நியூஸ் வியூஸ்

1351 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு: சென்னை மத்திய பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு!

YS TEAM TAMIL
14th Aug 2019
53+ Shares
 • Share Icon
 • Facebook Icon
 • Twitter Icon
 • LinkedIn Icon
 • Reddit Icon
 • WhatsApp Icon
Share on

மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் உள்ள 230 பிரிவுகளில் சுமார் 1351 காலி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று மத்திய பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இதற்கான தேர்வு கணினி வழி முறையில் நடைபெறும்.

SSC

இதில் 17 பிரிவுகளைச் சார்ந்த 67 பணியிடங்கள் சென்னை தென்மண்டல மத்திய பணியாளர் தேர்வாணையத்தைச் சேர்ந்தது. 9 பட்டதாரி அளவிலான பிரிவுகளும், 5 மேல் நிலை மற்றும் 3 உயர் நிலை அளவிலான பிரிவுகளும் இதில் அடங்கும்.  இந்தப் பணியிடங்கள் குறித்த விரிவான விளம்பரம், தேவையான தகுதிகள், விண்ணப்ப முறைகள் போன்ற தகவல்களைப் பெற ssc.nic.in அல்லது sscsr.gov.in என்ற இணையதளங்களை அணுகவும்.

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகஸ்ட் 31, 2019 (மாலை ஐந்து மணிவரை மட்டுமே). இந்தத் தேர்வுகள் அக்டோபர் 14 ஆம் தேதியில் இருந்து 18 ஆம் தேதிவரை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

பெண்கள், எஸ்சி/எஸ்டி வகுப்பினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் இந்த பணியிடங்களுக்கு இலவசமாக விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் பிராந்திய இயக்குநர் கே.நாகராஜா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார். 

தகவல்: பிஐபி


53+ Shares
 • Share Icon
 • Facebook Icon
 • Twitter Icon
 • LinkedIn Icon
 • Reddit Icon
 • WhatsApp Icon
Share on
Report an issue
Authors

Related Tags