‘ஆப் நிர்பர் பாரத்’ - துடிப்பான செயலி சூழலை உருவாக்க யுவர்ஸ்டோரி-ன் 11 அம்ச பரிந்துரை!

By YS TEAM TAMIL|9th Oct 2020
பாரத் ஆப் ஸ்டோரை உருவாக்குவது, உள்ளுரில் உருவான போன் மென்பொருள் சூழலை ஊக்குவிப்பது, போன்ற 11 அம்சங்கள் கொண்ட பரிந்துரைகளை யுவர்ஸ்டோரி அளித்துள்ளது.
Clap Icon0 claps
 • +0
  Clap Icon
Share on
close
Clap Icon0 claps
 • +0
  Clap Icon
Share on
close
Share on
close

கடந்த சில ஆண்டுகளில், டிஜிட்டல் அதிகாரம் பெற்ற சமூகமாக இந்தியா மாறியிருக்கிறது. 600 மில்லியனுக்கு மேலான டிஜிட்டல் மக்கள் தொகையுடன் இந்தியா உலகின் இரண்டாவது பெரிய அன்லைன் சந்தையாகி இருக்கிறது.


இந்தியாவின் ஸ்டார்ட் அப் சூழலும், உலகின் மூன்றாவது பெரியதாக உருவாகி இருக்கிறது. இந்திய தொழில்முனைவோர்கள் மற்றும் தொழில்நுப்ட புதுமையாளர்கள் இந்தியாவுக்கு மட்டும் அல்லாது உலகிற்கான நீடித்த தீர்வுகளை உருவாக்கி வருகின்றனர். அதிக செயலிகள் நிறுவப்படுவதிலும் இந்திய உலகில் முன்னணியில் இருக்கிறது.


இந்தியாவில் இருந்து இந்தியாவுக்கும் உலகிற்குமான தீர்வுகளை உருவாக்குவதற்கான, இந்திய தொழில்நுட்ப வல்லுனர்கள் மற்றும் தொழில்முனைவோரின் புதுப்பிக்கப்பட்ட ஆர்வம் காரணமாக இந்திய செயலி சூழல் முன் எப்போதையும் விட மிகவும் துடிப்பாக இருக்கிறது.


அண்மையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, உள்ளூரில் சேவைகளை உருவாக்குவதற்காக வோகல் பார் லோகல் மற்றும் ஆத்மநிர்பர் என அழைப்பு விடுத்த போது, ஆத்மநிர்பர் செயலி சூழலையும் அவர் சுட்டிக்காட்டினார். அதற்கேற்ப ஆத்மநிர்பர் செயலி போட்டியும் அறிவிக்கப்பட்டது,

“இன்று மொத்த தேசமும் தற்சார்பு இந்தியாவை உருவாக்குவதில் ஈடுபட்டிருக்கும் போது, நம்முடைய செயலிகள் நம் சந்தையின் தேவை மற்றும் உலகின் தேவையை நிறைவேற்றும் வகையில் அவர்களின் முயற்சிக்கு திசை காட்சி, கடின உழைப்புக்கு ஊக்கம் அளித்து, திறமைகளுக்கு வழிகாட்ட இது சரியான வாய்ப்பு,” என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

உலக நிறுவனங்களுடன் போட்டியிட்டு, பல்வேறு சந்தைகளின் தேவைகளுக்கு ஈடு கொடுக்கக் கூடிய தொழில்நுட்பத் தீர்வுகளை உருவாக்குவதில் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என இந்தியர்கள் நிருபித்துள்ளனர். இந்த உலகத்தரமான தீர்வுகள், அரசு, தொழில்துறை மற்றும் கல்வி துறையுடன் இணைந்து உருவாக்கப்படுவது என்பது ஊக்கம் அளிக்கிறது.


எனவே தான், பிரதமர் மோடியின் ஆத்மநிர்பர் பாரத் செயலி போட்டி, இந்த திசையில் மற்றொரு சரியான நடவடிக்கை என்றும், பல நூறு கோடி மதிப்புள்ள உலக செயலி சந்தையில் பங்கேற்க தேவையான தீர்வுகளை உருவாக்குவதற்கான இந்திய தொழில்முனைவோர் மற்றும் டெவலர்ப்பர்களுக்கான அருமையான வாய்ப்பு என்றும் கருதுகிறேன்.


