Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory
search

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ADVERTISEMENT

உலகப் பணக்காரர்கள் பட்டியலில் மற்றொரு இந்தியர்: அம்பானிக்கு நிகரான கோடீஸ்வரர் யார்?

உலகின் முன்னணி கோடீஸ்வரர்களான எலான் மஸ்க், ஜெஃப் பெசோஸ், பில் கேட்ஸ் ஆகியோரை எல்லாம் பின்னுத்தள்ளும் வகையில் கடந்த 3 மாதங்களில் இந்திய கோடீஸ்வரரான கெளதம் அதானி அதிக பணம் சம்பாதித்துள்ளார்.

உலகப் பணக்காரர்கள் பட்டியலில் மற்றொரு இந்தியர்: அம்பானிக்கு நிகரான கோடீஸ்வரர் யார்?

Monday April 04, 2022 , 2 min Read

உலகின் முன்னணி கோடீஸ்வரர்களான எலான் மஸ்க், ஜெஃப் பெசோஸ், பில் கேட்ஸ் ஆகியோரை விட கடந்த 3 மாதங்களில் இந்திய கோடீஸ்வரரான கெளதம் அதானி அதிக பணம் சம்பாதித்துள்ளார்.

சமீபத்தில் ஹூருன் நிறுவனம் வெளியிட்டுள்ள உலக அளவிலான டாப் 10 பணக்காரர்கள் பட்டியலில் ஒரே ஒரு இந்தியராக முகேஷ் அம்பானி இடம் பிடித்திருந்தார். 2021ஆம் ஆண்டின் முடிவில் 24 சதவீத வளர்ச்சியடைந்து, 103 பில்லியன் டாலர் அளவிலான சொத்து மதிப்பு உடன் இந்தியாவிலேயே நம்பர் ஒன் பணக்காரர் என்ற இடத்தை தக்க வைத்துக் கொண்டிருந்தார்.

Rich

ஆனால், தற்போது அம்பானிக்கே அதிர்ச்சி கொடுக்கும் வகையில், ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர்கள் பட்டியலில் கெளதம் அதானி இணைந்துள்ளார்.

மின்சார உற்பத்தி, இயற்கை வளங்கள், போக்குவரத்து, மின் பகிர்மானம், பாதுகாப்பு, பழங்கள், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், ரியல் எஸ்டேட், நிதி சேவைகள், வீட்டுக் கடன் சேவைகள், விமான நிலைய நிர்வாகம், மெட்ரோ ரயில் சேவை, டேட்டா சென்டர், துறைமுகங்கள் என அனைத்து துறைகளிலும் கால் பதித்துள்ள அதானி குழுமத்தின் தலைவரான கெளதம் அதானி, சுமார் 7 லட்சம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் ஆசியாவின் பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.

Rich

ப்ளூம்பெர்க் பில்லியனர்ஸ் இன்டெக்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, கௌதம் அதானி 2022ஆம் காலாண்டில் ஆசியாவிலேயே அதிக பணம் சம்பாதித்த கோடீஸ்வரர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளார். டெஸ்லாவின் எலான் மஸ்க், அமேசானின் ஜெஃப் பெசோஸ் மற்றும் அமெரிக்க வணிக நிறுவனமான பில் கேட்ஸ் போன்ற உலகளாவிய பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.

ப்ளூம்பெர்க் பில்லியனர்ஸ் இன்டெக்ஸ் தரவுகளின்படி,

கௌதம் அதானி ஆண்டு முதல் காலாண்டில் (YTD) 21.1 பில்லியன் டாலர்கள் சம்பாதித்துள்ளார், அதேசமயம் எலான் மஸ்க்கின் நிகர மதிப்பு 1.1 பில்லியன் டாலர் அதிகரித்துள்ளது.

Q4FY22 இல், கௌதம் அதானியின் நிகர மதிப்பு வாரன் பஃபெட்டின் நிகர மதிப்பான 18.7 பில்லியன் டாலரை விட வேகமாக வளர்ந்துள்ளது. இருப்பினும், ஜெஃப் பெசோஸ் மற்றும் பில் கேட்ஸின் நிகர மதிப்பு காலாண்டில் சரிந்துள்ளது.

ப்ளூம்பெர்க் பில்லியனர்ஸ் இன்டெக்ஸ் உலகளாவிய பட்டியலின் தரவுகளின்படி, ப்ளூம்பெர்க் பில்லியனர்ஸ் அறிக்கையின் படி, அம்பானியின் சொத்து மதிப்பு 99.8 பில்லியன் டாலராகும். இதே அதானியின் சொத்து மதிப்பு 97.6 பில்லியன் டாலராகும். 2022ம் காலாண்டில் மட்டும் அதானியின் நிகர மதிப்பு 27.50 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.

ஆசியாவிலேயே மிகப்பெரிய பணக்காரர்கள் பட்டியலில், 97.6 பில்லியன் டாலர் நிகர சொத்து மதிப்புடன் கெளதம் அதானி 11வது இடத்திலும், 99.8 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் அம்பானி 10வது இடத்திலும் உள்ளனர்.
Rich

Q4FY22 இல், பெர்க்ஷயர் ஹாத்வேயின் வாரன் பஃபெட் தனது சொத்தின் நிகர மதிப்பில் 18.7 பில்லியன் டாலர்களை அதிகமாக சேர்த்து, 17.20 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளார். அதேபோல், டெஸ்லாவின் எலான் மஸ்க் 2022 ஆம் ஆண்டில் தனது நிகர மதிப்பில் 1.1 பில்லியன் டாலர்களை மட்டுமே சேர்த்து, 0.40 சதவீத வளர்ச்சியை மட்டுமே அடைந்துள்ளார்.

இருப்பினும், அமெரிக்காவின் முன்னணி தொழிலதிபர்களான ஜெஃப் பெசோஸ் மற்றும் மைக்ரோசாப்ட் புகழ் பில்கேட்ஸ் ஆகியோர் கடந்த காலாண்டை விட குறைவான சொத்து மதிப்பைக் கொண்டுள்ளனர். ஜெஃப் பெசோஸின் நிகர சொத்து மதிப்பு 4.30 பில்லியன் டாலராக குறைந்துள்ளது, பில் கேட்ஸின் நிகர சொத்து மதிப்பு 4.48 பில்லியன் டாலர் அளவிற்கு குறைந்துள்ளது.

தகவல் உதவி - மின்ட் | தமிழில் - கனிமொழி