பதிப்புகளில்

பெண்களுக்கு விடுதலையும் அதிகாரமும் பெற்றுத் தரும் 'உதயன் ஷாலினி'

tharun kartic
21st Oct 2015
Add to
Shares
2
Comments
Share This
Add to
Shares
2
Comments
Share

அலியா தபசுமின் குடும்பம் மிகவும் ஏழ்மையில் உள்ளது. சிரமப்பட்ட வாழ்க்கையை நடத்த பழக்கப்பட்டிருந்தது. கூவிக் கூவி விற்கும் விற்பனையாளரான தந்தைக்கும் குடும்பத் தலைவியான தாய்க்கும் மகளாகப் பிறந்த அவர், அன்றாட வாழ்க்கையை ஓட்ட பெற்றோர் நடத்திய போராட்டங்களைப் பார்த்தார். மகளின் உயர்கல்விக்கு அவர்களால் உதவி செய்யமுடியாத இயலாமையை உணர்ந்தனர். அலியாவை அவரது பெற்றோர் 2007ம் ஆண்டு “உதயன் ஷாலினி” (Udayan Shalini) அமைப்பில் கொண்டுபோய் சேர்த்தனர்.

உதயன் உதவியுடன் அவர் பி.எஸ்ஸி கணிதம் படித்துமுடித்து, தன் குடும்பத்தின் முதல் பட்டதாரி ஆனார். உதயன் ஷாலினியின் தொடர் ஆதரவினால் அலியாவுக்கு கொல்கத்தாவில் இருந்த பன்னாட்டு நிறுவனமான காக்னிசன்ட் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட்டில், ஆண்டுக்கு 2 லட்சம் ரூபாய் ஆரம்பக்கட்ட சம்பளத்துடன் வேலை கிடைத்தது. அவருக்கு உதயன் அமைப்பு பொருளாதாரத்தில் மட்டும் உதவி செய்யவில்லை. அவரை வேலைவாய்ப்பு சந்தையில் போட்டியிடக்கூடிய அளவுக்கு தகுதியுள்ளவராகவும் உயர்த்தியது.

ரீனா பர்மன் தந்தை பீடி சுற்றும் தொழில் செய்து மிக சொற்பமான வருமானம் பெற்றுவந்தார். இரண்டு குழந்தைகளை வைத்துக்கொண்டு அந்தக் குடும்பம் தினமும் போராட்டத்தைச் சந்தித்தது. ரீனாவால் உயர்கல்வி பற்றி யோசிக்கவே முடியவில்லை. அதெல்லாம் கொல்கத்தாவைச் சேர்ந்த உதயன் ஷாலினி உதவித்தொகை கிடைப்பதற்கு முன்.

கடந்த 2007ம் ஆண்டு உதயன் ஷாலினி நடத்திய என்ஏடி எனப்படும் நுழைவுத்தேர்வை எழுதி, அதில் தேர்ச்சிபெற்றார் ரீனா. தேவை, குறிக்கோள் மற்றும் தகுதியை பரிசோதிக்கும் தேர்வு அது. ரீனாவின் நீண்டநாள் கனவு நனவானது. வெஸ்ட்பெங்கால் பல்கலைக்கழகத்தில் படித்து சமஸ்கிருதத்தில் எம்.ஏ., பட்டம் பெற்றார். அவர் ஆசிரியையாக விரும்பினார். ரீனாவின் குடும்பமும் உறவினர்களும் சமூகமும் அவருடைய வளர்ச்சியைப் பார்த்து பெருமைகொண்டது. அந்த கிராமத்தில் அவர்தான் முதலில் பல்கலைக்கழகம் வரை சென்று படித்தவர். பல கிராமத்துப் பெண்களுக்கு உத்வேகமாக இருந்தார்

தொடக்கத்துக்குப் பின்னால் ஓர் எண்ணம்

கடந்த 9 ஆண்டுகளாக உதயன் கேர் கொல்கத்தா (Udayan Care Kolkata) மாணவிகளிடையே உள்ள திறமையை வெளிக்கொண்டுவந்து, அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கு நிதி உதவிசெய்துவருகிறது. குசும் பண்டாரி என்பவரால் தொடங்கப்பட்ட உதயன், இதுவரையில் 700க்கும் மேலான மாணவிகளின் வாழ்க்கையில் கல்வி விளக்கேற்றி வைத்திருக்கிறது.