முக்கியமாக, இந்த செயலிகள், ஆத்மநிர்பர்; ஆப் சூழலை உருவாக்கும், மற்றும், மற்ற டெவலப்பர்கள், உலகத்தரம் வாய்ந்த செயலிகளை உருவாக்க ஊக்கம் அளிக்கும் என்றும் நம்புகிறேன்.

செயலி

’ஆத்மநிர்பர் பாரத்’ கனவை நினைவாக்கும் ’ஆப்நிர்பர் பாரத்’தை உருவாக்க, யுவர்ஸ்டோரியின் அறிக்கையை அளிக்கிறோம்:


யுவர்ஸ்டோரி ஆப்நிர்பர் பார்த் அறிக்கையின் நோக்கம் வருமாறு:


 • ஆத்மநிர்பார் பாரத் செயலி போட்டியில் வென்ற 24 செயலிகளில் தனி கவனம் செலுத்தி, இந்தியாவின் சொந்த செயலி உருவாக்குனர்களை கொண்டாடுவது.
 • இந்தியாவில் உருவாக்கப்பட்ட பல்வேறு செயலிகளை மற்றும் உருவாக்கப்பட்டு வரும் செயலிகளை அடையாளம் காட்டுவது. இவற்றில் பல, யுவர்ஸ்டோரியின் ஒரு மாத கால ஆப்நிர்பர் பார்த் ஆய்வில் பங்கேற்றன.
 • இந்த ஆய்வின் அடிப்படையில், இந்திய மொபைல் செயலி சூழல் போக்குகளை சுட்டிக்காட்டுவது.


11 அம்ச பரிந்துரைகள்:


 1. மேட் இன் இந்தியா என்ற அங்கீகாரத்தை உள்நாட்டு செயலிகளுக்கு அளித்தல்.
 2. டிஜிட்டல் முன்னெடுப்புகளுக்கு தொடர் முக்கியத்துவம் அளித்தல்.
 3. ஹேக்கத்தான் மற்றும் ஆப் போட்டிகள் வைப்பது.
 4. இந்தியாவில் முறைப்படுத்தப்பட்ட சமபங்கு சார்ந்த கூட்டு நிதி உள்கட்டமைப்பு வசதியை உருவாக்குவது.
 5. தனிப்பட்ட தரவு பகிர்வுக்கான கட்டமைப்பு.
 6. உள்நாட்டில் தயாராகும் ஆப்’களை ஊக்குவிக்கும் சூழல் அமைப்பு.
 7. ஆப் டெவலப்பர் குழுக்களை வலுப்படுத்துதல்.
 8. ஆழ்ந்த தொழில்நுட்பத் திறன்களை ஒருங்கிணைத்தல்.
 9. தயாரிப்பு மேலாளரின் பங்கை மறுசீரமைத்து முக்கியமாக்குதல்.
 10. பாரத் ஆப் ஸ்டோரை உருவாக்கி, உள்ளுரில் உருவாகும் போன் மென்பொருள் சூழலை ஊக்குவிப்பது.
 11. ஈக்விட்டி அடிப்படையிலான ஒழுங்குப்படுத்தப்பட்ட கூட்டு நிதி உள்கட்டமைப்பை உருவாக்குதல்.


இந்த அறிக்கையில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தின் செய்தியும் இடம்பெற்றுள்ளது.

"இந்திய செயலி சூழல் தொடர்பான முன்னோடி முயற்சிக்காக ஷரத்தா சர்மா தலைமையிலான யுவர்ஸ்டோரி குழுவுக்கு பாராட்டு தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியாவின் துடிப்பான செயலி சூழலை உருவாக்குவதற்கான யுவர்ஸ்டோரி தெரிவித்துள்ள சில ஆலோசனைகளை குறித்துக் கொண்டுள்ளேன்,” என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த அறிக்கை, இந்திய புதுமையாளர்கள் மற்றும் மாற்றத்தை உருவாக்கும் மனிதர்களை அவர்கள் சாதனைகளை, கதைகளை வெளிக்கொண்டு வருவதில் யுவர்ஸ்டோரியின் ஈடுபாட்டையும் உறுதி செய்கிறது.


ஆப் நிர்பர் பாரத் அறிக்கை டவுன்லோட் செய்ய: AppNirbhar Bharat


ஆங்கில கட்டுரையாளர்: ஷரத்தா சர்மா | தமிழில்- சைபர்சிம்மன்

Get access to select LIVE keynotes and exhibits at TechSparks 2020. In the 11th edition of TechSparks, we bring you best from the startup world to help you scale & succeed. Join now! #TechSparksFromHome

Latest

Updates from around the world