பதிப்புகளில்

உங்கள் நிறுவனத்திற்கு சட்டரீதியான சேவை தேவையா?

19th Apr 2016
Add to
Shares
34
Comments
Share This
Add to
Shares
34
Comments
Share

கடந்த ஆண்டு புதுநிறுவனங்களுக்கு சட்டரீதியில் கடும் போராட்டமான ஒன்றாக இருந்தது. ஓயோ ஹோம்ஸ் என்ற நிறுவனம் தங்களது காப்புரிமை பெற்ற ஒன்றை ஜோ ஹோம்ஸ் நிறுவனத்தினர் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டினர். இதே போல உபெர் நிறுவனம் ஓலா நிறுவனத்தின் மீது குற்றம் சாட்டியது. போலியான கணக்குகள் பயன்படுத்தி கார் புக் செய்ததாகவும், உபயோகத்தில் இல்லாத தொலைபேசி எண்களைப் பயன்படுத்தி கார் புக் செய்ததாகவும் வழக்கு தொடர்ந்தனர். இதுபோன்ற பல சட்டரீதியான பிரச்சினைகளுக்கு தீர்வு சொல்லவும் உதவவும் சட்ட உதவி நிறுவனங்கள் இருக்கின்றன. அவர்களைப் பற்றி இந்த பகுதியில் காணலாம்.

image


LawRato.com

இந்த நிறுவனத்தை ரோஹன் மகாஜன் மற்றும் நிகில் சரப் ஆகிய இருவரும் இணைந்து கடந்த 2013ம் ஆண்டு துவங்கினார்கள். இவர்கள் கடந்த பிப்ரவரி 2016ம் ஆண்டு ஒரு லட்சம் டாலர் நிதியாக திரட்டினார்கள். தங்களிடம் இருக்கும் வழக்கறிஞர்கள் எண்ணிக்கையைக் கூட்டுவதற்காகவே இந்த நிதி திரட்டல் என்று தெரிவிக்கப்பட்டது. இதன்மூலம் வாடிக்கையாளர் எண்ணிக்கையையும் கூட்ட முடியும் என்று நம்புகின்றனர். லாரட்டோ தன்னிடம் இருக்கும் வழக்கறிஞர்களின் திறமையை அவ்வப்போது சோதித்து அவர்களது நம்பத்தன்மையை உறுதி செய்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. வழக்கறிஞர்களுக்காகவே தனியே பி2பி மொபைல் செயலி ஒன்றையும் உருவாக்கி இருக்கிறார்கள்.

லாரட்டோ குழு

லாரட்டோ குழு


இவர்களிடம் இணைவு பெற்ற வழக்கறிஞர்களோடு 30 நிமிடங்கள் ஆலோசனை பெறுவதற்கு 500 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஒருவேளை அவர்கள் வழங்கும் ஆலோசனை திருப்திகரமாக இல்லையென்றால் பணத்தை திருப்பியளித்துவிடுகிறார்கள். 2014 -15 நிதியாண்டில் ஒவ்வொரு மாதமும் 20 சதவீத வளர்ச்சியை இந்நிறுவனம் எட்டியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்க அம்சம். இதுவரை 65 லட்சம் ரூபாய் வருவாயாக ஈட்டியிருக்கிறார்கள். இந்த நிதியாண்டிற்குள் ஒரு கோடி வருமானத்தை ஈட்டிவிட முடியும் என்று நம்புகிறார்கள்.

பிப்ரவரி 2016 கணக்கீட்டின் படி 14000 பதிவு பெற்ற வாடிக்கையாளர்களையும் ஆயிரம் பணம் செலுத்தப்பட்ட வாடிக்கையாளர்களையும் இவர்கள் பெற்றிருக்கிறார்கள். மாதத்திற்கு அறுபதாயிரம் பார்வையாளர்களையும், ஐந்தாயிரம் லீட்கள் மற்றும் 150 பணம் செலுத்தப்பட்ட பயனர்களையும் சராசரியாக பெற்று வருகிறார்கள். இந்தியா முழுவதும் உள்ள 150 நகரங்களில் இவர்களின் வழக்கறிஞர்கள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இணையதளம் 

GetLegal to Legistify

2013ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் அக்சத் சிங்கால் என்பவர் கெட்லீகல் என்ற பெயரில் இந்நிறுவனத்தைத் துவங்கினார். இவர் பிட்ஸ் பிலானியில் பயின்றவர். இந்த இணையதளம் ஒரு கேள்வி பதில் இணைதளமாகும் ( க்வோரா போன்ற ஒன்று). தனிநபர்கள் மற்றும் தொழில்துறையைச் சேர்ந்தவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு வழக்கறிஞர்களோ, சட்டம் பயிலும் மாணவர்களோ பதிலளிக்கும் தளமாக இது இருக்கிறது. இந்த சேவை போதாது என்று உணர்ந்த இந்நிறுவனம் இத்தோடு சேர்த்து மேலும் சில சேவைகளைப் புகுத்தி லெஜிஸ்டிஃபை என்ற நிறுவனத்தைக் கடந்த ஆகஸ்ட் 2015ம் ஆண்டு துவங்கினார்கள். தன்னோடு பயின்ற ரிதேஷ் மற்றும் ஜிஎன்யூவில் பயின்ற ரவிந்திர புரோகித் ஆகிய இருவருடனும் இணைந்து இந்த நிறுவனத்தைத் துவங்கினார் அக்சத் சிங்கால்.

கடந்த டிசம்பர் 2015ல் போலிப்ளெக்ஸ் என்ற நிறுவனத்திடம் இருந்து நிதி பெற்றனர். எவ்வளவு நிதி என்ற தகவல் தெரிவிக்கப்படவில்லை. ரஞ்சித் சிங் இந்த நிறுவனத்தில் இயக்குனராக இருக்கிறார்.

லெஜிஸ்டிஃபை.காம் என்ற இந்த தளம் கடந்த 2016ம் ஆண்டு வெளியிடப்பட்டது. இந்த தளத்திற்கு வருபவர்களிடம் சில கேள்விகள் கேட்பதன் மூலமாக ஒப்பந்தம் ஒன்றை உருவாக்கி அளிக்கிறார்கள். இந்த தளம் இன்னும் முழுமையான செயல்வடிவத்திற்கு வரவில்லை. தற்போது மட்டும் 30 வகையான ஒப்பந்தங்களை உருவாக்கித் தருகிறார்கள். அதில் பணியாளர் தேர்ந்தெடுப்பு ஒப்பந்தம், அறிவுசார் சொத்து மேலாண்மை, வாடகைக்கு அலுவலகம் அளித்தல், கிடங்குகளை வாடகைக்கு அளித்தல், சேவை மற்றும் சந்தைப்படுத்துதல் தொடர்பான வணிக ஒப்பந்தங்கள் தற்போது கிடைக்கின்றன. அடுத்த இரண்டு மாதத்தில் முந்நூறு வகையான ஒப்பந்தங்கள் கிடைக்கப்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

இணையத்திற்கு வெளியேவும் சட்டரீதியான உதவிகளை வழங்குகிறார்கள். இதற்கென தனியே ஆலோசகர் நியமித்து புதுநிறுவனம் தொடர்பான எல்லாவகையான சட்ட உதவிகளையும் அளிக்கிறார்கள். தற்போது ஒரு ஒப்பந்தத்திற்கு ஆயிரம் ரூபாயில் இருந்து ஆயிரத்து ஐநூறு ரூபாய் வரை வசூலிக்கிறார்கள். இணையமற்ற வகையில் ஒரு ஒப்பந்தத்திற்கு ஐந்தாயிரம் ரூபாயில் இருந்து பதினைந்தாயிரம் வரை வசூலிக்கிறார்கள். இதில் சட்ட ஆலோசகர் கட்டணமும் அடங்கும்.

இவர்கள் இதுவரை 700 ஒப்பந்தங்களை உருவாக்கி இருக்கிறார்கள். இதில் 70லிருந்து 80 சதவீதத்தினர் இலவசமாக சேவை பெற்றவர்கள். காரணம் முதல் முறை பயன்படுத்துபவருக்கு இலவசமாக சேவை வழங்கினர் என்பதே. இணையத்திற்கு வெளியே இருபத்தைந்திலிருந்து முப்பது நிறுவனங்கள் சேவைக்காக அணுகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இணையதளம்

லெஜிஸ்டிஃபை நிறுவனத்தின் நிறுவனர்கள்,அக்சத் சிங்கால் மற்றும் ரித்தேஷ்

லெஜிஸ்டிஃபை நிறுவனத்தின் நிறுவனர்கள்,அக்சத் சிங்கால் மற்றும் ரித்தேஷ்


Vakilsearch

2011ம் ஆண்டு ஹ்ரிஷிகேஷ் டட்டர் இந்நிறுவனத்தைத் துவங்கினார். இவர் தேசிய சட்டக் கல்லூரியில் பயின்றவர். இந்நிறுவனம் 2015ம் ஆண்டு கலாரி கேபிடல் நிறுவனத்திடமிருந்து ஒரு தொகையை நிதியாகப் பெற்றது. புதுநிறுவனங்களுக்கு மலிவு விலையில் சட்டசேவை வழங்க வேண்டும் என்ற நோக்கத்தோடே இந்நிறுவனம் உருவாக்கப்பட்டது. ட்ரேட்மார்கை பதிவு செய்தல், சட்டரீதியான ஆவணப்படுத்துதல், நிறுவன விரிவாக்கத்திற்குத் தேவையான சட்ட உதவிகள், அறிவுசார் சொத்தைப் பாதுகாத்தல், வரி தொடர்பான சட்ட சிக்கல் போன்ற பலவற்றுக்கான தீர்வை வகீல்சர்ச் நிறுவனம் வழங்குகிறது. கணக்குவழக்கு சார்ந்த சேவையை இண்டுய்ட் என்ற நிறுவனத்தின் மூலமாக இவர்கள் வழங்குகிறார்கள். லெஜிஸ்டிஃபை என்ற நிறுவனத்தைப் போலவே இவர்களும் மேக்-எ-டாக் எனப்படும் ஆவணம் உருவாக்கும் சேவையை வழங்குகிறார்கள். அடிப்படை சட்ட ஆவணங்களை makeadoc.vakilsearch.com என்ற தளத்தில் இலவசமாக பெற முடியும்.

இணையதளம் 

MeetUrPro

இந்நிறுவனம் 2014ம் ஆண்டு ஜூலை மாதம் துவங்கப்பட்டது. திவாகர் விஜயசாரதி மற்றும் ராஜேஷ் இன்பசேகரன் ஆகிய இருவரும் இணைந்து மீட்யுவர்ப்ரோ என்ற இந்நிறுவனத்தைத் துவங்கினர். சட்டம் மற்றும் வரி தொடர்பான அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வாக மீட்யுவர்ப்ரோ இருக்கிறது. தனிப்பட்ட நபர்களுக்கான மற்றும் ஒரு நிறுவனத்திற்கான வரி தாக்கல் செய்தல், சொத்து சார்ந்த பணப்பரிமாற்றம், புகார்களை சமாளித்தல் மற்றும் நிறுவன உருவாக்கத்திற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் இவர்கள் செய்கிறார்கள். ஸ்டார்டப்க்ளீனிக் எனப்படும் சட்ட ஆலோசனை சேவையை புதுநிறுவனங்களுக்காக நீண்டகால நோக்கில் வழங்குகிறார்கள்.

திவாகர் விஜயசாரதி,இணை நிறுவனர்,மீட்யுவர்ப்ரோ.காம்

திவாகர் விஜயசாரதி,இணை நிறுவனர்,மீட்யுவர்ப்ரோ.காம்


இதில் வசூலிக்கப்படும் கட்டணம் என்பது வல்லுனர்களைப் பொருத்து மாறக்கூடியதாகும். இவர்கள் அந்த வல்லுனர்களிடமிருந்து ஒரு தொகையைக் கட்டணமாக பெறுகிறார்கள். ஒரு நிறுவனத்திற்கும் சட்டவல்லுனருக்கும் இடையே வெற்றிகரமான ஒப்பந்தம் நடைபெற்றால் மொத்த தொகையிலிருந்து ஆறிலிருந்து பத்து சதவீதத்தை கட்டணமாக வசூலிக்கிறார்கள்.

இந்நிறுவனத்தோடு இதுவரை ஆயிரம் வல்லுனர்கள் இணைவு பெற்றிருக்கிறார்கள். கடந்த நிதியாண்டில் மட்டும் இந்நிறுவனம் அரைமில்லியன் ரூபாய் வருமானமாக ஈட்டியிருக்கிறது.

இணையதளம்  

LegalRaasta

இந்நிறுவனம் கடந்த 2015ம் ஆண்டு ஜூன் மாதம் ஹிமன்சு ஜெயின் மற்றும் அவரது சகோதரர் புல்கிட் ஜெயின் ஆகியோரால் துவங்கப்பட்டது. ஹிமன்சு ஜெயின் முன்பு மெக்கின்ஸே நிறுவனத்தில் பணியாற்றியவர். கடந்த ஏப்ரல் 2016ம் ஆண்டு பிரவீன் கன்டேல்வால் மற்றும் யதின் குமாரிடம் இருந்து 6.5 கோடி ரூபாய் நிதி திரட்டினார்கள். சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்களை மையப்படுத்தியே இந்நிறுவனம் துவங்கப்பட்டது. வரி செலுத்துதல் உட்பட ஐம்பது வகையான சேவைகளை இந்நிறுவனம் வழங்குகிறது. எஃப்எஸ்எஸ்ஏஐ எனப்படும் உணவுச்சான்றிதழ், ட்ரேட்மார்க் பதிவு போன்ற சேவைகளை இவர்கள் அளிக்கிறார்கள். டெலிவரியின் போது பணம் வசூலிக்கும் முறையும் இவர்களிடம் உண்டு. சேவையில் திருப்தி இல்லையென்றால் முழு பணத்தையும் திருப்பி அளித்துவிடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வாடிக்கையாளரின் ஆவணங்களை அரசுக்கு அளிக்கும் வேலையை செய்து தர ஒரு குறிப்பிட்ட அளவு பணத்தை வசூலிக்கிறார்கள். இம்போர்ட்-எக்ஸ்போர்ட் கோடுகளுக்காக 2,999 ரூபாய் மற்றும் பிரைவேட் நிறுவனத்தைப் பதிவு செய்வதற்காக 13,999 ரூபாயை கட்டணமாக வசூலிக்கிறார்கள்.

இப்போதைக்கு 2,200 வாடிக்கையாளர்கள் இவர்களிடம் இருக்கிறார்கள். ஒரு நாளைக்கி 11,000 விசாரணைகள் இவர்களிடம் வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இணையதளம்  

லீகல்ராஸ்டா நிறுவனத்தின் குழு

லீகல்ராஸ்டா நிறுவனத்தின் குழு


பாத்லீகல் என்ற நிறுவனம் விவாகரத்து தொடர்பான சட்ட உதவிகளை வழங்குகிறார்கள். இந்த சந்தையில் பல்வேறு பிரச்சினைகள் இருக்கின்றன. எனவே தான் எல்லா நிறுவனங்களும் முதல்கட்ட நிதியோடு தங்களது நிதிதிரட்டல் வேலையை நிறுத்திக்கொள்கின்றனர். ஆனால் அமெரிக்காவில் கடந்த 2014ம் ஆண்டு 254 மில்லியன் டாலர் இந்த துறையில் முதலீடு செய்யப்பட்டது.

இதே துறையில் இருக்கும் சில நிறுவனங்கள் குறிப்பிட்ட சில சேவைகளை மட்டுமே வழங்குகிறார்கள். பிகம்ப்ளயன்ஸ் என்ற நிறுவனம் புகார் தொடர்பான உதவிகளை மட்டும் வழங்குகிறார்கள். வென்சர்ஈசி மற்றும் இண்டியாஃபில்லிங்ஸ் ஆகியோர் நிறுவன இணைப்பு மற்றும் ஒரு நபர் நிறுவனப் பதிவு ஆகிய சேவையை மட்டும் அளிக்கிறார்கள். இந்த சந்தைக்குள் பலரும் வரும்போது முதலீடு செய்வதும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

(இங்கே குறிப்பிடப்பட்டிருப்பதெல்லாம் ஒரு உதாரணம் தான். இதுபோல பல நிறுவனங்கள் சேவை அளிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது)

ஆங்கிலத்தில் : தருஷ் பல்லா | தமிழில் : ஸ்வரா வைத்தீ

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்

தொடர்பு கட்டுரைகள்:

தொடக்க நிறுவனங்களுக்கு சட்ட ஆலோசனை சேவை அளிக்கும் சென்னை 'மீட்யுவர்புரோ '

உங்கள் நிறுவனம், உங்கள் தொழில், உங்களையும் புதுப்பித்துக் கொள்ள 10 வழிகள்!

ஸ்டார்ட் அப் நிதி திரட்ட உதவும் 12 படிகள்!

Add to
Shares
34
Comments
Share This
Add to
Shares
34
Comments
Share
Report an issue
Authors

Related Tags