3 மணி நேரத்தில் தஞ்சையில் இருந்து கோவை சென்று உயிரைக் காத்த ஆம்புலன்ஸ் டிரைவர்!

By YS TEAM TAMIL|12th Jan 2021
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Share on
close

தஞ்சாவூரில் உள்ள நாஞ்சிக்கோட்டையைச் சேர்ந்தவர் ஜீவா. இவருக்கு ஆருரன் என்ற 2 மாதக் குழந்தை இருக்கிறது. குழந்தை ஆருரனின் இதயத்துடிப்பானது சீராக இல்லை என்பதை தஞ்சாவூரில் உள்ள ஆர்கே மருத்துவமனை மருத்துவர்கள் கண்டறிந்தனர்.


Thoracic surgery-யை உடனடியாக செய்தாக வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர். இதையடுத்து அறுவை சிகிச்சைக்கு கோவையில் உள்ள குப்புசாமி நாயுடு மருத்துவமனைக்கு குழந்தையை எடுத்துச்செல்லுமாறு மருத்துவர்கள் பரிந்துரை செய்தனர்.


3 மணி நேரத்துக்குள் குழந்தையை கோவைக்கு கொண்டு சென்றால் மட்டுமே உயிர் பிழைக்க வைக்க முடியும் என்று மருத்துவர்கள் தெரிவித்ததால் பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்தனர். தஞ்சாவூரிலிருந்து கோவை 280 கிலோமீட்டர். இந்த தொலைவை 3 மணி நேரத்தில் கடப்பது என்பது கடிமானது.

Ambulance

பட உதவி: Simplicity

வழியில் டிராபிக் பிரச்னைகளைத் தீர்ப்பதற்காக போக்குவரத்து காவல்துறையிடம் பேச்சுவார்த்தை நடத்தியும், தொடர்ந்து ஆம்புலன்ஸ் சங்கத்திடம் குழந்தையை பத்திரமாகக் கொண்டு செல்ல முடியுமா என்பது குறித்தும் பேச்சுவார்த்தையில் பெற்றோர் ஈடுபட்டனர்.

இறுதியாக குழந்தையை பத்திரமாகக் கொண்டு செல்ல முன்வந்தார் ஆம்புலன்ஸ் டிரைவர் பார்த்தசாரதி. 3 மணிநேரத்தில் தஞ்சாவூரிலிருந்து கோயம்புத்தூருக்கும் இடையிலான 280 கிலோமீட்டர் தூரத்தை கடக்க ஒத்துக்கொண்டார்.

திருச்சி மற்றும் கரூர் காவல்துறை ஆணையர் ஆம்புலன்ஸ் சாலையை கடக்கும்போது டிராபிக் இருக்கக்கூடாது என்பதற்கான ஏற்பாடுகளைச் செய்தனர்.பின்னர் ஒருவழியாக அதிகாலை 5.35 மணி அளவில் தஞ்சாவூர் ஆர்கே மருத்துவமனையிலிருந்து ஆம்புலன்ஸை ஸ்டார்ட் செய்தார் பார்த்தசாரதி.


சரியாக 8.20 மணி அளவில் கோவையில் உள்ள குப்புசாமி நாயுடு மருத்துவமனைக்கு பத்திரமாக குழந்தை ஆருனை கொண்டு சென்று சேர்த்தார். இதையடுத்து குழந்தையை மருத்துவமனையில் அனுமதித்த மருத்துவர்கள் குழந்தைக்குச் சிகிச்சை அளித்து வருகின்றனர்.


தன் உயிரையையும் பொருட்படுத்தாமல் குழந்தையை பத்திரமாக கொண்டு சேர்த்த டிரைவர் பார்த்தசாரதிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டை தெரிவித்துள்ளனர்.


தகவல் உதவி -Simplicity | தொகுப்பு: மலையரசு