Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory
search

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ADVERTISEMENT

வேளாண் பட்ஜெட் 2023: நம்மாழ்வார் விருது முதல் விவசாயிகள் மானியம் வரை; முக்கிய அறிவிப்புகள் என்ன?

திமுக அரசு பொறுப்பேற்று 3வது முறையாக காகிதமில்லா வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இன்று சட்டமன்றத்தில் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார்.

வேளாண் பட்ஜெட் 2023: நம்மாழ்வார் விருது முதல் விவசாயிகள் மானியம் வரை; முக்கிய அறிவிப்புகள் என்ன?

Tuesday March 21, 2023 , 5 min Read

திமுக அரசு பொறுப்பேற்று 3வது முறையாக காகிதமில்லா வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இன்று சட்டமன்றத்தில் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். அப்போது பேசிய அவர்,

கிராமங்களின் தன்னிறைவுக்கு கலைஞரின் “அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம்” வரும் ஆண்டில் இத்திட்டம் 2,504 கிராம ஊராட்சிகளில் செயல்படுத்துவதற்கு 230 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தார்.

வேளாண் துறையில் வெளியிடப்பட்டுள்ள முக்கிய அறிவிப்புகள் குறித்து பார்க்கலாம்...

வீடு தோறும் தென்னை:

  • ஒவ்வொரு கிராமப் பஞ்சாயத்திலும், தென்னை மரங்கள் இல்லாத 300 குடும்பங்களுக்கு தலா இரண்டு தென்னங்கன்றுகள் வீதம் மொத்தம் 15 லட்சம் தென்னங்கன்றுகள் இலவசமாக 2,504 கிராமப் பஞ்சாயத்துகளில் வழங்கப்படும்.

  • ஒவ்வொரு கிராமங்களிலும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படும் தலா பலா, போன்ற 300 குடும்பங்களுக்கு மா, கொய்யா, நெல்லி, எலுமிச்சை, சீதாப்பழம் விநியோகத்திற்காக ரூ.15 கோடி ஒதுக்கீடு

  • விவசாயிகளின் வயல்களில் 600 பண்ணைக் குட்டைகள் அமைத்து, கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர வழிவகை செய்யப்படும். மேலும் இப்பண்ணைக் குட்டைகளில் மீன்வளத்துறை மூலமாக மீன் குஞ்சுகள் வளர்த்து, கூடுதல் வருமானம் ஈட்டிடவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

  • ஆதிதிராவிடர், விவசாயிகளின் 300 பழங்குடியின வயல்களில், ஆழ்துளைக்கிணறுகள் அமைத்து, அதில், மின் சூரிய சக்தி மூலம் இணைப்பு அல்லது இயங்கும் பம்பு செட்டுகளும் இலவசமாக நிறுவப்பட்டு. அதில் சொட்டு நீர்ப் பாசன வசதியும் மானியத்தில் அமைத்துத் தரப்படும்.

நம்மாழ்வார் விருது:

  • நம்மாழ்வார் பெயரில் 5 லட்சம் ரூபாய் விருது: அங்கக விவசாய முறைகளை பின்பற்றி, இதர விவசாயிகளிடையே பிரபலப்படுத்துவதில் சிறந்து விளங்கும் விவசாயிக்கு நம்மாழ்வார் பெயரில் 5 லட்சம் ரூபாய் விருது குடியரசு தின விழாவில் வழங்கி கௌரவிக்கப்படுவார்கள்.

  • நெல் ஜெயராமன் மரபுசார் நெல் ரகங்கள் தமிழ்நாட்டின் பாரம்பரிய நெல் ரகங்களான தூய மல்லி, சீரக சம்பா, மாப்பிள்ளை சம்பா, கருப்பு கவுனி, கிச்சிலி சம்பா, தங்க சம்பா, கீரை சம்பா ஆகியவற்றைப் பாதுகாத்து பரவலாக்கிட, நெல் ஜெயராமன் மரபுசார் நெல் இரகங்கள் பாதுகாப்பு இயக்கத்தில், அரசு விதைப் பண்ணைகளில், 200 ஏக்கர் பரப்பளவில் விதை உற்பத்தி செய்து, மானிய விலையில் விவசாயிகளுக்கு விநியோகிக்க 50 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு.

