கொரோனா வைரஸை கொல்லும் சட்டை; விளம்பர யுக்தியா? உண்மை என்ன?

கொரோனாவை ஒழிக்கும், சானிடைசர்கள், ஹெர்பல் ஹேண்ட் வாஷ், வெட்டிவேர் முகக்கவசம், என்று தொடங்கி தற்போது, அன்றாடம் பயன்படுத்தப்படும் பொருட்களிலும் கொரோனாவை எதிர்க்கும் சக்தி இருப்பதாக கூறும் விளம்பரங்கள் வரை வரத்துவங்கியுள்ளது.

30th Jul 2020
  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close

கொரோனா உலகை தாக்கியது முதல், அதை எதிர்கொள்ளக் கூடிய மருந்துகள் முதல் பாதுகாப்புப் பொருட்கள் வரை பலவற்றை சந்தையில் அறிமுகப்படுத்துவதில் நிறுவனங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு இயங்குவதை சில மாதங்களாக பார்க்கமுடிகிறது.


கொரோனாவை ஒழிக்கும், சானிடைசர்கள், ஹெர்பல் ஹேண்ட் வாஷ், வெட்டிவேர் முகக்கவசம், ஹோமியோபதி மருந்து என்று தொடங்கியவை தற்போது, அன்றாடம் பயன்படுத்தப்படும் பொருட்களிலும் கொரோனாவை எதிர்க்கும் சக்தி இருப்பதாக கூறும் விளம்பரங்கள் வரை வரத்துவங்கியுள்ளது.

Corona shirts

அண்மையில் பிரபல ஆடை நிறுவனமான ‘Zodiac Clothing' ஒரு சுவாரசியமான விளம்பரத்தை வெளியிட்டு அது வைரலாகி, பலவகையான கமெண்டுகளை பெற்றது.

“ஆன்டி வைரல் Securo சட்டைகளை அறிமுகம் செய்கிறோம். இது 99% கோவிட்-19 வைரசை கொன்றுவிடும். மேலும் விவரங்கள் மற்றும் சட்டைகள் ஆர்டர் செய்து டெலிவரி செய்ய எங்களை தொடர்பு கொள்ளுங்கள்...” என்று பதிவிட்டிருந்தனர்.

இந்த விளம்பரத்தை பார்த்த பலரும், இது எப்படி சாத்தியம் என்றும், இது ஒரு மார்க்கெட்டிங் யுக்தி என மாறி மாறி கமெண்ட் போடத் தொடங்கினர். இவர்களைப் போன்ற பலரும் டூத் பேஸ்ட், முக க்ரீம், ஆன்டி கொரோனா மெத்தை, இயற்கை மருந்து என பல பொருட்கள் கொரோனாவுக்கு எதிராக செயல்படும் என விளம்பரப்படுத்தப்படுவதும் இந்த விமர்சனத்துக்குக் காரணமாக அமைந்தது.

இதற்கு Zodiac Clothing நிறுவனம் அளித்துள்ள விளக்கத்தில்,

“எங்களின் சட்டைகளில் பிரபல ஸ்விஸ் தொழில்நுட்பமான HeiQ Viroblock NPJ03 என்பதை புகுத்தி நாங்கள் ஆடை தயாரிக்கின்றோம். இந்த தொழில்னுட்பம் ஆடை தயாரிப்பின் கடைசி கட்டத்தில் சேர்க்கப்படுகிறது. இது 30 நிமிடங்களில் 99.99% கோவிட்-19 மற்றும் SARS-CoV-2 எதிராக செயல்படுவது நிரூபிக்கப்பட்டுள்ளது,” என தெரிவித்தனர்.

இந்த தொழில்நுட்பம், எல்லாவித துணி வகைகளிலும் பயன்படுத்தமுடியும் எனவும், குறிப்பாக முகக்கவசங்களும் இதைக் கொண்டு தயாரித்தால் நல்ல பலன் கிடைக்கும் என்று நிறுவனம் தனது அறிக்கையில் விளக்கியுள்ளது.

Securo shirt-கள் கொரோனாவை குணப்படுத்தும் என்றோ, இந்த சட்டைகளை போட்டிருப்பவருக்கு நோய் தொற்று தாக்காது என்று நாங்கள் சொல்லவில்லை, என்று Zodiac விளக்கம் அளித்துள்ளது.

Zodiac நிறுவனம் சட்டை ப்ளஸ் மேச்சிங் மாஸ்க் வகைகளையும் சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

shirt and mask

விளம்பரங்களில் சொல்லப்படுவது அனைத்துமே மக்களைக் கவரவே என்றும், இதை உண்மையிலேயே Advertising Standards Council of India (ASCI) அங்கீகரிக்கிறதா என சிலர் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ASCI பொதுச் செயலாளர் ஸ்வேதா புரந்தரே,

“தற்போதுள்ள நோய் தொற்று காலத்தில் பலரும் பலவகையான புதுமையான விளம்பரங்களுடன் தங்கள் பொருட்களை விளம்பரப்படுத்துகின்றனர். இது புதுமையை காட்டுகிறது, காலத்துக்கு தேவையானதும் கூட. அவர்களின் கூற்று உண்மையாக இருக்க, தேவையான ஆதாரங்கள் இருந்தால் அதில் தவறில்லை,” என்று லைவ் மின்ட் இடம் தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய அவர், பல வாடிக்கையாளர்கள் பல குற்றச்சாட்டுகளுடன் எங்களை அனுகுகின்றனர். நாங்கள் குறிப்பிட்ட ஒரு ப்ராடக்ட் குறித்து பேச விரும்பவில்லை, இருப்பினும் அவர்களின் விளம்பரங்களில் சொல்லப்பட்டவைக்கு ஆதாரம் இருக்கிறதா என நிச்சயம் ஆராய்வோம், என்றார் ஸ்வேதா.


Zodiac நிறுவனத்தை தொடர்ந்து Arvind Ltd, Siyarams மற்றும் Welspun போன்ற பிரபல ப்ராண்டுகளும் ஆன்டி-கொரோனா துணிவகைகளை அறிமுகம் செய்து, ஒவ்வொருவரும் ஒரு தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதாகவும் விளம்பரப்படுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


தகவல் உதவி: லைவ் மின்ட் | படங்கள்: ட்விட்டர்

Want to make your startup journey smooth? YS Education brings a comprehensive Funding Course, where you also get a chance to pitch your business plan to top investors. Click here to know more.

  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close

Our Partner Events

Hustle across India