Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ADVERTISEMENT

209 சிறுதொழில் முனைவர்களை கோடீஸ்வரர்கள் ஆக்கிய 'அமேசான் பிரைம்டே சேல்’

அமேசான் பிரைம்டே விற்பனை இரு மடங்கு வாடிக்கையாளர்களை ஈர்த்ததோடு, 4,000 க்கும் மேற்பட்ட சிறு தொழில் வர்த்தகர்கள் பத்து லட்சம் ரூபாய்க்கு மேல் வர்த்தகம் பெற வைத்துள்ளது.

209 சிறுதொழில் முனைவர்களை கோடீஸ்வரர்கள் ஆக்கிய 'அமேசான் பிரைம்டே சேல்’

Tuesday August 11, 2020 , 2 min Read

அமேசான் ‘பிரைம்டே’ சிறப்பு விற்பனை நிகழ்வின் மூலம், 209 சிறு தொழில் வர்த்தகர்கள் கோடீஸ்வரர்கள் ஆனதோடு, 4,000 க்கும் மேற்பட்ட சிறு தொழில் வர்த்தகர்கள் பத்து லட்சம் ரூபாய்க்கு மேல் வர்த்தகம் பெற்றனர்.


முன்னணி இ-காமர்ஸ் தளமான அமேசான் பல்வேறு சிறப்பு விற்பனைத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த வரிசையில் அமேசான் நிறுவனம் அண்மையில், சிறு தொழில் வர்த்தகர்கள் மற்றும் கைவினை கலைஞர்கள் வர்த்தகத்தை ஊக்குவிக்கும் வகையில் பிரைம்டே விற்பனையை நடத்தியது.

Amazon primeday

பிரைம்டே 2020 விற்பனை நிகழ்விற்கு வர்த்தகர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்ததாக அமேசான் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த விற்பனை நிகழ்வில் இதுவரை இல்லாத வகையில் அதிகபட்சமாக, 91,000 க்கும் மேற்பட்ட கைவினைக் கலைஞர்கள், நெசவாளர்கள், பெண் தொழில்முனவோர் பங்கேற்றனர் என்றும் நிறுவன செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.


பிரைம்டே விற்பனையில் பங்கேற்ற வர்த்தகர்களில், 62,000 க்கும் மேற்பட்ட விற்பனையாளர்கள் மெட்ரோ அல்லாத நகரங்கள் மற்றும் 2ம் மற்றும் 3ம் அடுக்கு நகரங்களைச்சேர்ந்தவர்கள்.

இந்த விற்பனையில், 32,000 க்கும் மேற்பட்ட சிறு வர்த்தக பங்குதாரர்கள் தங்களது அதிகபட்ச விற்பனையை அடைந்ததாகவும், 4,000க்கும் மேற்பட்ட விற்பனையாளர்கள் பத்து லட்சத்திற்கும் மேல் வர்த்தகத்தை பெற்றனர் மற்றும் 209 பேர் 48 மணி நேரத்தில் கோடீஸ்வரர்கள் ஆனதாகவும் அமேசான் இந்தியா செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

அமேசான் கரிகார் ஸ்டோர் மூலம் விற்பனை செய்யும் கைவினைக் கலைஞர்கள் மற்றும் நெசவாளர்கள் நல்ல வரவேற்பு பெற்றனர். சாஹேலி திட்டம் மூலம் பெண் தொழில் முனைவோர் நல்ல விற்பனை வாய்ப்பை பெற்றனர்.


லாஞ்ச்பேட் திட்டம் கீழ் ஸ்டார்ட் அப் நிறுவனங்களும் நல்ல வரவேற்பை பெற்றன. 100 நகரங்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட உள்ளுர் விற்பனை நிலையங்கள் முதல் முறையாக பிரைம்டே விற்பனையில் அறிமுகம் ஆனதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரைம்டேவை முன்னிட்டு நடத்தப்பட்ட 14 நாள் விற்பனை நிகழ்வில் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் பங்கேற்றனர்.


கடந்த பிரைம்டே நிகழ்வைவிட இந்த ஆண்டு பிரைம்டே நிகழ்வுக்கு இரு மடங்கு வாடிக்கையாளர்கள் இணைந்ததாக அமேசான் இந்தியா தெரிவித்துள்ளது.

‘பிரைம்டே விற்பனை, தங்கள் வர்த்தகத்தை விரிவாக்க அமேசானை நாடும் சிறு வர்த்தகர் பங்குதாரர்களுக்கானதாக கருதுகிறோம். சிறுதொழில் வர்த்தர்களுக்கான மிகப்பெரிய விற்பனை மூலம் இதற்கு உதவியதில் மகிழ்ச்சி அடைகிறோம்,’ என அமேசான் இந்தியாவின் மூத்த துணை தலைவர், கண்ட்ரி மேனேஜர் அமீத் அக்ர்வால் கூறியுள்ளார்.

“கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது பிரைம்டே விற்பனையில் இரு மடங்கு வாடிக்கையாளர்கள் இணைந்தது மகிழ்ச்சி அளிப்பதாகவும் (65 சதவீதத்திற்கும் மேல் புதிய வாடிக்கையாளர்கள் முன்னணி 10 நகரங்களுக்கு வெளியே உள்ள நகரங்களைச் சேர்ந்தவர்கள்) என்றும் அமீத் அகர்வால் தெரிவித்துள்ளார்.

“அமேசானில் விற்பனை செய்யும் தனது அனுபவத்தில், மிகப்பெரிய அளவிலான உயர்வை இந்த ஆண்டு கண்டதாகவும், தங்கள் எதிர்பார்ப்பை விட 10 மடங்கு விற்பனையை பெற்றதாகவும்,” லாஞ்ச்பேட் கீழ் பங்கேற்ற டிரீம் ஆப் குளோரி ஜவுளி நிறுவனத்தின் அர்ஜுன் சூட் கூறியுள்ளார்.

தமிழில்: சைபர்சிம்மன்