Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory
search

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ADVERTISEMENT
Advertise with us

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் என்ன?

தமிழ் நாட்டில் புதிய தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 50 சதவீத இருக்கையில் பயணிகள் அனுமதியோடு பஸ் போக்குவரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரெயிலிலும் 50 சதவீத இருக்கையுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் என்ன?

Sunday June 20, 2021 , 5 min Read

தமிழ்நாட்டில் ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் கூடுதல் நேரத்தளர்வு மற்றும் கூடுதல் செயல்பாடுகள் அனுமதிக்கப்பட்டுள்ளன.


நோய்த்தொற்று பரவல் அடிப்படையில் மாவட்டங்கள் மூன்றாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. சென்னை, செங்கல்பட்டு. திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்கள் 3 வது வகையில் இடம்பெற்றுள்ளன.

லாக்டவுன் போஸ்டர்

இந்த மாவட்டங்களுக்கான தளர்வுகள் தொடர்பாக, தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:


வகை 3-ல்‌ உள்ள 4 மாவட்டங்களில்‌ ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள சில செயல்பாடுகளுக்கான நேரத்‌ தளர்வுகளும்‌, கூடுதலாக கீழ்க்கண்ட செயல்பாடுகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.


  • தனியாக செயல்படுகின்ற மளிகை, பலசரக்குகள்‌, காய்கறிகள்‌, இறைச்சி மற்றும்‌ மீன்‌ விற்பனை செய்யும்‌ கடைகள்‌ காலை 6.00 மணி முதல்‌ மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்‌.


  • காய்கறி, பழம்‌ மற்றும்‌ பூ விற்பனை செய்யும்‌ நடைபாதைக்‌ கடைகள்‌ காலை 6.00 மணி முதல்‌ மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்‌.


  • உணவகங்கள்‌ மற்றும்‌ அடுமணைகளில்‌ (hotels, restaurants and bakeries) பார்சல்‌ சேவை மட்டும்‌ காலை 6.00 மணி முதல்‌ இரவு 9.00 மணி வரை அனுமதிக்கப்படும்‌. மின்‌ வணிகம்‌ (e-commerce) மூலம்‌ உணவு விநியோகம்‌ செய்யும்‌ அனைத்து மின்‌ வணிக நிறுவனங்கள்‌ மேற்கண்ட நேரங்களில்‌ மட்டும்‌ செயல்பட அனுமதிக்கப்படும்‌.


  • இதர மின்‌ வணிக சேவை நிறுவனங்கள்‌ (E-Commerce) அனைத்தும்‌ காலை 06.00 மணி முதல்‌ இரவு 09.00 வரை இயங்கலாம்‌.


  • இனிப்பு மற்றும்‌ காரவகை விற்பனை செய்யும்‌ கடைகள்‌ காலை 6.00 மணி முதல்‌ இரவு 9.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்‌.


  • குழந்தைகள்‌, சிறார்கள்‌, மாற்றுத்‌ திறனாளிகள்‌, முதியோர்‌, மனநலம்‌ பாதிக்கப்பட்டவர்கள்‌, ஆதரவற்றவர்கள்‌, பெண்கள்‌, விதவைகள்‌ ஆகியோருக்கான இல்லங்கள்‌ மற்றும்‌ இவை தொடர்புடைய போக்குவரத்து இ- பதிவில்லாமல்‌ அனுமதிக்கப்படும்‌.


  • சிறார்களுக்கான கண்காணிப்பு / பராமரிப்பு, சீர்திருத்த இல்லங்களில்‌ பணிபுரிவோர்‌ இ- பதிவில்லாமல்‌ அனுமதிக்கப்படுவர்‌.


  • அனைத்து வகையான கட்டுமானப்‌ பணிகள்‌ அனுமதிக்கப்படும்‌.


  • அனைத்து அரசு அலுவலகங்கள்‌, 100% பணியாளர்களுடன்‌ செயல்பட அனுமதிக்கப்படும்‌.


  • சார்‌ பதிவாளர்‌ அலுவலகங்கள்‌ முழுமையாக இயங்க அனுமதிக்கப்படும்‌.


  • அனைத்து தனியார்‌ நிறுவனங்கள்‌, 50% பணியாளர்களுடன்‌ அனுமதிக்கப்படும்‌.


  • ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள ஏற்றுமதி நிறுவனங்கள்‌, ஏற்றுமதி நிறுவனங்களுக்கு இடுபொருள்‌ தயாரித்து வழங்கும்‌ நிறுவனங்கள்‌ 100 சதவிகிதம்‌ பணியாளர்களுடன்‌ நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப்‌ பின்பற்றி தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படும்‌.


  • இதர தொழிற்சாலைகளும்‌ 50 சதவிகிதம்‌ பணியாளர்களுடன்‌ நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப்‌ பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும்‌.


