பிரபலங்கள் உட்பட 7 லட்சம் ஃபாலோயர்களை ட்விட்டரில் கடந்த மலாலா!

YS TEAM TAMIL
12th Jul 2017
 • Share Icon
 • Facebook Icon
 • Twitter Icon
 • LinkedIn Icon
 • Reddit Icon
 • WhatsApp Icon
Share on

இளம் வயதிலியே அமைதிக்கான நோபல் பரிசை பெற்ற மலாலா யூசுப்சாய் ட்விட்டரில் கடந்த வாரம் இணைந்தார். பாகிஸ்தானை சேர்ந்த இவர், தாலிபானுக்கு எதிராக, பெண்களின் கல்வி உரிமைக்கு குரல் கொடுத்து உலகம் முழுவதும் பிரபலமானார். இதனால், தாலிபான் இவரை சுட்டு கொல்லவும் முயற்சித்தனர், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய மலாலா, தனது கல்வியை தொடர்ந்தார்.

தற்போது தனது 19-வது வயதில் பள்ளிப் படிப்பை முடித்த மலாலா ட்விட்டரில் இணைந்துள்ளார். அவர் இணைந்து அரை மணி நேரத்துக்குள் 7 லட்சம் ஃபாலோயர்ஸ்களை கடந்துள்ளார். ட்விட்டரில் அவர்,

image


“ஹாய் ட்விட்டர், பள்ளியில் இன்று என் கடைசி நாள் ஆனால் ட்விட்டரில் முதல் நாள்” என்று தன் முதல் ட்வீட்டை செய்தார். 

இணைந்த 24 மணிநேரத்திற்குள் எதிர்பாரா வரவேற்பு மலாலாவுக்கு கிடைத்துள்ளது. உலகளாவிய பல பிரபலங்கள் மலாலாவை ட்விட்டர்க்கு வரவேற்றனர். மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ், லண்டன் மேயர், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடியூ, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜிரிவால் உட்பட பலர் மலாலாவை வரவேற்று, அவரை ட்விட்டரில் பின்தொடர்கின்றனர்.

மலாலா, தாமதமாக ட்விட்டரில் இணைந்து இருந்தாலும், கல்வி ஆர்வலராக அதை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என அறிந்து இருக்கிறார். தன் ட்விட்டர் பக்கத்தில் பெண் கல்விக்காக தான் அடுத்து செய்ய இருப்பதை பதிவிட்டு வருகிறார், அடுத்த வாரம் மத்திய கிழக்கு, ஆப்ரிக்கா, லத்தின் அமெரிக்கா நாடுகளுக்கு சென்று அங்குள்ள பெண் குழந்தைகளை சந்திக்கவுள்ளதாக மலாலா ட்வீட் செய்துள்ளார். ஏற்கனவே ’மலாலா ஃப்ண்டு’ என்ற தனது நிறுவனத்திற்கான ட்விட்டர் பக்கத்தில் பெண்களுக்கு பாதுகாப்பான, முழுமையான மற்றும் தரமான கல்விகாக அந்நிறுவனம் மேற்கொள்ளும் அனைத்து பணிகள் பற்றியும் ட்வீட் செய்யப்பட்டு வருகிறது.

ட்விட்டர் மூலமாக, பெண் கல்விக்கு தொடர்ந்து குரல் கொடுக்கப்போவதாகவும், தன்னுடன் அனைவரையும் இணையுமாறும் மலாலா ட்விட்டரில் அழைப்பு விடுத்துள்ளார்

 • Share Icon
 • Facebook Icon
 • Twitter Icon
 • LinkedIn Icon
 • Reddit Icon
 • WhatsApp Icon
Share on
Report an issue
Authors

Related Tags