நீங்கள் வீடியோஸ் உருவாக்குபவரா? இதோ உங்களுக்கான புதிய பிரீமியம் செயலி!

நீங்கள் வீடியோக்களை படம்பிடிக்கவும் பதிவேற்றம் செய்யவும் உதவும் இச்செயலியை யுவர்ஸ்டோரி மதிப்பீடு செய்து வாசகர்களுக்கு வழங்குகிறது.

8th Nov 2019
  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close

மலிவு விலையில் இணையத்தை பயன்படுத்தும் வசதி இருப்பதால் பயனர்கள் பொழுதுபோக்கிற்காக வீடியோ உள்ளடக்க செயலிகளை அதிகளவில் பயன்படுத்துகின்றனர். இதில் வீடியோக்களை கண்டு களிப்பதுடன் நின்றுவிடாமல் அவர்களால் சொந்தமாக வீடியோ உள்ளடக்கத்தை உருவாக்கவும் அவற்றை உள்ளடக்க தளங்களிலும் சமூக வலைதளங்களிலும் பகிர்ந்துகொள்ளவும் முடிகிறது. சிலர் இதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாகும் நிலையில் சிலர் இதில் நல்ல வருவாயும் ஈட்டி வருகின்றனர்.


இந்தியாவில் 450 மில்லியன் இணைய பயனர்கள் உள்ளனர். இவர்கள் வீடியோக்களை பார்க்கவும் உருவாக்கவும் பகிர்ந்துகொள்ளவும் உதவும் வகையில் டிக்டாக், Vigo, Likee, Roposo என இத்தகைய தளங்களும் அதிகரித்து வருகின்றன. இந்த வரிசையில் சமீபத்தில் அறிமுகமாகியுள்ளது 'ஃபயர்வொர்க்' (Firework) என்கிற செயலி.


கலிஃபோர்னியாவைச் சேர்ந்த லூப் நவ் டெக்னாலஜீஸ் நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதம் உள்ளடக்கம் உருவாக்குபவர்கள் மற்றும் பயனர்களில் ப்ரீமியம் பிரிவைச் சேர்ந்தவர்களுக்காக இந்த இலவச செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஆப்பிள் ஆப் ஸ்டோர், கூகுள் ப்ளே ஸ்டோர் இரண்டிலுமே கிடைக்கக்கூடிய Firework செயலி கூகுள் ப்ளே ஸ்டோரில் ’மிகவும் புதுமையான செயலி’ என்கிற அந்தஸ்தை பெறும் தீவிர முனைப்பில் உள்ளது. ப்ளே ஸ்டோரில் ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் செயலியை நிறுவியுள்ளனர். 5 நட்சத்திர மதிப்பீட்டில் 4.3 மதிப்பீடு பெற்றுள்ளது.
1

ஜெர்ரி லக் மற்றும் வின்செண்ட் யாங் நிறுவிய ’லூப் நவ்’ நிறுவனம் ஐடிஜி வென்சர்ஸ், லைட்ஸ்பீட், பெய்ஜிங் சார்ந்த ஜிஎஸ்ஆர் வென்சர்ஸ் ஆகிய நிறுவனங்களின் ஆதரவுடன் செயல்படுகிறது. கூகுள் நிறுவனம் ஃபயர்வொர்க் நிறுவனத்தை கையகப்படுத்த உள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதனால் தேடல் தள ஜாம்பவானான கூகுள் நிறுவனம் உலகம் முழுவதும் 500 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்ட பிரபல வீடியோ செயலியான டிக்டாக் உடன் சிறப்பாக போட்டியிட முடியும்.


டிக்டாக் போன்ற வீடியோ தளங்களின் மீது உங்களுக்கு இருக்கும் ஆர்வத்தை அதிகப்படுத்தும் வகையில் ஃபயர்வொர்க் செயலியை யுவர்ஸ்டோரி மதிப்பீடு செய்துள்ளது.

எப்படித் தொடங்குவது?

நீங்கள் உங்களுக்கான கணக்கைத் தொடங்க உங்களது மொபைல் எண் அல்லது இமெயில் ஐடி பயன்படுத்தி செயலியில் சைன்-அப் செய்யலாம். நீங்கள் சைன்-அப் செய்யாமல் வீடியோக்களை பார்வையிட முடியாது என்பதால் இது கட்டாயமான ஒன்றாகும். தனிப்பட்ட உள்ளடக்க தொகுப்பிற்காக இந்த செயலி உங்களுக்கு விருப்பமான பகுதிகள் குறித்து கேட்கும். அழகு, ஆரோக்கியம், டிஒய்ஐ போன்ற பல்வேறு பிரிவுகள் அடங்கிய பட்டியலில் இருந்து நீங்கள் உங்களுக்கு விருப்பமான ஐந்து பிரிவுகளைத் தேர்வு செய்யலாம்.