  • மின்‌ பணியாளர்‌ (Electricians), பிளம்பர்கள்‌ (Plumbers), கணினி மற்றும்‌ இயந்திரங்கள்‌ பழுது நீக்குபவர்‌ (Motor Technicians) மற்றும்‌ தச்சர்‌ போன்ற சுயதொழில்‌ செய்பவர்கள்‌ சேவை கோருபவர்‌ வீடுகளுக்குச்‌ சென்று பழுது நீக்கம்‌ செய்ய காலை 6.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை இ- பதிவுடன்‌ அனுமதிக்கப்படுவர்‌.


  • மின்‌ பொருட்கள்‌, பல்புகள்‌, கேபிள்கள்‌, ஸ்விட்சுகள்‌ மற்றும்‌ ஒயர்கள்‌ விற்பனை செய்யும்‌ கடைகள்‌ காலை 9.00 மணி முதல்‌ மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்‌.


  • மிதிவண்டி மற்றும்‌ இருசக்கர வாகனங்கள்‌ பழுது நீக்கும்‌ கடைகள்‌ காலை 9.00 மணி முதல்‌ மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்‌.


  • ஹார்டுவேர்‌ கடைகள்‌ காலை 9.00 மணி முதல்‌ மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்‌.


  • வாகனங்களின்‌ உதிரிபாகங்கள்‌ விற்பனை செய்யும்‌ கடைகள்‌ காலை 9.00 மணி முதல மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்‌.


  • கல்விப்‌ புத்தகங்கள்‌ மற்றும்‌ எழுதுபொருட்கள்‌ விற்பனை செய்யும்‌ கடைகள்‌ காலை 9,00 மணி முதல்‌ மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்‌.


  • வாகன விநியோகஸ்தர்களது வாகன பழுதுபார்க்கும்‌ மையங்கள்‌ காலை 9.00 மணி முதல்‌ மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்‌.


  • வாகனங்கள்‌ விற்பனை செய்யும்‌ நிறுவனங்கள்‌ மற்றும்‌ விநியோகஸ்தர்களது கடைகள்‌ காலை 9.00 மணி முதல்‌ மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்‌.


  • காலணிகள்‌ விற்பனை செய்யும்‌ கடைகள்‌ காலை 9.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்‌.


  • கண்கண்ணாடி விற்பனை மற்றும்‌ பழுது நீக்கும்‌ கடைகள்‌ காலை 9.00 மணி முதல மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்‌.


  • பாத்திரக்‌ கடைகள்‌, பேன்ஸி, அழகு சாதனப்‌ பொருட்கள்‌, போட்டோ/வீடியோ கடைகள்‌, சலவைக்‌ கடைகள்‌. தையல்‌ கடைகள்‌, அச்சகங்கள்‌, ஜெராக்ஸ்‌ கடைகள்‌ காலை 9,00 மணி முதல்‌ மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்‌.


  • மண்பாண்டம்‌ மற்றும்‌ கைவினைப்‌ பொருட்கள்‌ தயாரித்தல்‌ மற்றும்‌ விற்பனை காலை 9.00 மணி முதல்‌ மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்‌.


  • தேநீர்க்‌ கடைகளில்‌ காலை 6.00 மணி முதல்‌ மாலை 7.00 மணி வரை பார்சல்‌ சேவை மட்டும்‌ அனுமதிக்கப்படும்‌.


  • மிக்சி, கிரைண்டர்‌, தொலைக்காட்சி போன்ற வீட்டு உபயோக மின்‌ பொருட்களின்‌ விற்பனை மற்றும்‌ பழுதுநீக்கும்‌ கடைகள்‌ காலை 9.00 மணி முதல்‌ மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்‌.


  • செல்பேசி மற்றும்‌ அதனைச்‌ சார்ந்த பொருட்கள்‌ விற்பனை செய்யும்‌ கடைகள்‌ காலை 9,00 மணி முதல்‌ மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்‌.


  • சாலையோர உணவுக்‌ கடைகளில்‌ பார்சல்‌ சேவை மட்டும்‌ காலை 6.00 மணி முதல்‌ மாலை 7.00 மணி வரை அனுமதிக்கப்படும்‌.


  • கணினி வன்பொருட்கள்‌, மென்பொருட்கள்‌, மின்னனு சாதனங்களின்‌ உதிரிபாகங்கள்‌ (Computer Hardware, Software, Electronic Appliance Spare Parts) விற்பனை செய்யும்‌ கடைகள்‌ காலை 9.00 மணி முதல மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்‌.


  • கட்டுமானப்‌ பொருட்கள்‌ விற்பனை செய்யும்‌ கடைகள்‌ காலை 9.00 மணி முதல்‌ மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்‌.


  • சலூன்கள், அழகு நிலையங்கள்‌, சலூன்கள்‌ (Beauty Parlour, Saloons, Spas) குளிர்‌ சாதன வசதி இல்லாமலும்‌, ஒரு நேரத்தில்‌ 50 சதவிகித வாடிக்கையாளர்கள்‌ மட்டும்‌ அனுமதிக்க வேண்டும்‌ என்ற நிபந்தனையுடன்‌ காலை 6.00 மணி முதல்‌ மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்‌.


  • காலை 6.00 மணி முதல்‌ மாலை 7.00 மணி வரை விளையாட்டுப் பயிற்சி குழுமங்கள்‌ இயங்கவும்‌, பார்வையாளர்கள்‌ இல்லாமல்‌, திறந்த வெளியில்‌ விளையாட்டுப்‌ போட்டிகள்‌ நடத்தவும்‌, அனுமதிக்கப்படும்‌.


  • பள்ளி, கல்லூரிகள்‌, பல்கலைக்கழகங்கள்‌ மற்றும்‌ பயிற்சி நிலையங்களில்‌ மாணவர்‌ சேர்க்கை தொடர்பான நிர்வாகப்‌ பணிகள்‌ அனுமதிக்கப்படும்‌.


  • திரைப்படம்‌ மறறும்‌ சின்னத்திரை படப்பிடிப்புகள்‌ 100) நபர்கள்‌ மட்டும்‌ பணிபுரியும்‌ வகையில்‌ நடத்த அனுமதிக்கப்படும்‌. படப்பிடிப்பில்‌ பங்கேறறும்‌ பணியாளர்கள்‌ / கலைஞர்கள்‌ அவசியம்‌ கொரோனா பரிசோதனை மேற்கொண்டு படப்பிடில்‌ கலந்து கொள்ள வேண்டும்‌.


  • படப்பிடிப்புகளுக்கு பிந்தைய தயாரிப்பு பணிகள்‌ அனுமதிக்கப்படும்‌. திரையரங்குகளில்‌, தொடர்புடைய வட்டாட்சியரின்‌ அனுமதி பெற்று வாரத்தில்‌ ஒரு நாள்‌ மட்டும்‌ பராமரிப்பு பணி மேற்கொள்ள அனுமதிக்கப்படும்‌.


  • மாவட்டத்திற்குள்‌ பொது பேருந்து போக்குவரத்து, நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப்‌ பின்பற்றி, குளிர்‌ சாதன வசதி இல்லாமலும்‌, 50% இருக்கைகளில்‌ மட்டும்‌ பயணிகள்‌ அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும்‌.
பஸ்

போக்குவரத்து


  • நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப்‌ பின்பற்றி மெட்ரோ இரயில்‌ போக்குவரத்து, 50% இருக்கைகளில்‌ மட்டும்‌ பயணிகள்‌ அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும்‌.


  • சென்னை, திருவள்ளூர்‌, காஞ்சிபுரம்‌ மற்றும்‌ செங்கல்பட்டு மாவட்டங்களுக்கிடையே பொது பேருந்து போக்குவரத்து, நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப்‌ பின்பற்றி, குளிர்‌ சாதன வசதி இல்லாமலும்‌, 50% இருக்கைகளில்‌ மட்டும்‌ பயணிகள்‌ அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும்‌.


  • வாடகை வாகனங்கள்‌, டேக்ஸிகள்‌ மற்றும்‌ ஆட்டோக்களில்‌ பயணிகள்‌ இ- பதிவில்லாமல்‌ செல்ல அனுமதிக்கப்படுவர்‌. மேலும்‌, வாடகை டேக்ஸிகளில்‌, ஒட்டுநர்‌ தவிர மூன்று பயணிகளும்‌, ஆட்டோக்களில்‌, ஒட்டுநர்‌ தவிர இரண்டு பயணிகள்‌ மட்டும்‌ பயணிக்க அனுமதிக்கப்படுவர்‌.


  • வீட்டு வசதி நிறுவனம்‌ (HFCs) வங்கி சாரா நிதி நிறுவனங்கள்‌ (NBFCs) குறு நிதி நிறுவனங்கள்‌ (MFIs) 50 சதவிகித பணியாளர்களுடன்‌ செயல்பட அனுமதிக்கப்படும்‌.


பொது


திருமண நிகழ்வுகளுக்கு, வகை 2 மற்றும்‌ 3-ல்‌ குறிப்பிட்டுள்ள மாவட்டங்களுக்கிடையே இ- பாஸ்‌ பெற்று பயணம்‌ செய்ய அனுமதிக்கப்படும்‌. இதற்கான இ- பாஸ்‌ திருமணம்‌ நடைபெற உள்ள மாவட்டத்தின்‌ மாவட்ட ஆட்சியரிடமிருந்து இணையவழியாக (https://eregister.tnega.org/) விண்ணப்பித்து பெற்றுக்‌ கொள்ளலாம்‌. மேலும்‌, திருமண நிகழ்வுகளில்‌ 50 நபர்கள்‌ மட்டும்‌ கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர்‌.


நீலகிரி மாவட்டம்‌, கொடைக்கானல, ஏற்காடு, ஏலகிரி, குற்றாலம்‌ பகுதிகளுக்கு அவசர காரணங்களுக்காக பயணிக்க தொடர்புடைய மாவட்ட ஆட்சியர்களிடமிருந்து இ- பாஸ்‌ பெற்று பயணிக்க அனுமதிக்கப்படும்‌.