பெங்களுருவில் மிகப்பெரிய பூர்த்தி மையம் தொடங்கும் அமேசான் இந்தியா!

பல்வேறு வசதிகளுடன் வடிவமைக்கப்பட்ட பூர்த்தி மையம்!
0 CLAPS
0

முன்னணி இணையவழி சந்தைகளில் ஒன்றான அமேசான் இந்தியா, பெங்களூருவில் 2.4 மில்லியன் கன அடிக்கு மேல் சேமிப்பு திறன் கொண்ட நாட்டில் மிகப்பெரிய பூர்த்தி மையம் எனப்படும் Fulfilment centre-ஐ தொடங்குவதாக அறிவித்திருக்கிறது. இதுதொடர்பாக அமேசான் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"இந்த மையத்தின் ஒட்டுமொத்த சேமிப்புத் திறனை 60% அதிகரித்துள்ளது. இப்போது, ​​கர்நாடகாவில் உள்ள ஐந்து பூர்த்தி மையங்களில் 6.5 மில்லியன் கன அடிக்கும் அதிகமான சேமிப்பு இடம் உள்ளது. இந்த விரிவாக்கம் மாநிலத்தில் 42,000 விற்பனையாளர்களுக்கு ஒரு பெரிய வாடிக்கையாளர் தளத்திற்கான அணுகலை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது," என்று கூறப்பட்டுள்ளது.

அமேசான் இந்தியா, வாடிக்கையாளர் நிறைவு செயல்பாடுகள் மற்றும் விநியோகச் சங்கிலியின் துணைத் தலைவர் பிரகாஷ் தத்தா கூறியதாவது,

“கர்நாடகா எங்களுக்கு ஒரு முக்கியமான பகுதி, மாநிலத்தின் உள்ளூர் பொருளாதாரத்தை வலுப்படுத்த நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்பத்தில் நாங்கள் செலுத்தியுள்ள கவனம் மற்றும் முதலீடு அந்த அர்ப்பணிப்புக்கு சான்று. நாட்டில் எங்களது மிகப்பெரிய பூர்த்தி மையம் தொடங்கப்பட்டதன் மூலம், போட்டி ஊதியத்துடன் ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்க நாங்கள் எதிர்நோக்குகிறோம்," என்றுள்ளார்.

அமேசானின் கூற்றுப்படி, இந்த விரிவாக்கம் கர்நாடகத்தின் பல்வேறு பின்னணியிலிருந்து வரும் தனிநபர்களுக்கு, குறிப்பாக அருகிலுள்ள பகுதிகளில் உள்ளவர்களுக்கு, முழு நேர மற்றும் பகுதி நேர - மாறுபட்ட மற்றும் அர்த்தமுள்ள வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை இதனை வரவேற்று, ‘கர்நாடகம் மகத்தான வாய்ப்புகள் மற்றும் புதுமைகளின் பூமி,’ என்றார்.

எதிர்காலம் இன்று நிகழும் வகையில் இது சிறப்பாக அமைந்துள்ளது. இந்தியாவின் விருப்பமான முதலீட்டு இடமாக கர்நாடகா தொடர்ந்து உள்ளது. அமேசானின் புதிய முதலீடு, வணிக நட்பு கொள்கைகள், வலுவான உள்கட்டமைப்பு, மற்றும் மிகவும் திறமையான பணியாளர்களை வளர்ப்பதன் மூலம் நாம் வளர்ந்த சுற்றுச்சூழல் அமைப்பிற்கு சான்றாகும், என்று பேசியிருக்கிறார்.

அமேசான் இந்தியா 2021 ஆம் ஆண்டில் இந்தியா முழுவதும் உள்ள விற்பனையாளர்களுக்கு 43 மில்லியன் கன அடி மொத்த சேமிப்புத் திறனை வழங்குவதற்காக அதன் பான்-இந்தியா பூர்த்தி நெட்வொர்க்கை விரிவாக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக கர்நாடகாவில் இந்த பூர்த்தி மைய விரிவாக்கத்தை செய்திருக்கிறது. இந்த மையம் அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் திறமையான கட்டிட அமைப்புகளுடன் ஆற்றல் பயன்பாட்டைக் குறைப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

சூரிய மின்சக்தியை உற்பத்தி செய்ய ஆன்-சைட் மற்றும் ஆஃப்-சைட் சோலார் பேனல்களைக் கொண்டுள்ளது. பெரும்பாலான கட்டிடங்கள் மழை நீர் சேகரிப்பு தொட்டிகள், நீர்த்தேக்கங்களில் தண்ணீரை நிரப்ப கிணறுகளை ரீசார்ஜ் செய்யும் வசதி மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் போன்ற பல அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தகவல்: பிடிஐ | தமிழில்: மலையரசு

Latest

Updates from around the world