Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory
search

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ADVERTISEMENT

உலகில் கொரோனாவுக்கு அதிக நிதி கொடுத்த டாப் 3-ல் உள்ள ஒரே இந்தியர்!

கொரோனா நிவாரண நன்கொடை வழங்கிய தனிநபர்களின் பட்டியலில் 3ம் இடத்தில் இருக்கிறார் அசிம் பிரேம்ஜி. இவரின் கொடை மதிப்பு என்ன தெரியுமா?

உலகில் கொரோனாவுக்கு அதிக நிதி கொடுத்த டாப் 3-ல் உள்ள ஒரே இந்தியர்!

Monday May 11, 2020 , 2 min Read

கொரோனா வைரஸ் தொடர்ந்து உலக நாடுகளில் அதிகரித்து வரும் நிலையில் மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களின் நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்காக பல நிறுவனங்களும் தனிநபர்களும் நன்கொடை வழங்கி வருகின்றனர்.


ஃபோர்ப்ஸ் தொகுத்துள்ள தரவுகளின் அடிப்படையில் ஏப்ரல் மாத இறுதி வரை 77 பில்லியனர்கள் கொரோனா நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்கி உதவியுள்ளனர்.

முதலில் டிவிட்டர் சிஇஓ ஜாக் டார்சி 1 பில்லியன் டாலர் தொகையை கொரோனா வைரஸ் நிவாரண நிதியாக ஒதுக்கியுள்ளார். இது அவருடைய சொத்து மதிப்பில் 28 சதவீதமாகும்.


இரண்டாவதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் தொழில்முனைவரான தனது மனைவி மெலிண்டா கேட்ஸ் உடன் இணைந்து கொரோனா நிவாரணப் பணிகளுக்காக 255 மில்லியன் அமெரிக்க டாலர் வழங்கியுள்ளார்.

Azim Premji

Wipro Founding Chairman Azim Premji

கொரோனா நிவாரணத்திற்காக அதிகத் தொகையை நன்கொடையாக வழங்கிய தனிநபர்களின் பட்டியலில் மூன்றாம் இடத்தில் இருப்பவர் ஒரு இந்தியர். அதிக நன்கொடை வழங்கிய முதல் 10 தனிநபர்கள் பட்டியலில் பெரும்பாலானோர் அமெரிக்க பில்லியனர்களாக உள்ள நிலையில் மூன்றாமிடத்தில் இருப்பவர் அசிம் பிரேம்ஜி.

அசிம் பிரேம்ஜி அறக்கட்டளை மற்றும் விப்ரோ நிறுவனம் இணைந்து 1,125 கோடி ரூபாய் வழங்கியுள்ளது.

இந்தப் பட்டியலில் நான்காவது மிகப்பெரிய தொகையை நன்கொடையாக வழங்கியுள்ளார் ஜார்ஜ் சொரோஸ். ஹங்கேரிய அமெரிக்க பில்லியனரான இவர் 130 மில்லியன் டாலர் வழங்கியுள்ளார்.

உலகப் பணக்காரர் பட்டியலில் முதலிடம் வகிக்கும் ஜெஃப் பெசோஸ் அதிக நன்கொடை வழங்கியவர்கள் பட்டியலில் ஐந்தாம் இடத்தில் உள்ளார். அமேசான் நிறுவனத்தின் சிஇஓ-வான ஜெஃப் பெசோஸ் இதுவரை 100 மில்லியன் டாலர் வழங்கியுள்ளார்.

Skoll அறக்கட்டளை பார்டிசிபண்ட் மீடியா நிறுவனர் மற்றும் சிஇஓ ஜெஃப்ரி ஸ்கால் 100 மில்லியன் டாலர் வழங்கியுள்ளார்.

Jack Dorsey

ட்விட்டர் சி இ ஒ ஜாக் டார்சி

ஏழாவது அதிகத் தொகையை நன்கொடையாக வழங்கிய தனிநபர் ஆஸ்திரேலிய தொழிலதிபரான ஆண்ட்ரூ ஃபாரஸ்ட். Fortescue மெட்டல்ஸ் குழுமத்தின் முன்னாள் சிஇஓ-ஆன இவர் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக 100 மில்லியன் டாலர் கொடுத்துள்ளார்.


டெல் டெக்னாலஜிஸ் சிஇஓ மைக்கேல் டெல் 100 மில்லியன் டாலர் கொடுத்துள்ளார். ப்ளூம்பெர்க் உரிமையாளர் மற்றும் இணை நிறுவனர் மைக்கேல் ப்ளூம்பெர்க் 74.5 மில்லியன் டாலர் நன்கொடை வழங்கியுள்ளார்.


இந்தப் பட்டியலில் பத்தாவது இடத்தில் இருப்பவர் லின் மற்றும் ஸ்டேசி ஸ்கஸ்டர்மேன். இவர் 70 மில்லியன் டாலர் அளித்துள்ளார்.


தகவல்: ஃபோர்ப்ஸ் | தமிழில்: ஸ்ரீவித்யா