“ஒரு தாயின் ஆழ்ந்த விருப்பம், தனது இளம் மகளை படிக்கவைத்து, அவளுக்கு ஒரு எதிர்காலத்தை உருவாக்கவேண்டும் என்பதுதான். ஆனால் அதற்கு அவர்களுடைய வறுமை தடையாக இருக்கிறது. அங்கேதான் உதயன் ஷாலின் ஃபெலோசிப் திட்டம் உருவானது. இந்தியாவில் 16 சதவிகிதம் பெண்கள் மட்டுமே பத்தாம் வகுப்பைத் தொடுகிறார்கள். 100 பெண்களில் ஒருவர் மட்டுமே கல்லூரியை எட்டிப் பிடிக்கிறார். இங்கு 4.5 சதவிகிதம் பெண்களே பட்டதாரிகள். நகர்ப்புறத்திலும்கூட 8.7 சதவிகிதம் பெண்கள் மட்டுமே பட்டப்பிடிப்பை முடிக்கிறவர்களாக இருக்கிறார்கள். கடந்த 2002ம் ஆண்டு நியுடெல்லியில் எனது நன்பர் ஒருவரால் தொடங்கப்பட்டது உதயன் ஷாலினி ஃபெலோசிப் புரோகிராம். எந்தப் பெண்ணும் ஆதரவில்லாமல் படிக்காமல் போய்விடக்கூடாது என்ற எண்ணம்” என்று விரிவாகப் பேசுகிறார் குசும். சிறந்த கல்வியாளரான குசும், மிகப் பழைமையான மாண்டிசாரி பள்ளியான பால்நிலையாவின் முக்கிய முகம் இவர்.

image


இளமையில் கல்வி

பெண்களை இளமைக் காலத்திலேயே அவர்களை பயிற்சிக்கு எடுத்துக்கொள்ளும் உதயன், சமகால வேலைவாய்ப்பு சந்தையை எதிர்கொள்ளவும் தயார்படுத்தி விடுகிறது. தேர்ந்தெடுக்கும் முறை மற்றும் பாதுகாவலராக இருப்பதற்கான நடைமுறைகள் பற்றி குசும் விவரிக்கிறார், “தேசிய நுழைவுத் தேர்வு மூலம் ஒன்பதாம் வகுப்பு மாணவிகளை அரசுப் பள்ளிகளில் இருந்து தேர்ந்தெடுக்கிறோம். எழுத்துத் தேர்வு முடித்தவர்களுக்கு நேர்முகத் தேர்வு, பிறகு அவர்களை அதிலிருந்து தேர்வு செய்து அவர்களது வீடுகளுக்குச் சென்று பார்த்து ஆதரவுக்கான தேவையை கண்டறிவோம். தேர்ந்தெடுக்கப்பட்ட பின் அவர்கள் உறுதிமொழிகளால் கட்டுப்படுத்தப்பட்டு உதயன் ஷாலினி ஃபெலோஷிப்புக்கு எடுத்துக்கொள்ளப்படுவார்கள். அவர்களுக்கு ஐந்து, ஆறு ஆண்டுகள் உதவி செய்யப்படும். அவர்கள் பட்டப்பிடிப்பை அல்லது சிறப்புப் படிப்பை முடிக்கும்வரை ஆதரவு தொடரும்” என்கிறார்.

பிரத்யேக அம்சங்கள்

உதயன் ஷாலினி ஃபெலோசிப் (USF) என்பது வெறுமனே கல்வி உதவித் தொகை மட்டுமல்ல, அதையும் தாண்டிய ஆதரவு. “பிரமிடு வழிகாட்டுதலின் உச்சம், பெண்களின் முழுமையான வளர்ச்சிக்கு அது உத்தரவாதம் அளிக்கிறது. இளம் தொழில் முனைவோர், கல்வியாளர்கள், நிபுணர்கள் எல்லாம் மாற்றத்தில் முனைப்புடன் இருக்கிறார்கள். அவர்கள் மூத்த வழிகாட்டிகள் மற்றும் பெண்கள் குழுக்களுடன் இணைந்துகொள்வார்கள். ஒவ்வொரு குழுவும் மூத்த ஷாலினி உறுப்பினரால் ஆதரிக்கப்படும். அவர் வழிகாட்டி சகோதரி(didi,), இளம் ஷாலினிக்களின் பிரச்சனைகளைப் புரிந்துகொள்வார். அந்த சகோதரிகள் இளம் ஷாலினிக்களுக்கு உத்வேகமூட்டுவார்கள்” என்கிறார் உதயன் கேர் கொல்கத்தாவின் நிறுவனர்.

