200 பேருக்கு இறுதிச் சடங்கு செய்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் கொரோனா தொற்றுக்கு பலி!

By YS TEAM TAMIL|12th Oct 2020
வடகிழக்கு டெல்லியின் சீலப்பூரில் வசிக்கும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஆரிஃப் கான் கொரோனா நோயாளிகள் 200 பேரின் இறுதிசடங்கிற்கு உதவியதுடன் பலருக்கு பணம் கொடுத்தும் உதவி வந்த நிலையில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Share on
close

கொரோனா பெருந்தொற்று நம் மனதில் பயத்தை ஏற்படுத்தியிருப்பது உண்மையே. கைகளை சோப்பு போட்டு சுத்தம் செய்கிறோம், முகக்கவசம் அணிகிறோம்; சமூக இடைவெளியைப் பின்பற்றுகிறோம். நெருங்கிய உறவினரிடமும் சற்று தொலைவில் இருந்தே பேசுகிறோம்.


ஆனால் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் போன்றோர் வரவிருக்கும் ஆபத்து தெரிந்திருந்தும் இந்தப் பெருந்தொற்று காலத்தில் தங்களது உயிரைப் பணயம் வைத்து அயராது உழைத்து வருகின்றனர்.


வடகிழக்கு டெல்லியின் சீலப்பூரில் வசிப்பவர் 48 வயது ஆரிஃப் கான். இவர் தனது வீட்டிலிருந்து 28 கி.மீட்டர் தொலைவில் ஆம்புலன்ஸை நிறுத்திவிட்டு முழு நேரமும் அங்கேயே தங்கியிருந்தார். மனைவியுடனும் குழந்தைகளுடனும் தொலைபேசி மூலம் மட்டுமே பேசி வந்தார்.

1

மார்ச் மாதம் முதல் ஆம்புலன்ஸில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல்களை இறுதிசடங்கு செய்ய எடுத்துச் செல்வதில் முழுநேரமும் ஈடுபட்டிருந்தார். குடும்ப உறுப்பினர்கள் யாரும் இல்லாத சூழலில் அவரே இறுதிசடங்கு செய்துள்ளார். அதுமட்டுமின்றி பலருக்கு பண உதவியும் செய்துள்ளார்.

இவர் ஜாதி, மத பேதமின்றி அனைவருக்கும் இறுதிச்சடங்கு செய்துள்ளார். டெல்லியில் இலவச அவசரச் சேவைகள் வழங்கும் ஷாஹித் பகத்சிங் சேவா தளத்துடன் இணைந்து ஆரிஃப் கான் பணியாற்றி வந்தார். இவர் 200 கோவிட் நோயாளிகளின் உடல்களை இதுவரை ஆம்புலன்ஸில் ஏற்றிச் சென்றுள்ளார்.

இந்நிலையில் இவருக்கு இந்த மாதம் 3ம் தேதி கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டது. ஆனால் ஆரிஃப் கான் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.


இவருக்கு மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர். மாதச் சம்பளமாக 16,000 ரூபாய் ஈட்டி வந்த ஆரிஃப் கானின் வருவாயை மட்டுமே நம்பியிருந்தது இந்தக் குடும்பம். ஆரிஃப் கானின் 22 வயது மகன் ஆதில் கூறும்போது,

“அவர் துணிகளை எடுத்துசெல்ல வந்தபோது பார்த்தேன். அவரைப் பற்றி நாங்கள் அனைவரும் கவலைப்பட்டுக் கொண்டே இருந்தோம். ஆனால் அவருக்குத் தன்னைப் பற்றிய அக்கறையே இல்லை. தனது வேலையில் மட்டுமே அக்கறை காட்டி வந்தார்,” என்று குறிப்பிட்டார்.

Get access to select LIVE keynotes and exhibits at TechSparks 2020. In the 11th edition of TechSparks, we bring you best from the startup world to help you scale & succeed. Join now! #TechSparksFromHome

Latest

Updates from around the world