  • ஊட்டச்சத்து நிறைந்த சிறுதானிய உற்பத்தியை 25 மாவட்டங்களில் உயர்த்தி, பயன்பாட்டை அதிகரிப்பதற்காக, ரூ.82 கோடி ஒதுக்கீட்டில் தமிழ்நாடு சிறுதானிய இயக்கம் அறிமுகம்.

  • அகில இந்திய அளவிலான பாரம்பரிய நெல் விதைகளை, இனத் தூய்மையுடன் விதை வங்கியில் பராமரித்து, விவசாயிகளுக்கு வழங்கிவரும் விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாக, 10 விவசாயிகளுக்கு வரும் ஆண்டில் தலா மூன்று லட்சம் ரூபாய் வீதம் 30 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு.

  • நெல்லில் அதிக விளைச்சல் எடுக்கும் விவசாயிக்கு மட்டுமே 5 லட்சம் ரூபாய் விருது அளிக்கப்பட்டு வந்த நிலையில், 2023-24 ஆம் ஆண்டில், சிறுதானியங்கள், பயறுவகைகள், எண்ணெய்வித்துக்கள், 11 கரும்பு உள்ளிட்ட பயிர்களுக்கு அதிக மகசூல் எடுக்கும் விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாக, மாநில அளவில் 5 லட்சம் ரூபாய் விருது அறிவிப்பு.

  • குறுவைப் பருவத்தில் மாற்றுப் பயிர் சாகுபடிக்கு மானியம்: தொடர்ந்து நெற்பயிரை சாகுபடி செய்வதால் மண்வளம் குறையும் என்பதால், நெல்லுக்கு மாற்றாக குறுவைப் பருவத்தில், குறைந்த நீரில் அதிக மகசூல் தரும் பயிர் சாகுபடியை ஊக்குவிக்க ரூ.16 கோடி.

  • பயிர் சுழற்சியினால் மண்வளம் அதிகரிக்கும் என்பதால், சம்பா நெல் அறுவடைக்குப்பின், சிறுதானியங்கள், பயறு, எண்ணெய்வித்துக்கள், பருத்தி சாகுபடியை பிரபலப்படுத்தும் வகையில், ரூ.24 கோடி ஒதுக்கீடு

வேளாண் தொழில்முனைவோருக்கு நிதி:

  • வேளாண்மை, தோட்டக்கலை பட்டதாரிகள் புதிய தொழில் தொடங்குவதற்காக ரூ. 2 லட்சம் நிதி உதவி

  • 60,000 சிறு, குறு நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கு வேளாண் கருவிகள் விவசாயிகள், தொகுப்பு விநியோகத்திற்கு 15 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு

  • சிறு, குறு உயர் மதிப்புள்ள திட்ட இனங்களில் ஆதிதிராவிட பழங்குடியின சிறு விவசாயிகளுக்கு அதிகம் பலன் அளிக்கும் வகையில் கூடுதலாக 20 சதவிகிதம் மானியம் வழங்குவதற்காக நிதி ஒதுக்கீடான ஐந்து கோடியில் இருந்து நடப்பாண்டில் 11 கோடி ரூபாயாக உயர்வு.

பயிறு விவசாயிகள் நலன்:

  • பயறு பெருக்குத் தேவையான புரதச் வகைகளின் திட்டம் உடலுக்குத் சத்தை வழங்கும் பயறு பரப்பளவையும். உற்பத்தியையும் அதிகரித்திட 30 கோடி ரூபாயில் பயறு பெருக்குத் திட்டம்.

  • பயறு விவசாயிகளுக்கு ஒன்றிய அரசின் குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைப்பதை உறுதி செய்திட, விலை ஆதரவுத் திட்டத்தின் கீழ், 60,000 உளுந்தும், 12,000 கொள்முதல் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

  • துவரை மண்டலமாக கடந்த வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, சேலம் மாவட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து துவரையை நடவு முறையில் 18 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.

  • சூரியகாந்தி, நிலக்கடலை, எள். சோயா மொச்சை போன்ற எண்ணெய் வித்துக்களின் உற்பத்தியை உயர்த்திடும் நோக்கத்துடன், ரூ.33 கோடி நிதி ஒதுக்கீட்டில் எண்ணெய் வித்துக்கான சிறப்புத் திட்டம்.

  • எண்ணெய் வித்துக்கள் சிறப்பு மண்டலம் வித்துக்கள் உற்பத்தி, மதிப்புக்கூட்டுதல், விற்பனை, ஏற்றுமதிக்கு சிறப்பு கவனம் செலுத்தும் வகையில், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ஈரோடு. தருமபுரி, நாமக்கல், சேலம், திருச்சிராப்பள்ளி, கிருஷ்ணகிரி, கடலூர், திருப்பத்தூர், அரியலூர், வேலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களை ஒருங்கிணைத்து எண்ணெய் வித்துக்கள் சிறப்பு மண்டலம் அமைக்கபடும்.

தென்னை, பருத்தி, கரும்பு விவசாயிகள் கவனத்திற்கு:

  • தென்னை விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவதற்காக, 10,000 ஹேக்டரில் ஒருங்கிணைந்த பண்ணைய செயல்விளக்கத்திடல்களும், மண்டல தென்னை நாற்றுப் பண்ணைகள் தோற்றுவித்தல், எருக்குழி தோற்றுவித்தல், மறுநடவு- புத்தாக்கத் திட்டத்திற்காக தென்னை வளர்ச்சி வாரிய உதவியுடன் ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு.

  • தென்னை குட்டை x நெட்டை வீரிய ஒட்டு தென்னை கன்றுகளின் தேவை அதிகரித்து இருப்பதால் கன்னியாகுமரி மாவட்டம் புத்தளம், தென்காசி வட்டம் செங்கோட்டை, விருதுநகர் மாவட்டம் தேவதானம் அரசு தென்னை நாற்றுப் பண்ணைகளில் 10,000 வீரிய ஒட்டு தென்னங்கன்றுகள் உற்பத்தி.

  • நூற்பாலைகளுக்குத் தமிழ்நாட்டிலேயே உற்பத்தி செய்திட, ரூ.12 கோடி நிதி ஒதுக்கீட்டில் "நீடித்த நிலையான பருத்தி இயக்கம்” தொடக்கம்.

  • இயற்கை இடர்பாடுகளின் போது பயிர்கள் பாதிக்கப்படுவதில் இருந்து விவசாயிகளை பாதுகாக்கும் விதமாக மாநில அரசின் பயிர் காப்பீட்டுத்திட்டத்திற்கு ரூ.2,337 கோடி ஒதுக்கீடு

  • கரும்பு சிறப்பு ஊக்கத் தொகை சென்ற ஆண்டில் வழங்கப்பட்டதைப் போன்று, கரும்பு விவசாயிகளின் நலனைக் காக்கும் வகையில், சிறப்பு ஊக்கத் தொகையாக டன்னுக்கு ரூ.195 வழங்கப்படும்.

  • கரும்பு சாகுபடி மேம்பாட்டுத் திட்டம் கரும்பில் குறைந்த சாகுபடி செலவில், அதிக மகசூல் எடுப்பதற்காக, உயர் விளைச்சல் இரகங்களில் விதைக்கரும்பு, பருசீவல் நாற்றுகள் விநியோகம் உள்ளிட்ட திட்டத்திற்காக ரூ.10 கோடி ஒதுக்கீடு.

  • சர்க்கரை ஆலை கழிவிலிருந்து இயற்கை உரம் இயற்கை உரத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக, சேலம், அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் கழிவு மண்ணிலிருந்து மதிப்புக் கூட்டப்பட்ட இயற்கை உரம் தயாரிப்புக் கட்டமைப்புகளுக்காக ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு.

வேளாண் விஞ்ஞானி:

  • கிராம அளவில் வேளாண்மை-உழவர் நலத்துறையின் வழங்குவதற்காக, கிராம ஒருங்கிணைத்து, 3 முதல் 4 கிராமங்களுக்கு ஒரு உழவர் செயல்பாடு. அலுவலர் திட்டம்-2.0 அளவில் திட்டங்களை ஒருசேர விவசாயிகளுக்கு வட்டார, பணியாற்றும் விரிவாக்க அலுவலர்களை வேளாண் விரிவாக்க அலுவலர் நியமனம் செய்யப்படுவார்கள்.

  • பயிர் சாகுபடி முதல் விற்பனை வரையிலான தொழில் நுட்பங்கள் பற்றிய சந்தேகங்களை விவசாயிகளிடம் நேரடியாக விளக்கும் வகையில் வட்டாரத்திற்கு ஒரு வேளாண் விஞ்ஞானி தமிழ்நாடு வேளாண் பல்கலை கழகத்திலிருந்து பொறுப்பு அலுவலராக நியமிக்கப்படுவர்.

  • கிராம வேளாண் முன்னேற்ற பருவத்திற்கேற்ற பயிர், தொழில்நுட்பம், குழு மதிப்புக்கூட்டுதல் பற்றிய தகவல்களை உரிய நேரத்தில் உழவர்களுக்கு பகிர்வதற்காக, குக்கிராம அளவில் 25 முதல் 50 விவசாயிகளை ஒருங்கிணைத்து கிராம வேளாண் முன்னேற்ற குழு அமைத்து பயிற்சி வழங்க ரூ.2.5 கோடி ஒதுக்கீடு.

தோட்டக்கலைத் துறை அறிவிப்புகள்:

மதுரை மல்லிகைக்கு இயக்கம்: ஆண்டு முழுவதும் மல்லிகை உற்பத்திக்காக, தரமான மல்லிகை செடிகளை ராமநாதபுரத்தில் உற்பத்தி செய்து, வினியோகம் விருதுநகர், திண்டுக்கல், செய்யவும். தேனி, மதுரை, தென்காசி மாவட்டங்களில் மல்லிகை பயிர் மேலாண்மை முறைகளை விவசாயிகளுக்கு கற்றுத் தரவும் ரூ.7 கோடி நிதி ஒதுக்கீடு.

பலா இயக்கம்: பண்ருட்டி தொகுப்பு அமைத்து, நடவு பலாவிற்கு ஒருங்கிணைந்த செடிகள், இடுபொருட்களை விநியோகம் செய்து, மதிப்பு கூட்டும் கட்டமைப்புகள் உருவாக்கித் தந்து, உலகளாவிய ஏற்படுத்துவதற்காக கருத்தரங்குகள். இரகங்களை திண்டுக்கல், புதுக்கோட்டை, உள்ளிட்ட வாய்ப்புகளை பன்னாட்டு பலா அரியலூர், பலாவில் பகுதிகளுக்கேற்ற அறிமுகம் சேலம், செய்து, கன்னியாகுமரி, தென்காசி, தேனி உள்ளிட்ட 21 மாவட்டங்களில் பலா சாகுபடியினை 5 ஆண்டுகளில் 2,500 எக்டரில் உயர்த்திட இவ்வாண்டு ரூ.3 கோடி ஒதுக்கீடு

பாலூர் காய்கறி ஆராய்ச்சி நிலையத்தில் பலா ஆராய்ச்சி பலாவில் புதிய ரகங்கள், உயர் மகசூல், மதிப்பு கூட்டும் தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதற்காக, பாலூர் காய்கறி ஆராய்ச்சி

நிலையத்தில் பலா தொடர்பான ஆராய்ச்சி.

மிளகாய் மண்டலம்: இராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி மாவட்டங்களில் மிளகாய் சாகுபடியினை ஐந்து ஆண்டுகளில் 40,000 எக்டராக

உயர்த்தி, உற்பத்தியினை அதிகரித்திட, மிளகாய் மண்டலம் அறிவிப்பு.

1,000 எக்டரில் சீமை கருவேல மரங்களை அகற்றி விதைகள், நாற்றுக்கள் மூலம் மிளகாய் சாகுபடி செய்யவும், மதிப்புகூட்டும் கூடங்கள், சூரிய உலர்த்திக் தூய்மையான முறையில் சந்தைப்படுத்திட உலர் ரூ.6 கோடி நிதி ஒதுக்கீடு.

கறிவேப்பிலை தொகுப்பு: அங்கக இடுபொருட்களை பயன்படுத்தி கறிவேப்பிலை சாகுபடியை 5 ஆண்டுகளில் செயல்படுத்துவதற்காக, 1500 ஹேக்டரில் ரூ.2.5 ஒதுக்கீட்டில் கோயம்புத்தூர் மாவட்டத்தில்

கறிவேப்பிலை தொகுப்பு திட்டம் செயல்படுத்தப்படும்.

முருங்கை இயக்கம்: தேனி, திண்டுக்கல், கரூர், தூத்துக்குடி, திருப்பூர், அரியலூர், மதுரை போன்ற மாவட்டங்களை உள்ளடக்கிய முருங்கை ஏற்றுமதி மண்டலத்தில் 1,000 எக்டரில் முருங்கை சாகுபடியினை உயர்த்திட 11 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.