்து மனீஷ் மேலும் குறிப்பிடுகையில்,

”இந்த ப்ராடக்ட் வாயிலாக ரொக்கத் தேவைகளுக்கும் தீர்வளிக்க விரும்புகிறோம்.”

மாதத்தவணை முறையில் இந்த பிரிவில் 1 கோடி ரூபாய் வரை 30 முதல் 120 நாட்களில் திரும்ப செலுத்தும் விதத்தில் வழங்கப்படும். ஃப்ளெக்ஸிலோன்ஸ் கடன் வழங்குவதில் ’ஹைபிரிட்’ மாதிரியை அறிமுகப்படுத்தவும் திட்டமிட்டு வருகிறது. இதில் மற்ற நிதி நிறுவங்களுடன் இணைந்து இவர்களும் SME-க்களில் இணை முதலீடு செய்வார்கள். இந்த முறையை ஏற்கெனவே கேப்பிடல் ஃப்ளோட் போன்ற போட்டியாளர்கள் பின்பற்றி வருகின்றனர்.

நிதி மற்றும் வளர்ச்சி

100 கோடி ரூபாய் நிதி உயர்த்தப்பட்ட நிலையில் குழுவை வலுவாக்கவும் லோன் புக்கை உருவாக்கவும் இந்த நிதித் தொகை பயன்படுத்தப்படும் என்று நிறுவனர்கள் தெரிவித்தனர். தற்சமயம் இந்நிறுவனம் ஒவ்வொரு மாதமும் 4,000-க்கும் அதிகமான விண்ணப்பங்களைப் பெற்று வருகிறது. கிட்டத்தட்ட 20 கோடி ரூபாய் வரை கடன் வழங்கி வருகிறது. இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களிலிருந்து 12,000-க்கும் அதிகமான விண்ணப்பங்களை பரிசீலித்து கிட்டத்தட்ட 2,000 SME-க்களுக்கு கடன் வழங்கியுள்ளது.

ஃப்ளெக்ஸிலோன்ஸ் நிறுவனம் 85 பேர் கொண்ட குழுவாகச் செயல்பட்டு கிரெடிட் ஸ்கோரிங் விண்ணப்பங்களை இவர்கள் உருவாக்குகின்றனர். 95 சதவீதம் திரும்ப விண்ணப்பிக்கும் விகிதத்துடன் இந்நிறுவனம் அடுத்த 12 மாதங்களில் 300 கோடி ரூபாய் வரை வழங்க திட்டமிடுகிறது. மேலும் 500 நகரங்களில் விரிவடைந்து செயல்படவும் 200 பார்ட்னர்ஷிப்புடன் செயல்படவும் விரும்புகிறது.

image


நாட்டில் 51 மில்லியன் SME-க்கள் உள்ளன. இவை நாட்டின் GDP-ல் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு அளவிற்கு பங்களிக்கிறது. கடந்த ஆண்டு ரிசர்வ் வங்கி மதிப்பீட்டின்படி SME-க்களின் மொத்த நிதித் தேவை 26 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. ஆனால் வங்கிகள் இதில் 40 சதவீதத்திற்கு மட்டுமே சேவையளிக்கிறது.

இந்த வாய்ப்பு ஃப்ளெக்ஸிலோன்ஸ் நிறுவனத்தை மட்டுமின்றி SAIF பார்ட்னர்ஸ், கேப்பிடல் ஃப்ளோட் போன்ற நிறுவனங்களையும் கவர்ந்துள்ளது. கேப்பிடல் ஃப்ளோட் 45 மில்லியன் டாலர் தொகையை முதலீட்டாளர்களிடமிருந்து உயர்த்தியுள்ளதாக ஆகஸ்ட் மாதம் தெரிவித்தது.

ஒவ்வொரு மாதமும் 200 கோடி ரூபாய் வரை கடன் தொகை வழங்குவதாகவும் கடந்த ஆண்டு மட்டும் 300 நகரங்களில் 12,000-க்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு 2,500 கோடி ரூபாய் வரை கடன் வழங்கியுள்ளதாகவும் இந்நிறுவனர்கள் அப்போது தெரிவித்தனர்.

நிதி உயர்த்தி வரும் லெண்டிங்கார்ட் இந்த பகுதியில் செயல்படும் பிற பெரிய நிறுவனங்களில் ஒன்றாகும். TABCapital, CoinTribe போன்றவை SME பிரிவில் கவனம் செலுத்தும் பிற வங்கி சாரா நிதி நிறுவனங்களாகும்.

ஆங்கில கட்டுரையாளர் : தருஷ் பால்லா

Add to
Shares
179
Comments
Share This
Add to
Shares
179
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக