சீன ஆப் CamScanner-க்கு மாற்றாக மேட் இன் இந்தியா ‘ Zoho Doc Scanner’

By YS TEAM TAMIL|11th Sep 2020
இந்திய யூனிகார்ன் நிறுவனமான ஜோஹோ (Zoho ) தனது ஸ்கேனர் செயலியை மேம்படுத்தி இலவசமாக பயன்படுத்த அனுமதித்துள்ள நிலையில், இந்தியர்கள் அதை ஆர்வத்துடன் பயன்படுத்த துவங்கியுள்ளனர்.
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Share on
close

ஆவணங்களை ஸ்கேன் செய்யும் செயலிகள் உலக அளவில் முக்கியமாகத் திகழ்கின்றன. இந்தியாவில் இந்த செயலிகளின் தேவை இன்னும் அதிகமாக உணரப்படுகின்றன.


இண்ட நிலையில், இந்திய அரசு முதல் கட்டமாக 59 சீன செயலிகளைத் தடை செய்த போது, பிரபலமான ஸ்கேனிங் செயலியான ‘CamScanner' அதில் இடம் பெற்றிருந்ததால், இந்த பிரிவில் வெற்றிடம் ஏற்பட்டது.


2020 ஜனவரி மாத வாக்கில் இந்தியாவில் 100 மில்லியன் பயனாளிகளைக் கொண்டிருந்த ‘கேம்ஸ்கேனர்’ பள்ளிகள், கல்லூர்கள், அரசு அலுவலகங்கள், வர்த்தகங்கள் மற்றும் தனிநபர்களால் பரவலாக பயன்படுத்தப்பட்டது.


ஸ்கேனிங் பிரிவில் அடோப், மைக்ரோசாப்ட் மற்றும் கூகுள் ஆகிய நிறுவனங்களின் செயலிகள் இருந்தாலும் இந்திய சந்தையில் கேம்ஸ்கேனர் போல வேறு எந்த செயலியும் ஆழமாக ஊடுருவியிருக்கவில்லை. தற்போது கேம்ஸ்கேனர் இல்லாத நிலையில் பல்வேறு உள்ளூர் செயலிகள் கவனத்தை ஈர்த்து வருகின்றன.


பிரதமரின் ஆத்ம நிர்பார் செயலி புதுமையாக்க அழைப்பால் ஊக்கம் பெற்ற இந்த ஆப்கள், இந்திய செயலிகளுக்கான தேவை அதிகரித்திருக்கும் சூழலை நன்கு பயன்படுத்திக்கொண்டுள்ளன.

ஜோஹோ

இவற்றில் முதன்மையான ‘ஜோஹோ டாக் ஸ்கேன்ர்’ (Zoho Doc Scanner). இந்திய யூனிகார்ன் நிறுவனமான ஜோஹோ நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட பேஜ் டு பிடிஎப் மற்றும் இமேஜ் டு டெக்ஸ்ட் மாற்றும் வசதி கொண்ட செயலியாகும் இது. ஜோஹோ முதலில் 2019 ஏப்ரல் மாதம் இந்த செயலியை அறிமுகம் செய்தது. தற்போதைய சூழலில் இது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.


மேலும், இந்திய பயனாளிகளுக்கு 2021ம் ஆண்டு ஜூலை மாதம் வரை இந்த ஆப் இலவசமானது என ஜோஹோ அறிவித்துள்ளது. ஜோஹோ டாக் ஸ்கேனர் செயலி காகிதம் இல்லா செயல்பாட்டிற்கு உதவுகிறது.

முக்கிய அம்சங்கள்

இந்த ஆப் ஸ்கேன் செய்ய, பகிர, இ-கையெழுத்திட, மொழிபெயர்க்க, அடிகுறிப்பிட, சேமிக்க வழி செய்கிறது. இன்வாய்ஸ், விசிட்டிங் கார்டு, ஒப்பந்தங்கள், புத்தகங்கள், காகிதங்கள் என எல்லாவற்றையும் இந்த முறையில் கையாளலாம்.