உள்ளடக்கம்

உள்ளடக்கத்தை பார்க்கும் அனுபவம் மிகச்சிறந்ததாக இருக்கும். வீடியோக்கள் அதிக தெளிவுடன் இருக்கும். வீடியோக்களில் ஃப்ரேமிங் இல்லை என்பதால் முழுமையான ஸ்கிரீனில் பார்க்கமுடியும்.


டிக்டாக் போலல்லாமல் ஃபயர்வொர்க் உள்ளடக்கம் பிரீமியம் வகையைச் சேர்ந்தது. தொழில்முறை படைப்பாளிகளிகளும் துறைசார் நிபுணர்களும் இதை உருவாக்குகின்றனர். விரைவில் இந்நிறுவனம் இந்தியாவில் ’ஃபயர்வொர்க் ஒரிஜினல்ஸ்’ அறிமுகப்படுத்த உள்ளதாகவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதில் பிரத்யேகமாக ஃபயர்வொர்க்கில் 15-விநாடிகள் கொண்ட டிவி குறுந்தொடர் எபிசோட்கள் இடம்பெறும்.

இந்தியாவில் ஃபயர்வொர்க் பிரத்யேகமாக உள்ளடக்கம் உருவாக்க ALTBalaji, ஹரிஷ் பிஜூர், ஹிந்துஸ்தான் டைம்ஸ், ரிஃபைனரி29 போன்ற ஓடிடி நிறுவனங்கள் அல்லது உள்ளடக்கம் உருவாக்குபவர்களுடன் இணைந்து செயல்படுவதாகத் தெரிகிறது.

உலகளவில் Flo Rida, Dexter Darden, மாடல் மற்றும் அமெரிக்க அழகி ஒலிவியா ஜார்டன், டிஸ்னி ஸ்டார் ஜோர்டின் ஜோன்ஸ், பிரான்கி கிராண்டே போன்ற பிரபலங்களுடன் டாக் ஷோ உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் ஃபயர்வொர்க் ஒரிஜினினஸில் இடம்பெறுகின்றன.

படைப்புகள்

எளிதாக பயன்படுத்தக்கூடிய வீடியோ மேக்கர் கொண்டு பயனர்கள் 30 வினாடி வீடியோக்களை உருவாக்க ஃபயர்வொர்க் உதவுகிறது. வீடியோ மேக்கரில் 'ரிவீல்' (Reveal) என்கிற டூல் உள்ளது. வீடியோ உருவாக்குபவர்கள் தங்களது ஸ்மார்ட்ஃபோனில் இருந்து கிடைமட்டமாகவும் செங்குத்தாகவும் படம்பிடிக்க இந்த டூல் உதவுகிறது. இதற்கான காப்புரிமை நிலுவையில் உள்ளது. வீடியோ ஓடிக்கொண்டிருக்கும்போது ஒருவர் தன்னுடைய போனை திருப்பினால் சுவாரஸ்யமான கோணத்தில் வீடியோக்களைப் பார்க்கமுடியும்.

2

இதுமட்டுமின்றி பயனர் தொடர்ந்து இணைந்திருப்பதை ஊக்குவிக்கும் வகையில் ஒரு சிறப்பம்சமும் ஃபயர்வொர்க்கில் இடம்பெற்றுள்ளது. கேலி செய்யும் வகையில் இருக்கும் கருத்துக்களை உள்ளடக்கம் உருவாக்குபவர் கையாளவேண்டிய அவசியம் இருக்காது. மாறாக பார்வையாளர்கள் உள்ளடக்கம் உருவாக்குபவருக்கு தனிப்பட்ட முறையில் தகவல் தெரிவிக்கலாம்.


