ரிலையன்ஸூக்கு எதிராக காய் நகர்த்தும் அமேசான் - அமேசானுக்கு செக் வைத்த நீதிமன்றம்!
முகேஷ் அம்பானியின் வளர்ச்சிக்கு அமேசான் தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகிறது அமேசான்!
அமேசான் தலையீட்டால் ரிலையன்ஸ் ரீடைல் மற்றும் பியூச்சர் குரூப் ஒப்பந்தங்கள் தடைபெற்று நிற்கிறது. இந்திய ரீடைல் துறையின் மிக முக்கியமான வர்த்தக ஒப்பந்தமாக இது பார்க்கப்படுகிறது. இந்த ஒப்பந்தம் கையெழுத்தானால், இந்திய ரீடைல் சந்தையின் பெரும்பகுதி வர்த்தகத்தை ரிலையன்ஸ் ரீடைல் அடுத்த சில வருடங்களுக்குள் எட்டிப் பிடித்துவிடும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், முகேஷ் அம்பானியின் வளர்ச்சிக்கு அமேசான் தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகிறது அமேசான். இந்த இரு நிறுவனங்களுக்கும் இடையேயான வர்த்தகப் போட்டிக்கு மத்தியில் தற்போது பியூச்சர் குரூப் சிக்கிக்கொண்டு உள்ளது.
அண்மையில் பியூச்சர் குரூப் தலைவர் கிஷோர் பியானி, ரிலையன்ஸ் ரீடைல் மற்றும் பியூச்சர் குரூப் இடையிலான 24,713 கோடி ரூபாய் மதிப்புடைய ஒப்பந்தம் மீதான தடைக்குத் தீர்வு காண வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். மேலும், ஒப்பந்ததை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
சிங்கப்பூர் நடுவர் அமைப்பான SIAC-ன் இறுதித் தீர்ப்பு வரும் வரை இந்தியப் பங்குச்சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான செபி அமைப்பு ரிலையன்ஸ் ரீடைல் - பியூச்சர் குரூப் ஒப்பந்தம் குறித்து எந்தவித அறிவிப்பையும், முடிவையும் வெளியிடக்கூடாது என அமேசான் கடிதம் எழுதி முட்டுக்கட்டை போட்டுள்ளது. மேலும், கிஷோர் பியானியின் வேண்டுகோளை ஏற்று மறு ஆய்வு செய்யும் பணி நிறுத்தப்பட வேண்டும் என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே ரிலையன்ஸ் பியூச்சர் ஒப்பந்தம் குறித்த முடிவை அந்தந்த அமைப்புகள் எடுக்க முழு உரிமை உண்டு என டெல்லி உயர்நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பிற்கு மேல் முறையீடும் செய்துள்ளது அமேசான். இதனிடையே அமேசான் பியூச்சர் குரூப் உடன் போடப்பட்ட ஒப்பந்தத்தில் விதிமுறை மீறியுள்ளதாக டெல்லி உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. இது முகேஷ் அம்பானிக்கு மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்துள்ளது.
இந்திய வர்த்தகப் பிரிவின் வாயிலாகப் பியூச்சர் குருப் உடன் 2019ஆம் ஆண்டு ஒப்பந்தம் செய்தது அமேசான். பியூச்சர் குரூப்-ஐ மறைமுகமாகத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் வகையில் ஒப்பந்தம் செய்துள்ளதாக சுட்டிக்காட்டி அமேசானிடம் விளக்கம் கேட்டுள்ளது நீதிமன்றம்.
அமேசானின் இந்த ஒப்பந்தம் FEMA FDI விதிமுறைகளை மீறுவதாக நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இதற்கான பதிலை இன்னும் அமேசான் இன்னும் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது முகேஷ் அம்பானிக்கு சாதகமான விஷயமாகவும் மாறியுள்ளது.
தொகுப்பு: மலையரசு