பதிப்புகளில்

இந்தியாவில் ஆண்டிற்கு 7 லட்சம் பேர் புற்றுநோயால் உயிரிழப்பு- எதிர்த்து போராடும் சுகாதார அமைச்சகம்

YS TEAM TAMIL
25th Sep 2017
Add to
Shares
7
Comments
Share This
Add to
Shares
7
Comments
Share

இந்தியாவில் புற்றுநோயின் ஆபத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு வருடமும் 10 லட்சம் பேருக்கு இந்த நோய் இருப்பது கண்டறியப்படுகிறது. இதில் சுமார் 7 லட்சம் பேர் உயிரிழந்துவிடுகின்றனர். புற்றுநோய் உயிரிழப்புக்கான முக்கியக் காரணங்களில் ஒன்றாக உள்ளது. மற்றொரு புறம் இந்நோய் குறித்த முறையான விழிப்புணர்வு இல்லை. நோயாளி இறுதி நிலையை அடையும்போதே நோய் இருப்பது கண்டறியப்படுகிறது. மேலும் சிகிச்சைக்கு அதிக செலவு செய்ய நேர்வதால் நோயாளிகளை சென்றடைய முடிவதில்லை.

இந்த இடைவெளியைச் சரிசெய்ய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் ஏற்கெனவே இருக்கும் 31 மையங்களுடன் 49 புதிய புற்றுநோய் மையங்களை அமைக்க திட்டமிட்டுள்ளது. இவை அடுத்த மூன்றாண்டுகளில் அமைக்கப்படும். புதிய மையங்களை அமைப்பது என்பது துவக்கத்திலிருந்து உருவாக்குவதல்ல. அனைத்து மாநிலங்களிலும் ஏற்கெனவே இருக்கும் க்ளினிக்குகளை மேம்படுத்தும் பணி மேற்கொள்ளப்படும். இதனால் நோய் கண்டறிவதற்கும் சிகிச்சைக்கும் அதிக தூரம் பயணிக்கவேண்டிய அவசியம் இருக்காது.

பட உதவி: Helath Orange

பட உதவி: Helath Orange


தி டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் தகவல்படி சுகாதார அமைச்சகத்தின் ஒரு அதிகாரி குறிப்பிடுகையில்,

இந்தியா முழுவதும் சிகிச்சைக்கான வாய்ப்புகளை வழங்கவேண்டும் என்பதே நோக்கமாகும். இதனால் நோயாளிகள் டெல்லி மற்றும் மும்பைக்குப் பயணம் செய்யவேண்டிய அவசியமில்லை. அப்படிப்பட்ட பயணச் செலவுகள் தங்கும் செலவுகள் உள்ளிட்ட கூடுதல் செலவுகள் தவிர்க்கப்படும்.

போதுமான மையங்கள் இல்லாததும் விழிப்புணர்வு இல்லாததும் மட்டுமே பிரச்சனையல்ல. 1,200 கதிரியக்க இயந்திரங்கள் இருக்கவேண்டிய நிலையில் வெறும் 600 இயந்திரங்களே உள்ளன.

அடுத்து வரும் ஆண்டுகளில் புற்றுநோயால் ஏற்படக்கூடிய உயிரிழப்புகள் அதிகரிக்கும் என ICMR கணிப்பதாக ஹஃபிங்க்டன் போஸ்ட் தெரிவிக்கிறது. 2020-ம் ஆண்டிற்குள் கிட்டத்தட்ட 17 லட்சம் பேருக்கு புற்றுநோய் உண்டாகக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் புற்றுநோயால் ஏற்படக்கூடிய உயிரிழப்புகள் 20 சதவீதம் அதிகரிக்கும். 600 கதிரியக்க இயந்திரங்களை ஒரே நாளில் வாங்க இயலாது என்றாலும் 2018-ம் ஆண்டு இறுதிக்குள் குறைந்தது 200 இயந்திரங்களை வாங்க அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

பட உதவி: Shutterstock

பட உதவி: Shutterstock


மையங்கள் உட்பட இதற்கான மொத்த செலவு சுமார் 3,495 கோடி ரூபாய் ஆகும் என சுகாதார அமைச்சகம் மதிப்பிடுகிறது. ப்ராஜெக்ட் குறித்த விவரங்கள் பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

கட்டுரை : Think Change India

Add to
Shares
7
Comments
Share This
Add to
Shares
7
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக