பதிப்புகளில்

ஃபேஷன் டிசைனர் பணியை விடுத்து ஆடு வளர்ப்பு மூலம் லட்சங்களில் வருவாய் ஈட்டும் ஸ்வேதா!

YS TEAM TAMIL
16th Feb 2018
Add to
Shares
1.1k
Comments
Share This
Add to
Shares
1.1k
Comments
Share

கால்நடை வளர்ப்பு மற்றும் பண்ணையின் வாயிலாக வளர்ச்சியடைய முடியும் என்பதில் பலருக்கு சந்தேகம் நிலவுகிறது. எனினும் இவ்வாறு உருவான கருத்தை தகர்த்து சிலர் இந்தப் பணி குறித்த பார்வையை மாற்றியுள்ளனர். அப்படிப்பட்ட சிலரில் ஒருவர்தான் ஸ்வேதா தோமர். இவர் பிரபல என்ஐஐஎஃப்டி கல்வி நிறுவனத்தில் ஃபேஷன் வடிவமைப்புத் துறையில் பட்டம் பெற்றிருப்பினும் ஆடு வளர்ப்பில் ஈடுபட தீர்மானித்தார்.

image


ஸ்வேதா 2015-ம் ஆண்டு திருமணமாகி கணவருடன் பெங்களூருவிற்கு மாற்றலானார். அந்த சமயத்தில்தான் அவரது பயணம் துவங்கியது. அப்போதே அவர் வெற்றிகரமான ஃபேஷன் டிசைனராக இருந்தார். பெங்களூரு வந்த பிறகு சொந்த தொழில் துவங்குவது குறித்து யோசித்தார்.

ஸ்வேதா ஒருமுறை தனது கணவருடன் ஒரு ஆட்டுப் பண்ணையை பார்வையிட்டார். அங்குள்ள ஆடுகளுடன் நேரம் செலவிட்டது அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. அதன் பிறகு அடிக்கடி பண்ணைக்குச் சென்று ஆடு வளர்ப்பு குறித்த நுணுக்கமான விஷயங்களை புரிந்துகொள்ளத் துவங்கினார்.

ஸ்வேதா சிறிய கிராமத்தில் பிறந்து வளர்ந்ததால் இந்த வேலையை நகரத்தில் இருந்து மேற்கொள்ள முடியாது என்பதை உணர்ந்திருந்தார். பெங்களூருவில் வசதியாக வாழ்ந்துகொண்டிருந்த சூழலை விடுத்து உத்தர்கண்ட் மாநிலத்தில் தெஹ்ராதூன் பகுதிக்கு அருகில் இருக்கும் ராணிபோக்ரி என்கிற கிராமத்திற்குச் சென்றார். தனது சேமிப்பு முழுவதையும் ஆடு வளர்ப்பு பணியைத் துவங்குவதற்காக முதலீடு செய்தார். அதன் பிற்கு விரிவாக்கப் பணிகளுக்காக வங்கியிலிருந்து கடன் வாங்கினார்.

அவரது நெருங்கிய உறவினர்கள் அனைவரும் அவரது செயலைக் கண்டு அதிர்ச்சியடைந்தாக தெரிவிக்கிறார் ஸ்வேதா. அவரது கல்வித் தகுதி குறித்து அறிந்த அனைவருமே அவர் பெருநிறுவனத்தில் அதிக சம்பளத்துடன் கூடிய பணியில் இருக்கவேண்டும் என்றே எதிர்பார்த்தனர். அவர் ஆடு வளர்ப்பில் ஈடுபடும் பணியைத் துவங்குவது குறித்து தெரிவித்தபோது பலர் அவர் தவறான முடிவெடுப்பதாகவே கருதினர்.

ஸ்வேதா வணிகம் துவங்க திட்டமிட்ட பகுதியில் ஏராளமான வன விலங்குகள் இருந்தது. இவை தனது ஆடுகளைத் தாக்கிவிடும் என அஞ்சினார். எனினும் உற்சாகமாக துவங்கிய தனது முயற்சியை எதுவும் தடை செய்யாமல் பார்த்துக்கொண்டார். 250 ஆடுகளுடன் வணிகத்தைத் துவங்க வங்கியில் கடன் வாங்கினார். அவரது பண்ணையில் நாட்டு இனங்களான ஜம்னாபாரி, தோத்தாபரி, சிரோஹி, பார்பாரி போன்றவையே இருந்தது.

ஆடுகளுக்கு முறையான பராமரிப்பும் ஊட்டச்சத்தும் அளிக்கப்படுவதாக தெரிவித்தார் ஸ்வேதா. சில சமயம் அவரே சந்தைப்பகுதிக்கு ஆடுகளை எடுத்துச் செல்கிறார். பாரம்பரிய சந்தையில் விற்பனை செய்வதுடன் இணையம் வாயிலாகவும் ஆடுகளை விற்பனை செய்கிறார்.

ஸ்வேதா கடந்த ஆண்டு 25 லட்ச ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளார். பண்ணையில் பயிற்சி அமர்வுகளையும் ஏற்பாடு செய்கிறார். இதில் பங்கேற்பவர்களை ஆடு வளர்ப்பில் ஈடுபட ஊக்குவிக்கிறார். தற்போது உத்தர்கண்ட் மாநிலத்தின் பிற பகுதிகளிலும் விரிவடைய திட்டமிட்டுள்ளார்.

கட்டுரை : Think Change India

Add to
Shares
1.1k
Comments
Share This
Add to
Shares
1.1k
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக