Brands
YS TV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

அதிரடி ஆபர் சலுகைகளுடன் விற்பனைக்கு வந்துள்ள ’ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 7’

ஆரோக்கியத்தை கண்காணிக்கும் நவீன ஆப்கள்!

அதிரடி ஆபர் சலுகைகளுடன் விற்பனைக்கு வந்துள்ள ’ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 7’

Tuesday October 19, 2021 , 2 min Read

புகழ்பெற்ற எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான ஆப்பிள் மொபைல் போன் மற்றும் மடிக்கணனிகளுடன் ஸ்மார்ட் வாட்ச் விற்பனையிலும் ஈடுபட்டுள்ளது. அந்த வகையில், லேட்டஸ்டாக விற்பனைக்கு வந்துள்ளது 'ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 7.’


15ம் தேதி முதல் விற்பனைக்கு வந்துள்ள அலுமினியம் கேஸ் மற்றும் GPS கொண்ட பேஸ் 41 மிமீ மாடல் கொண்ட ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 7-ன் விலை இந்தியாவில் ரூ.41,900 ஆகும். இதேபோல், 45 மிமீ மாடலின் விலை ரூ.44,900 என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.


இந்த வாட்ச்சுக்கு அதிகாரப்பூர்வமாக கேஷ்பேக் சலுகைகளையும் ஆப்பிள் நிறுவனம் அறிவித்து இருக்கிறது. HDFC டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 7-ன் எந்த மாடல்களை வாங்கினாலும் ரூ.3000 கேஷ்பேக் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.


18 மணிநேர பேட்டரி ஆயுள், 33 சதவிகிதம் வேகமாக சார்ஜ் செய்யப்படும் வசதியுடன் வெளியாகியுள்ள ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 7 மேலும் சில வசதிகள் உள்ளன. இந்த வாட்ச்சில் இருக்கும் சில பயன்பாடுகள் மூலம் பயனர்கள் தங்களின் ஆரோக்கியத்தை கண்காணிக்க முடியும். அதற்கேற்ப எலெக்ட்ரிக்கல் ஹார்ட் சென்சார் மற்றும் ஈசிஜி App, பிளட் ஆக்ஸிஜன் சென்சார்/SpO2 சென்சார் போன்ற வசதிகள் இடம்பெற்றுள்ளன.

ஆப்பிள் வாட்ச்

இதனிடையே, இந்தியாவில், பல உள்நாட்டு மற்றும் சர்வதேச நிறுவனங்கள் ஸ்மார்ட் வாட்ச்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் அதிகரித்துள்ளன. ஆனால் ஸ்மார்ட் வாட்ச்களுக்கு முன்னோடியாக இருந்து வரும் ஆப்பிள் தொடர்ந்து ஸ்மார்ட் வாட்ச் சந்தைப் பிரிவில் உலகளாவிய ஆதிக்கத்தை தொடர்ந்து அனுபவித்து வருகிறது.


கவுண்டர்பாயிண்ட் என்ற அமைப்பின் ஆராய்ச்சிப்படி,

ஆப்பிள் வாட்ச் 2020 ஆம் ஆண்டின் முதல் பாதியில் ஸ்மார்ட்வாட்ச் வருவாயில் 51.4 சதவிகிதத்தைக் கொண்டுள்ளது, இது 2019 ஆம் ஆண்டின் அதே காலகட்டத்தில் 42.3 சதவிகிதமாக இருந்தது. இது ஆப்பிள் வருவாயின் ஒரு பகுதி மட்டுமே. இந்த ஆண்டு ஏப்ரல்-ஜூன் காலாண்டில், ஆப்பிள், மைக்ரோசாப்ட் மற்றும் கூகுள் ஆகியவை $ 50 பில்லியனுக்கும் அதிகமான லாபத்தை அறிவித்தன.

இதில் ஆப்பிள் மட்டும் $ 21.7 பில்லியன் சம்பாதித்தது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ஈட்டிய லாபத்தை தற்போது இரட்டிப்பாக்கி இருக்கிறது. மேலும், அதன் வருவாய் 36 சதவீதம் அதிகரித்து 81.4 பில்லியன் டாலராக இருந்து வருகிறது குறிப்பிடத்தக்கது.


ஆங்கிலத்தில்: டென்சின் நார்சம் | தமிழில்: மலையரசு