அலிபாபா நிறுவனத் தலைவர் பதவியில் இருந்து விடைபெற்றார் ’ஜாக் மா’

பள்ளி ஆசிரியராக இருந்து ஆன்லைன் துறையில் காலடி வைத்து 'Alibaba' எனும் மாபெரும் நிறுவனத்தை நிறுவி உலகை திரும்பி பார்க்கவைத்த ஜாக் மா, இன்று தனது 55வது பிறந்த நாளில் தலைவர் பொறுப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக விலகியுள்ளார்.

10th Sep 2019
  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close

சீன இ-காமர்ஸ் ஜாம்பவான் அலிபாபா நிறுவனத்தின் செயல் தலைவர் பதவியில் இருந்து அதன் நிறுவனர் ஜாக் மா விடைபெற்றிருக்கிறார். ஏற்கனவே அறிவித்திருந்த படி தனது 55வது வயதில் நிறுவனத் தலைவர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றுள்ள ஜாக் மா, கற்பித்தல் மற்றும் நன்கொடை செயல்பாடுகளில் கவனம் செலுத்த உள்ளார்.

ஜேக்மா

அலிபாபா நிறுவனர் ஜாக் மா

சர்வதேச அளவில் அமேசான் வெற்றிகரமான இ-காமர்ஸ் நிறுவனமாக திகழ்வது போல, சீனாவின் முன்னணி இ-காமர்ஸ் நிறுவனமாக அலிபாபா விளங்குகிறது. சந்தை மாதிரி உள்ளிட்ட வர்த்தக மாதிரிகளை பின்பற்றும் அலிபாபா, மாபெரும் வர்த்தக சாம்ப்ராஜயமாக உருவாகியுள்ளது.

அலிபாபா நிறுவனம் தற்போது 480 பில்லியன் டாலர் மதிப்பு மிக்கதாக கருதப்படுகிறது. அதன் நிறுவனர் ஜாக் மா, 38.6 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் சீனாவின் பெரும் செல்வந்தராக திகழ்கிறார்.

பள்ளி ஆசிரியான ஜாக் மா, இணையத்தின் செல்வாக்கை உணர்ந்து கடந்த 1999ம் அண்டு நண்பர்களுடன் இணைந்து அலிபாபா இ-காமரஸ் நிறுவனத்தை துவக்கினார். அதன் பிறகு நிறுவனம் பெருமளவில் வளர்ச்சி கண்டு, மாபெரும் இ-காமர்ஸ் சாம்ராஜ்யமாக உருவானது.


இதனிடையே, கடந்த ஆண்டு ஜாக் மா, அலிபாபா நிறுவன செயல் தலைவர் பதவியில் இருந்து அடுத்த ஆண்டு விலகிக் கொள்ள இருப்பதாக பரபரப்பாக அறிவித்தார். நிறுவன சி.இ.ஓ டேனியல் ஜாங், தலைவராக பொறுப்பேற்றுக் கொள்வார் என்றும் அறிவித்திருந்தார்.


இதன்படி, இன்று தனது 55வது வயதில் ஜாக் மா, அலிபாபா தலைவர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றார். டேனியல் ஹாங், தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதற்காக, அலிபாபா தலைமையகம் அமைந்துள்ள ஹாங்ஷோ நகரில், ஒலிம்பிக் ஸ்டேடியத்தில் மாபெரும் கொண்டாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


நிறுவனத் தலைவர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றாலும், ஜாக் மா அடுத்த ஆண்டு பங்குதாரர் கூட்டம் வரை நிறுவன இயக்குனர் குழுமத்தில் இருப்பார். மேலும் அலிபாபா குழுமத்தை இயக்கும் அலிபாபா பங்குதாரர்கள் அமைப்பில் வாழ்நாள் உறுப்பினராக தொடர்வார்.


அலிபாபா நிறுவனத்தின் தினசரி செயல்பாடுகளில் இருந்து தனது விலகல் படிப்படியாக நிகழும் என கடந்த ஆண்டு ஜாக்மா தெரிவித்திருந்தார்.

”அலிபாபா ஒரு போதும் ஜாக் மா’வாக மட்டும் இருந்ததில்லை என்றும், ஆனால் ஜாக் மா எப்போதும் அலிபாபாவுக்கு உரியவராக இருப்பார்,” என்றும் அவர் கூறியிருந்தார்.

தலைவர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றுள்ள ஜாக் மா, நன்கொடை மற்றும் சேவை பணிகளில் அதிகக் கவனம் செலுத்த உள்ளார். முன்னாள் பள்ளி ஆசிரியரான அவர் கல்வி பணிகளிலும் தீவிர கவனம் செலுத்த உள்ளார்.


2013ம் ஆண்டு வரை நிறுவன சி.இ.ஓவாக இருந்த ஜாக் மா, அதன் பிறகு அந்த பொறுப்பில் இருந்து விலகி கொண்டார். 2014ல் அவர் ஜாக் மா அறக்கட்டளையை உருவாக்கினார்.

மைக்ரோசாப்ட் நிறுவன தலைவர் பதவியில் இருந்து விலகி, சேவை பணிகளில் ஈடுபட்டு வரும் பில் கேட்ஸ் வழியை பின்பற்றி தானும் நன்கொடை பணியில் ஈடுபட இருப்பதாக ஜாக் மா தெரிவித்திருந்தார். முன்னாள் ஆசிரியரான ஜாக் மா, சீனாவில் ஆசிரியர் தினம் கொண்டாடப்படும் நாளில் ஓய்வு பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


தனக்கு 70 வயதாவதற்கு முன், கல்வி உள்ளிட்ட வேறு துறைகளில் பங்களிப்பு செலுத்த விரும்புவதாகவும் அவர் கடந்த ஆண்டு அறிவிப்பின் போது கூறியிருந்தார்.

”ஆசிரியர்கள் எப்போதும் மாணவர்கள் தங்களை மிஞ்ச வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். எனவே, எனக்கும், நிறுவனத்திற்கும் பொறுப்பான விஷயம் என்னவெனில், மேலும் திறமையான, இளம் தலைமுறையினர் தலைமைப் பொறுப்பு வகிப்பது தான்,” என்றும் அவர் கூறியிருந்தார்.

2015ம் ஆண்டு முதல் ஜாக் மா மற்றும் அலிபாபா, சீனாவில் பெண்களுக்கான இரண்டு ஆண்டுகளாக கருத்தரங்கையும் நடத்தி வருகின்றனர். வர்த்தகம் வெற்றி பெற வேண்டும் என்றால் பெண்கள் முக்கியப் பொறுப்புகளில் அமர்த்தப்பட வேண்டும் என்றும் ஜாக் மா கூறியிருக்கிறார்.


கட்டுரை தொகுப்பு; சைபர்சிம்மன்  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close

Our Partner Events

Hustle across India