மேலும் பயனர்கள் ஒரு வீடியோவிற்கு விருப்பம் தெரிவிப்பதற்கு பதிலாக புக்மார்க் செய்துகொள்ளலாம். அல்லது மீண்டும் பகிர்ந்துகொள்ளலாம். மறு ட்வீட்டை லைக் செய்யலாம். இதனால் வீடியோவின் ஒரிஜினல் கிரெடிட் மாறாது. வீடியோ உருவாக்குபவர்களும் பார்வையாளர்களும் மிகச்சிறந்த வீடியோக்களை சேகரித்து ஃபயர்வொர்க் மட்டுமின்றி மற்ற ஆன்லைன் தளங்களிலும் மீண்டும் பகிர்ந்துகொண்டு வீடியோக்கள் வைரலாகி அதிக பயனர்களை சென்றடைய உதவுகின்றனர். பயனர்கள் வாட்ஸ் அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்ற பல்வேறு சமூக வலைதளங்களில் வீடியோக்களை பகிர்ந்துகொள்ளலாம்.


இதில் ‘Collab’ என்கிற சுவாரஸ்யமான அம்சமும் அடங்கியுள்ளது. இதில் பயனர்கள் வீடியோ சாட்களை பதிவு செய்து ஒருவரோடொருவர் தொடர்பு கொள்ளலாம். தற்சமயம் இந்த அம்சம் எந்த ஒரு செயலியிலும் நிகழ்நேர அடிப்படையில் இடம்பெறவில்லை. இதை நாங்கள் முயற்சி செய்து பார்த்தோம். இந்த அம்சம் சிறப்பாக செயல்படுகிறது.


நீங்கள் ஃபயர்வொர்க்கில் ஒரு வீடியோவைப் பார்த்துக்கொண்டிருக்கும்போது அதில் வரும் இசை உங்களுக்குப் பிடித்திருந்தால், அந்த ஒலிப்பதிவை நீங்கள் பார்க்கவும் அதை உங்களது வீடியோவில் பயன்படுத்திக்கொள்ளவும் இந்தச் செயலியில் உள்ள டூல் உங்களுக்கு உதவும்.

வீடியோ உருவாக்குபவர்களுக்கான திட்டம்

மற்ற வீடியோ தளங்கள் போன்றே பயனர்கள் வருவாய் ஈட்டவும் இந்தச் செயலி உதவுகிறது. ஃபயர்வொர்க் ஒவ்வொரு வாரமும் கலாச்சாரம் சார்ந்த ஹேஷ்டேக் நிகழ்வுகளை அறிமுகப்படுத்துகிறது. இதில் பங்கேற்று உந்துதலளிக்கும் வீடியோ உள்ளடக்கத்தை உருவாக்கி ரொக்கப் பரிசு வெல்லலாம்.


இந்தச் செயலியில் வீடியோ உருவாக்குபவர்களுக்கான திட்டமும் உள்ளது. பயனர்கள் இதற்காக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் பயனர் ஒரு மாதத்திற்கு 3,000 டாலர் வரை சம்பாதிக்கலாம். இதற்கு இமெயில் ஐடி, சமூக வலைதளங்களின் தொடர்புகள், லட்சியம், தனித்துவமான அம்சம் போன்றவற்றை வழங்கவேண்டும்.

3

கருத்து

இந்தச் செயலி பயனரைக் கவரும் வகையில் அமைந்துள்ளது. உள்ளடக்கம் சிறப்பாக உள்ளது. UI நவீனமாக இருப்பதுடன் பார்க்கும் அனுபவமும் சிறப்பாக உள்ளது. பாதுகாப்பற்ற, தேவையில்லாத உள்ளடக்கங்களை நீக்கும் பொருட்டு ஃபயர்வொர்க் பிரபலமான செயற்கை நுண்ணறிவு மென்பொருள் நிறுவனத்தின் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகிறது. அவ்வாறு செயற்கை நுண்ணறிவால் கண்டறிய இயலாத தேவையற்ற உள்ளடக்கங்கள் மனித தலையீட்டுடன் நீக்கப்படுகிறது.

வீடியோக்களை படம்பிடிப்பதற்கான ’ரிவீல்’ அம்சம் எங்களை வெகுவாகக் கவர்ந்தது. அதுவே இந்த உள்ளடக்க தளத்தின் தனித்துவமான அம்சம் என்று நாங்கள் கருதுகிறோம்.

ஆங்கில கட்டுரையாளர்: ராஷி வர்ஷினி | தமிழில்: ஸ்ரீவித்யா

Want to make your startup journey smooth? YS Education brings a comprehensive Funding and Startup Course. Learn from India's top investors and entrepreneurs. Click here to know more.

  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close

எங்கள் வார நியூஸ்லெட்டர் பெற

Our Partner Events

Hustle across India