தமிழக விவசாயிகளுக்கு உதவிட தமிழில் ஆப்: ‘BigHaat’ அக்ரி நிறுவனம் முயற்சி!

விவசாயிகள் நலனுக்காக பிக்ஹாட் நிறுவனம் தமிழில் புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.
100 CLAPS
0

விவசாயிகள் நலனுக்காகBigHaat' நிறுவனம் தமிழில் தனது செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தியா வேளாண்மையை பெரிதும் சார்ந்துள்ள நாடு ஆகும். எனவே விவசாயத்திற்கும், உற்பத்தியை அதிகரிப்பதற்கும் தேவையான தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்துவதில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது. எனவே தான் விவசாயிகளுக்கான பிரத்யேக ஆன்லைன் தளங்கள், செயலிகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் பூச்சி மருந்து தெளிக்கும் பயிற்சிகள் அளிக்க அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல், விவசாயம் சார்ந்த புதுவித கண்டுபிடிப்புகளுக்கும் ஊக்கம் அளிக்கப்பட்டு வருகிறது.

தற்போது இந்தியாவைச் சேர்ந்த மிகப்பெரிய டிஜிட்டல் அக்ரி பிளாட்ஃபார்மான ‘பிக்ஹாட் நிறுவனம்’ தொழில்நுட்பம் மற்றும் பயிர் அறிவியலை மேம்படுத்துவதன் மூலம் தனிப்பயனாக்கப்பட்ட ஆலோசனையுடன் விவசாயத்தை மேம்படுத்துவதற்காக தமிழில் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டின் 70 சதவீத கிராமப்புற மக்களுக்கு விவசாயமே வாழ்வாதாரமாக உள்ளது. இந்திய அரசின் 10வது விவசாயக் கணக்கெடுப்பின்படி, தமிழ்நாட்டுல் 79.38 லட்சம் நில உரிமையாளர்கள் 59.71 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏப்ரல் 07, 2022 நிலவரப்பட, 2021-22 ஆம் ஆண்டில் 118.01 லட்சம் மெட்ரிக் டன் நெல் மற்றும் இதர விவசாயப் பயிர்களை தமிழ்நாடு விவசாயிகள் உற்பத்தி செய்துள்ளனர். இது கடந்த ஆண்டு உற்பத்தியான 108.24 லட்சம் மெட்ரிக் உற்பத்தியை விட ஒன்பது சதவீதம் அதிகமாகும். இது கடந்த 6 ஆண்டுகளிலேயே மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது.

பிக்ஹாட்டின் இணை நிறுவனர் மற்றும் இயக்குநர் சச்சின் நந்தவானா கூறிகையில்,

“மாநிலத்தில் உள்ள விவசாயிகள் மாறிவரும் தொழில்நுட்பங்களை ஒப்பீட்டளவில் அதிகமாக ஏற்றுக்கொள்கிறார்கள். BigHaat செயலி விவசாயிகளுக்கு செறிவூட்டப்பட்ட தரவுகளுடன் கூர்மையான முடிவெடுப்பதற்கு அதிகாரம் அளிக்க உருவாக்கப்பட்டது. இதனால் அறுவடைக்கு முந்தைய அறுவடைக்குப் பிந்தைய தேவைகளை அறிந்து கொள்ள உதவுகிறது. பயிர்களுக்கு ஏற்படும் சேதங்களைக் குறைப்பதற்கும், மகசூல் மற்றும் பயிர் தரத்தை மேம்படுத்துவதற்கும் தரமான மற்றும் சரியான நேரத்தில் தரவுகளை இந்த ஆப் வழங்க உள்ளது. விவசாயிகள் அனைத்து விவசாயத் தேவைகளுக்கும் முழுமையான விவரங்களை தமிழில் அணுகலாம்,” எனக்குறிப்பிட்டுள்ளார்.

இந்த செயலி விவசாயிகள் ஒரு சமூகமாக தங்களுக்குள் தொடர்பு கொள்ள உதவுகிறது. பிக்ஹாட் செயலி விவசாயிகளுக்கு பயிர் கட்டமைப்பு மற்றும் பரப்பு, புவிஇருப்பிடம் மற்றும் மண் வகை ஆகியவற்றின் அடிப்படையில் விவரக்குறிப்பை செயல்படுத்துகிறது.

தமிழில் பயிர் குறித்த ஆலோசனை, AI- அடிப்படையிலான நிகழ்நேர தீர்வையும், ஆபத்துக் குறைப்பில் அதிக தாக்கத்தையும் வழங்குகிறது. மேலும், இந்த செயலி நடப்பு கால பரிவர்த்தனை மற்றும் தரவுகளின் அடிப்படையில் எவற்றை பயிரிடுவது சிறந்தது என்ற ஆலோசனையும் விவசாயிகளுக்கு தமிழில் வழங்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.

சச்சின் நந்தவானா கூறுகையில்,

“உணவு தானிய உற்பத்தியில் தமிழகம் செறிவூட்டும் நிலையை எட்டியுள்ளதாக ஊடக அறிக்கைகள் சுட்டிக்காட்டினாலும், விளைச்சலை மேம்படுவதற்கான தேவைகள் இருப்பதாக நிபுணர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். BigHaat அதன் மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் தரவு நுண்ணறிவுகளுடன் இது சம்பந்தமாக விவசாய சமூகத்திற்கு தீர்வுகளை வழங்க உதவும். விவசாயிகளுக்காக ஒரு சிறப்பு கட்டணமில்லா எண் தொடங்கப்பட்டுள்ளது. இது ஒவ்வொரு விவசாயியும் தரமான தகவல்கள் அணுகுவதை உறுதி செய்வதாகும்,” எனத் தெரிவித்துள்ளார்.

விவசாயிகள் கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து இச்செயலியைப் பதிவிறக்கம் செய்யலாம் அல்லது 180030002434 என்ற எண்ணில் மிஸ்டு கால் மூலம் வேளாண் நிபுணர்களுடன் பேசலாம் அல்லது www.BigHaat.com இல் உள்நுழைந்து தளத்திலிருந்து தகவல்களை நேரடியாக பெறலாம் என பல்வேறு வழிகளிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஆப் டவுன்லோட் செய்ய: BigHaat

Latest

Updates from around the world