அவசரக் காலத்தில் உயிர் காத்தவர்களுக்கு அலெர்ட் விருது: நடிகர் விஜய் சேதுபதிக்கு ஐகான் விருது!

நிஜ வாழ்க்கையில் நாயகர்களாக விளங்கி உயிர்களை காக்கும் வகையில் செயல்பட்ட 15 நிஜ ஹீரோக்களுக்கு ’Alert Being awards’ வழங்கப்பட்டது.

12th Sep 2019
  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close

நிஜ வாழ்க்கையில் நாயகர்களாக விளங்கி உயிர்களை  காக்கும் வகையில் செயல்பட்ட 15 நிஜ ஹீரோக்களுக்கு  அலெர்ட் பியிங் விருது வழங்கப்பட்டது. கொலம்பியா ஏசியா மருத்துவமனைகளின் இந்தியாவிற்கான தலைவரும் மருத்துவக் குழு இயக்குனருமான டாக்டர் நந்தகுமார் ஜெய்ராமுக்கு ’வாழ்நாள் சாதனையாளர் விருது’, டாடா அறக்கட்டளை பத்மஸ்ரீ அருணாச்சலம் முருகானந்தம், திரைப்பட நடிகர் விஜய் சேதுபதி ஆகியோருக்கு ஐகான் விருது வழங்கப்பட்டது.

விருது

அவசரக் காலங்களில் உரிய நேரத்தில் உதவி செய்து, சாமானிய மக்களின் உயிர்களை காப்பாற்றும் ஒரு தன்னார்வ லாப நோக்கற்ற அமைப்பு ஆக அலர்ட் அமைப்பு செயல்பட்டு வருகிறது. உயிரைக் காப்பாற்றுவதன் மூலமோ அல்லது பாதுகாப்பதன் மூலமோ சமூகத்திற்கு பங்களித்த சிறந்த மனிதர்களுக்கு, அலர்ட் விருதுகளை இந்த அமைப்பு வழங்கி வருகிறது.  

இந்த ஆண்டிற்கான அலர்ட் பியிங் 2019 விருது வழங்கும் விழா, அலர்ட் அமைப்பு சார்பில் 3வது ஆண்டாக சென்னை கிரவுன் பிளாசாவில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், நிஜ வாழ்க்கையில் நாயகர்களாக உயிர்களை காக்கும் வகையில் செயல்பட்ட 15 நிஜ ஹீரோக்களுக்கு அலெர்ட் பியிங் விருது வழங்கப்பட்டது.

கொலம்பியா ஏசியா மருத்துவமனைகளின் இந்தியாவிற்கான தலைவரும் மருத்துவக் குழு இயக்குனருமான டாக்டர் நந்தகுமார் ஜெய்ராமுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது, டாடா அறக்கட்டளை பத்மஸ்ரீ அருணாச்சலம் முருகானந்தம், திரைப்பட நடிகர் விஜய் சேதுபதி ஆகியோருக்கு ஐகான் விருது வழங்கப்பட்டது.

சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே. விஸ்வநாதன்,, முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகரும், மேற்கு வங்க முன்னாள் கவர்னருமான பத்மஸ்ரீ எம்.கே. நாராயணன் ஆகியோர் விருதுகளை வழங்கினர்.


ஆயுத காவல்படையைச் சேர்ந்த கூடுதல் காவல்துறை இயக்குனர் ஷகீல் அக்தர், லிமா தலைவர் டாக்டர் ஜெ.எஸ். ராஜ்குமார், ஆற்காடு இளவரசரின் திவான் நவாப்சதா முகமது ஆசிப் அலி, நேச்சுரல்ஸ் குழும சலூன்களின் நிறுவனர் வீணா குமாரவேல் மற்றும் மாற்றம் நிறுவனர் சுஜித் குமார் ஆகியோர் கொண்ட நடுவர்கள் குழு, விருதுக்கு உரியவர்களை தேர்வு செய்தது.


இந்தியா முழுவதிலும் உள்ள 5 மாநிலங்களில் இருந்து 19 மாவட்டங்களைச் சேர்ந்த 100 பேர், இந்த விருதிற்காக, அலர்ட் அமைப்புக்கு தங்கள் பரிந்துரைகளை அனுப்பி இருந்தனர். ’அலர்ட் பியிங் விருதுகள் 2019′ தனிப்பட்ட வாழ்க்கையில் அல்லது சமுதாயத்தில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியவர்கள் மற்றும் உயிர்களை காப்பாற்றியவர்கள் என 5 பிரிவுகளில் 15 நிஜ ஹீரோக்களுக்கு வழங்கப்பட்டது.


அலர்ட் பியிங் அவார்டு 2018 நிகழ்ச்சி கடந்த ஆண்டு துவங்கப்பட்டது.  மருத்துவ அவசரநிலை மற்றும் அவசர உதவிக்காக ’அலர்ட் வாய்ஸ்’ ஆப் (அவசர காலத்தில் உடனடியாக தன்னார்வலர் வரவழைக்கும் ஆப்) பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

”அலர்ட் மூலம் நிஜ வாழ்க்கை ஹீரோக்களின் நம்ப முடியாத கதைகளை வெளிக்கொண்டு வர விரும்புகிறோம். அவர்கள் வாழ்க்கையில் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றியதன் மூலம் சமூகத்தில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர்,” என்று அலர்ட் பியிங் விருதுகள் 2019 குறித்து அலர்ட் நிறுவனர் கலா பாலசுந்தரம் தெரிவித்தார்.  

”விழிப்புணர்வு பட்டறைகள் மூலம் சுமார் 1 லட்சம் பேருக்கு நாங்கள் பயிற்சி அளித்துள்ளோம். மேலும் அலர்ட் வாய்சில் 100க்கும் மேற்பட்ட திறமையான முதல் பதிலளித்தவர்களை சேர்த்துள்ளோம். இந்தியாவின் சமூகம் சார்ந்த தொழில்நுட்ப அடிப்படையிலான முதல் பதிலளிக்கும் நெட்வொர்க் இதுவாகும்.

நாங்கள் இதுவரை இந்தியா முழுவதும் உள்ள 225 கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் 180 கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் தொழில் துறையைச் சேர்ந்த ஊழியர்களுக்கு பயிற்சி அளித்துள்ளோம் என்றும் கலா பாலசுந்தரம் மேலும் தெரிவித்தார்.

அலர்ட் பீயிங் விருதுகள் என்பது ஒருவரது வாழ்க்கையை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பாதுகாக்க அல்லது காப்பாற்ற உதவிய அத்தகைய நல்ல தன்னார்வலர்களை அங்கீகரிப்பதன் மூலம் மனிதகுலத்தை கொண்டாடுவது ஆகும். அவர்கள் தனிநபர்கள், அமைப்புகள், கடமை மற்றும் சமூக முயற்சிகளுக்கு அப்பாற்பட்ட சேவையில் ஈடுபடும் நபர்களாகவும் இருக்கலாம் என்று அலர்ட் நிர்வாக அறங்காவலர் ராஜேஷ் ஆர். திரிவேதி தெரிவித்தார்.


தொகுப்பு: சைபர்சிம்மன்


  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close

Our Partner Events

Hustle across India