வரம்பில்லாத ஸ்கேன்களுக்கு இந்த செயலி வழி செய்கிறது. அனைத்து ஆவணங்களும் பாஸ்கோடு கொண்டவை. ஸ்கேன் செய்தவற்றை வாட்ஸ் அப், இ-மெயில் உள்ளிட்டவை மூலம் பகிரலாம்.

இந்த செயலி தானாக காகிதங்களின் முனைகளைக் கண்டறியும் திறன் கொண்டது. ஆவணங்களை எளிதாக, கிராப் செய்யலாம், எடிட் செய்யலாம். பில்டர்களை சேர்க்கலாம். சேமிக்கும் முன் மாற்றி அமைக்கலாம்.

இதன் எழுத்துக்களை உணரும் ஓசிஆர் அம்சம், படங்களை வரி வடிவில் மாற்ற உதவுகிறது. 12 இந்திய மொழிகளிலும், 17 உலக மொழிகளிலும் இது செயல்படுகிறது.


ஸ்கேன் செய்த ஆவணத்தில், எழுத்துக்களை எடுத்து .txt கோப்பாக மாற்றிக்கொள்ளலாம். இந்த அம்சம் மூலம் ஆவணங்களில் கீவேர்டு கொண்டு தேடலாம். இந்த செயலி மூலம் இன்னொரு செயலியில் இருந்தும் ஆவணங்களை கொண்டு வரலாம். எனினும் ஆண்ட்ராய்டில் மட்டுமே இந்த வசதி உண்டு.


இதில் உள்ள அடிக்குறிப்பு வசதி மூலம், டிஜிட்டல் ஆவணங்களையும் காகிதம் போலவே கையாளலாம். இன்வாய்ஸ்களை தானியங்கி மயமாக்கலாம். பத்து ஆவணங்கள் வரை இ-கையெழுத்திடலாம்.

டாக் ஸ்கேனரில் உள்ள இ-சைன் வசதி மூலம், முதல் எழுத்து, இ-மெயில் முகவரி, கையெழுத்து, தேதி ஆகியவற்றை ஸ்கேன் செய்த ஆவணத்தில் சேர்க்கலாம். ஜோஹோ சைன் மூலம் இயங்குகிறது.

ஆட்டோ அப்லோடு அம்சம் மூலம், ஸ்கேன் செய்த ஆவணங்களை ஜோஹோ நோட்புக், கூகுள் டிரைவ், டிராப்பாக்ஸ், ஐகிளவுட், ஒண்டிரைவ், ஜோஹோ எக்ஸ்பென்ஸ் ஆகிவற்றில் பதிவேற்றலாம்.

ஜோஹோ

அனைத்து ஆவணங்களையும், ஃபோல்டர்களாக, நினைவூட்டல் மற்றும் டேக்களாக இந்த செயலி அமைத்து தருகிறது. ஸ்கேன் செய்த ஆவணங்களுக்கு ஏற்ப டேக்களை இந்த செயலி பரிந்துரைக்கிறது.

ஜோடோ டாக் ஸ்கேனரின் பிரிமியம் அம்சங்கள் மாதம் ரு.100, வருடம் ரூ.1000 எனும் கட்டணம் கொண்டிருந்தாலும், இந்தியாவில் முதல் ஆண்டு இலவசமாக அளிக்கப்படுகிறது.

பயனுள்ள செயலி

உலகமே காகிதம் இல்லா பழகத்திற்கு மாறிக்கொண்டிருக்கும் சூழலில் Doc Scanner மிகவும் பயனுள்ள செயலியாகும். கேம்ஸ்கேனருக்கான மாற்றாக விளங்குவதோடு, ஜோஹோவின் பல வகை செயலிகளுடனான ஒருங்கிணைப்புடன் மேலும் பயன் அளிக்கிறது.


இது மிகவும் பாதுகாப்பானது. தனியுரிமை அளிப்பது. மூன்றாம் தரப்பு செயலிகள் அணுகலை கட்டுப்படுத்துகிறது. ஜோஹோன் வலுவான பிரைவஸி அணுகுமுறை இதிலும் பின்பற்றப்படுவதாக நிறுவனம் தெரிவிக்கிறது.


ஆங்கில கட்டுரையாளர்: சோஹினி மிட்டர்