70 கோடிக்கு கடல் அழகு தெரியும் பங்களா: காதலியின் டிசைனில் வீடு வாங்கிய கிரிக்கெட் வீரர்!
அப்படி என்ன ஸபெஷல்?!
ஆஸ்திரேலிய கிரிக்கெட் உலகில் சில நாட்களாக இருக்கும் பேச்சு கிரிக்கெட் வீரர் பேட் கம்மின்ஸ் பற்றிதான். அப்படி என்ன செய்துவிட்டார்கள் என்கிறீர்களா?
ஆஸ்திரேலியாவில் சுமார் 70 கோடி ரூபாய்க்கு பங்களா ஒன்றை வாங்கியிருக்கிறார் பேட் கம்மின்ஸ். அவர் வாங்கியுள்ள பங்களா, விக்டோரியா காலத்து (1850-1870) கட்டிடக் கலையைப் பின்பற்றி அந்த வீடு கட்டப்பட்டுள்ளது.
சிட்னி நகரின் கடல் அழகு தெரியும்படி கடற்கரை அருகே கட்டப்பட்டுள்ள இந்த வீட்டில் ஐந்து படுக்கை அறைகள் உள்ளன. விக்டோரியா காலத்து வீடு என்றாலும் என்றாலும், தற்போதைய காலத்திற்கு ஏற்ப இன்டீரியர் டிசைன்களை செதுக்கியிருக்கிறார் கம்மின்ஸ்.
உலகின் சிறப்பான பொருட்களால் தனது வீட்டை அலங்காரப்படுத்தியுள்ளார். இதனை முன்னின்று செய்தவர் கம்மின்ஸின் காதலி, பெக்கி பாஸ்டன் என்பவர் தான். பெக்கி பாஸ்டன் ஒரு இன்டீரியர் டிசைனர் என்பதால், தாங்கள் இருவரும் சேர்ந்து வாழப்போகும் வீட்டை பார்த்து பார்த்து வடிவமைத்துள்ளார்.
பெக்கி பாஸ்டன் ஐடியாபடி, வீட்டின் வடிவமைப்பை மேற்கொண்டது பிரபல வடிவமைப்பு நிறுவனமான அர்னெட் அண்ட் பய்கே நிறுவனம். இந்த நிறுவனம் தான் இந்தியாவின் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானியின் வீட்டையும் வடிவமைத்தது.
இந்த வீட்டின் வெளிப்புறத்தில் மிகப்பெரிய தோட்டம் ஒன்று உள்ளது. இந்த தோட்டத்தை ஆஸ்திரேலியாவின் பிரபல தோட்ட வடிவமைப்பாளர் பீட்டர் பட்ஜ் என்பவர் தனது கை வண்ணத்தில் வடிவமைத்துள்ளார். ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரின் பிரபல உணவகமான இன்டிகோவின் உரிமையாளர் ஆன்டனி மோஸ்டகசிடம் இருந்து தான் கம்மின்ஸ் இந்த வீட்டை விலைக்கு வாங்கி வடிவமைத்துள்ளார்.
வீட்டின் வேலைகள் அனைத்தும் முடிந்து சமீபத்தில் தான் கம்மின்ஸ் தனது காதலி பெக்கி பாஸ்டன் உடன் அந்த வீட்டில் குடியேறினார். இரண்டு ஆண்டுகள் முன்புதான் ஒரு பண்ணை வீட்டை கம்மின்ஸ் வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. பேட் கம்மின்ஸ் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக விளையாடி வருகிறார்.
கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அதிகபட்ச ஏலத்தொகை போன வீரர் கம்மின்ஸ் மட்டுமே. ரூ.15.5 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார். இந்த ஆண்டும் இதே தொகைக்கு அவர் ரீடெயின் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.