தீபாவளியன்று 30 லட்சம் வீடுகளுக்கு பசுமை மின்சாரம் வழங்கிய அதானி நிறுவனம்!

சூரிய ஒளி மற்றும் காற்றாலை மூலம் 30 லட்சம் வீடுகளுக்கு மின்சாரம் வழங்கிய அதானி நிறுவனம், புதுப்பிக்கத்தக்க ஆதாரங்களில் இருந்து 1,200 மெகாவாட் மின்சாரத்தை வழங்கியுள்ளது.

தீபாவளியன்று 30 லட்சம் வீடுகளுக்கு பசுமை மின்சாரம் வழங்கிய அதானி நிறுவனம்!

Tuesday November 14, 2023,

2 min Read

சூரிய ஒளி மற்றும் காற்றாலை மூலம் 30 லட்சம் வீடுகளுக்கு மின்சாரம் வழங்கிய அதானி நிறுவனம், புதுப்பிக்கத்தக்க ஆதாரங்களில் இருந்து 1,200 மெகாவாட் மின்சாரத்தை வழங்கியுள்ளது.

அதானி எலெக்ட்ரிசிட்டி மும்பை லிமிடெட் (ஏஇஎம்எல்) தீபாவளியன்று மூன்று மில்லியன் வீடுகள் மற்றும் நிறுவனங்களுக்கு நான்கு மணிநேரத்திற்கு தடையில்லாத புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை வழங்கியதாக நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

"நவம்பர் 12, 2023 அன்று, காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை, சூரிய ஒளி மற்றும் காற்று உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க ஆதாரங்களை நம்பி எங்கள் வாடிக்கையாளர்களின் மின்சாரத் தேவைகளைப் பூர்த்தி செய்தோம். இந்தத் தடையில்லா 4 மணி நேரத்தில், வரலாற்றில் முதல் முறையாக, 12 மில்லியன் மும்பைவாசிகளில், மூன்று மில்லியன் வீடுகள் மற்றும் நிறுவனங்கள் முற்றிலும் சுத்தமான புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களால் இயக்கப்படுகின்றன," என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Adani group

நிச்சயமாக, சூரிய சக்தி போன்ற புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பகல் நேரங்களில் அதன் உச்சத்தில் கிடைக்கிறது. 24 மணிநேரமும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கான சேமிப்பு அமைப்புகள் இல்லாத நிலையில், இரவு நேரத் தேவை பெரும்பாலும் நிலக்கரியில் இயங்கும் மின்சாரத்தின் மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது.

2023 ஆம் ஆண்டில், AEML தனது நுகர்வோரின் மின்சாரத் தேவைகளில் 38 சதவிகிதம் வரை புதுப்பிக்கத்தக்க ஆதாரங்களில் இருந்து வெற்றிகரமாக பூர்த்தி செய்தது. மேலும், 2027ல் 60 சதவீதத்தை எட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதானி மின்சாரத்தின் நிர்வாக இயக்குனர் கந்தர்ப் படேல் கூறுகையில்,

"100 சதவீத புதுப்பிக்கத்தக்க ஆற்றலை அடைவது மும்பையின் ஆற்றல் மாற்றத்தில் ஒரு முதல் மற்றும் குறிப்பிடத்தக்க மைல்கல் ஆகும், புதுப்பிக்கத்தக்க சக்திகள் மும்பை நகரத்தை போட்டி கட்டணத்தில் நம்பகமான மற்றும் நிலையான மின்சாரத்துடன் கணிசமாக ஆற்ற முடியும் என்பதை நிரூபிக்கிறது."

அதானி குழுமத்தின் ஒரு பகுதியான AEML, மின் உற்பத்தி, பரிமாற்றம் மற்றும் சில்லறை மின்சார விநியோகம் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த வணிகமாகும். இது 400 சதுர கிமீ பரப்பளவில் மூன்று மில்லியன் நுகர்வோருக்கு சேவை செய்கிறது. மும்பை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் 99.99 சதவீத நம்பகத்தன்மையுடன் 2,000 மெகாவாட் மின் தேவையை பூர்த்தி செய்கிறது, இது நாட்டிலேயே மிக உயர்ந்தது மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பங்களின் உதவியுடன் சிறந்த வாடிக்கையாளர் பராமரிப்பு சேவைகளை வழங்குகிறது.