“உதயன் ஷாலினி ஃபெலோசிப் திட்டத்தில் ஆண்டு முழுவதும் பல்வேறு செயல்பாடுகள் இருக்கின்றன. பெண்கள் திறமையை வெளிப்படுத்த நிறைய வாய்ப்புகள் அளிக்கப்படுகின்றன. இந்தப் பயிற்சியின் மூலம் அவர்கள் முழுமையான வளர்ச்சியை அடைகிறார்கள். அது அவர்களை சொந்தக் காலில் நிற்கவைக்கிறது. பயிற்சி முகாம்களில் ஷாலினிகள் தங்களை மேம்படுத்திக்கொள்வது மாதிரி டிசைன் செய்யப்பட்டிருக்கின்றன. அவர்களுடைய தனித்திறமையைக் கண்டறிந்து முன்னேறும் பாதையை அவை காட்டுகின்றன. பல்வேறு வேலைகள் பற்றிய தகவல்களைத் தெரிந்துகொள்வதற்கு பயிற்சி முகாம்கள் சிறந்த வழிகாட்டுதலாக இருக்கின்றன.

தொழில்துறை, ஊடகம், மார்க்கெட்டிங், தகவல் தொழில்நுட்பம், சில்லறை வர்த்தகம், பார்மாசூடிக்கல்ஸ், பேஷன் மற்றும் உடைகள் போன்ற பல்வேறு துறைசார்ந்த வல்லுநர்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வதால், இளம்பெண்கள் அவர்களுக்குப் பிடித்த துறைகளைத் தேர்ந்தெடுத்துக்கொள்வதற்கும், தங்கள் கனவுகளி்ன் எதார்த்தத்தைப் புரிந்துகொள்வதற்கும் பயன்படுகிறது. மேலும், புதுமையான விளக்கக்காட்சிகள், இசை, நாடகங்கள் எல்லாமும் இளம் பெண்களுக்குள் ஒரு உரையாடலை நிகழ்த்த சாதகமாக இருக்கின்றன. ஷாலினிகள் ஓவியம், இசை, விளையாட்டு ஆகியவற்றிலும் இளம் ஷாலினிகள் ஈடுபடுவதன் மூலம் உலகம் பற்றிய அவர்களுடைய விழிப்புணர்வு விரிவடைகிறது” என்று தெளிவாக விவரிக்கிறார் குசும் பண்டாரி.

image


புதிய வழிகளைக் கண்டறியவும், பொருளாதார சுதந்தரத்தின் முக்கியத்துவத்தை அறிந்துகொள்ளவும் ஷாலினிக்களுக்கு பயிற்சி முகாம்கள் பயன்படுகின்றன. எல்லா ஷாலினிக்களும் சமூகப் பணியில் ஆண்டுக்கு 50 மணி நேரம் ஈடுபடுகிறார்கள். சமூகப் பிரச்சாரம் மூலம் சமூகத்திற்கு திரும்பச் செலுத்தவேண்டிய கடமையைப் புரிந்துகொள்கிறார்கள்.

உதயன் ஷாலினி திட்டங்கள் இளம் பெண்களின் வளர்ச்சி மற்றும் வளமையைத் தாண்டி, அவர்களுடைய குடும்பங்கள் மற்றும் சமூகத்தில் பெண்களின் உரிமைகளைப் பற்றிய பார்வையை மாற்றிக்கொள்ள உதவுகிறது. ஷாலினியின் சகோதரிகள், சக தோழிகள் தங்களுடைய எதிர்காலம் பற்றிய நம்பிக்கையுன் இருக்கிறார்கள். 2017ம் ஆண்டில் ஆயிரம் பெண்கள் இங்கிருந்து முன்னேறிச் செல்வார்கள் என்று கொல்கத்தா உதயன் நம்பிக்கை வைத்திருக்கிறது.

image


தாக்கம்

இந்த உதயன் ஷாலினி திட்டத்தின் விளைவு மிகப்பெரியது. ஷாலினிப் பெண்கள் இந்தியாவின் பன்னாட்டு நிறுவனங்கள், ஐஐடிகள், புகழ்பெற்ற ஆய்வு நிறுவனங்களில் வேலை செய்துகொண்டிருக்கிறார்கள். “கல்வியில் சிறந்தவர்களாக ஷாலினிகள் இருக்கிறார்கள். கண்ணியமான பெண்களாக உள்ளனர். அவர்கள் பட்டதாரிகளாக, பொறுப்புள்ள குடிமக்களாக, தங்களுடைய கருத்துகளைச் சொல்கிறவர்களாக, சுயமாக முடிவெடுக்கிறவர்களாக இருக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் முதல் தலைமுறை கல்வி பயில்கிறவர்கள், தங்களுடைய சமூகத்தில் ரோல்மாடல்களாக நம்பிக்கையின் முகங்களாக இருக்கிறார்கள்” என்று அறிவிக்கிறார் குசும் பண்டாரி.

Add to
Shares
2
Comments
Share This
Add to
Shares
2
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக