இது என்னடா அமேசானுக்கு வந்த சோதனை- ஹிட்லர் மீசை சர்ச்சை, லோகோவை மாற்றிய அமேசான்!
மிகப்பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் தனது புதிய செயலியின் லோகோ, சர்ச்சைக்குள்ளானதை அடுத்து வடிவமைப்பை மாற்றியுள்ளது. அதன் முதல் டிசைன் அடோல்ஃப் ஹிட்லரின் மீசையுடன் ஒத்திருந்ததால் இந்த மாற்றம் அரங்கேறியுள்ளது.
அமேசனானின் புதிய லோகோவை ஜனவரி மாதம் வெளியிடப்பட்டது. பழுப்பு நிற அட்டையில், அமேசானின் புன்னைகை வடிவ அம்புடைய லோகோவுடன், நீல நிறத்தில் பரிசுப் பொருட்கள் பேக்கிங் ரிப்பன் ஒட்டி இருப்பது போல இந்த சோகோ டிசைன் இருந்தது. இந்த லோகோ டிசைன் அறிமுகப்படுத்தப்பட்ட உடனேயே, வித்தியாசமான ப்ரஷ் மீசையை போல் இது இருப்பதாகவும் பார்வையாளர்கள் சிலர், நாசி சர்வாதிகாரி ஹிட்லர் பாணியிலான மீசையை ஒத்திருப்பதாகக் பதிவிட்டனர்.
டூத் ப்ரஷ் பாணியிலான மீசை வடிவமைப்பானது 1900’களின் முற்பகுதியில் ஹிட்லருடன் தொடர்புபடுத்தப்படுவதற்கு முன்பு, சார்லி சாப்ளின் போன்ற நகைச்சுவை நடிகர்களால் பிரபலப்படுத்தப்பட்டது. ட்விட்டரில் அமேசானின் இந்த சோகோவை பலரும் விமர்சித்து வந்த நிலையில், தனது நிறுவனத்தின் லோகோவை சைலண்டாக மாற்றியிருக்கிறது அமேசான்.
அதே லோகோ டிசைனில் சில மாற்றத்தை மட்டும் கொண்டுவந்துள்ளது. அதாவது, பழைய ஐகானில் இருந்த துண்டிக்கப்பட்ட டேப் போன்ற வடிவமைப்பை சற்று மடிந்த நிலையில் மாற்றி வெளியிட்டுள்ளது.
மாற்றம் செய்யப்படுவதற்கு முன்பு, முதல் லோகோ ஒரு சில நாடுகளில் சோதனை செய்யப்பட்டது என்று அமேசான் தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது.
"எங்கள் வாடிக்கையாளர்கள் அவர்கள் வீட்டு வாசலில் எங்களின் டெலிவரி பெட்டியை பார்க்கும்போது எப்படி உற்சாகமாக உணர்வார்களோ, அப்படியே அவர்கள் தங்களின் போனில் எங்களுடன் ஷாப்பிங் பயணத்தைத் தொடங்கும்போது உணரவேண்டும் என்று எண்ணினோம். அவர்களின் எதிர்பார்ப்பு, உற்சாகம் மற்றும் மகிழ்ச்சியைத் தூண்டுவதற்காக நாங்கள் இந்த புதிய லோகோவை வடிவமைத்தோம்,” என்று அமேசான் தெரிவித்திருக்கிறது.
லோகோவில் ஏற்பட்ட மாற்றங்களைப் பற்றி தலைமை நிர்வாகி விக்கி புல்லன் பேசுகையில்,
“துரதிர்ஷ்டவசமாக அமேசானைப் பொறுத்தவரை, அசல் லோகோவில் அவற்றின் பார்சல் டேப்பைக் காட்சிப்படுத்தியது, ஹிட்லரின் மீசையுடன் கம்பேர் செய்யப்பட்டுவிட்டது. மக்களிடையே நல்ல மதிப்பையும், அவர்களின் வீட்டு வாசலில் மகிழ்ச்சியை உருவாக்கி மனதில் பதிய வைக்க விரும்பும் ஒரு பிராண்டிற்கு இது நல்லதல்ல,” என்று கூறியுள்ளார்.
மேற்கூறிய காரணங்களுக்காக தங்களின் லோகோ டிசைனை மாற்றியது அமேசான்.
ஆனால் வேடிக்கையாக இப்போது, புதுப்பிக்கப்பட்ட அமேசான் பயன்பாட்டு லோகோ; அவதார்: தி லாஸ்ட் ஏர்பெண்டரின் ஆங் உடன் ஒப்பிட்டு பேச தொடங்கியுள்ளனர் சமூக ஊடக பயனர்கள்.