‘அமேசான் ஃபார்மசி’ - இனி மருந்து, மாத்திரைகளும் நம்ம வீடு தேடி வரும்!

- +0
- +0
உலகின் முன்னணி ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமான அமேசான் இப்போது பார்மஸி துறையிலும் கால்பதித்துள்ளது.
அமேசான் ப்ரைம், அமேசான் மியூசிக், உள்ளிட்டவற்றின் தொடர்ச்சியாக, ‘Amazon Pharmacy' 'அமேசான் ஃபார்மஸி’யை அறிமுகப்பட்டுத்தியுள்ளது அந்நிறுவனம். வாடிக்கையாளர்கள் தங்களுக்குத் தேவையான மருந்துகளை ஆன்லைனில் ஆர்டர் செய்து பெறலாம் என அமேசான் தெரிவித்துள்ளது. அப்படி நாம் ஆர்டர் செய்யும் மருந்துகள் ஓரிரண்டு நாளில் வீட்டுக்கே வந்து டெலிவரி செய்யப்படும்.
பொதுவாக மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள், கிரீம்கள், மாத்திரைகள் வழங்கப்படும் என்றும், இன்சுலின் போன்ற குளிர்ச்சியான நிலையில் இருக்கவேண்டிய மருந்துகளும் விநியோகிக்கப்படும் என்றும் அமேசான் தெரிவித்துள்ளது. அமேசான் அக்கௌண்ட் உருவாக்கி, மருத்துவரின் பிரிஸ்கிரிப்ஷனைக்கொண்டு மருத்து வாங்கலாம்.
பெரும்பாலான காப்பீடுகள் ஏற்றுக்கொள்ளப்படும். ஆனால், காப்பீடு இல்லாத அமேசான் பிரைம் உறுப்பினர்கள் பொதுவான அல்லது பிராண்ட் பெயர் கொண்ட மருந்துகளை தள்ளுபடியில் பெறலாம் என அமேசான் தெரிவித்துள்ளது.

அமேசான் கடந்த சில ஆண்டுகளாக சுகாதாரத்துறையில் அதீத கவனம் செலுத்தி வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, ஆன்லைன் மருந்தகமான 'பில்பேக்’ (PILLPACK) என்ற நிறுவனத்தை வாங்க முடிவு செய்தது.
அதன்படி 750 மில்லியன் டாலர் செலவு செய்து, அந்நிறுவனத்தை வாங்கியது. இந்நிலையில் அந்நிறுவனத்தின் செயல்பாடுகள் தொடருமா என்ற கேள்விக்கு,
"நாள் பட்ட நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு, மருந்துகளை அனுப்புவதில் பில்பேக் (PILLPACK) நிறுவனம் கவனம் செலுத்தும்,” என்று அமேசான் தெரிவித்துள்ளது. வாடிக்கையாளர்கள் சுகாதாரமான முறையிலும், தரமான மருத்துகளை அமேசானில் பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் பெங்களூரில் அமேசான் ஃபார்மஸி ஒன்றை தொடங்க உள்ளதாக தெரிவித்திருந்தது. ஆனால், கொரோனா பெருந்தொற்றால் அந்த முயற்சி நிலுவையில் உள்ளது. அமேசானின் இத்தகைய முடிவு சுகாதாரத்துறையில் அதன் தீவிர செயல்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது.
”வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்வதற்கான எங்கள் சேவையில் ஒருபகுதியாக நாங்கள் பெங்களூரில் அமேசான் ஃபார்மஸியை நிறுவ உள்ளோம். மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட பிரிஸ்கிரிப்ஷன் அடிப்படையிலான மருந்துகளை அமேசான் ஃபார்மஸி விநியோகிக்கும். அடிப்படையான சுகாதாரச் சாதனங்கள், சான்றளிக்கப்பட்ட விற்பனையாளர்களிடமிருந்து பெறப்பட்ட ஆயுர்வேத மருந்துகள், மாத்திரைகள் உள்ளிட்டவை சிறந்த முறையில் வழங்கப்படும்,” என அமேசானின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்திருந்தார்.
ஆன்லைனில் பிரிஸ்கிரிப்ஷனுடன் மருந்துகளை விற்பனை செய்ய வேண்டுமென்றால், மத்திய உரிம ஆணையத்தில் (Central Licencing Authority) பதிவு செய்திருக்க வேண்டும். அமேசான் இந்தியா மருந்தக சேவையை வழங்குவதற்காக உரிமதாரர்களுடன் கூட்டாளராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தகவல்: பிடிஐ
- மருந்தகம்
- மருந்துகள்
- அமேசான்
- amazon india
- Medicines
- ஆன்லைன் விற்பனை
- Home Delivery
- ஹோம் டெலிவரி
- மருந்து டெலிவரி
- Amazon Pharmacy
- +0
- +0