பதிப்புகளில்

’ஒவ்வொரு காஷ்மீரியும் தீவிரவாதி அல்ல’ பள்ளத்தாக்கின் வரலாற்றை திரும்பிப் பார்ப்போம்!

22nd Feb 2017
Add to
Shares
11
Comments
Share This
Add to
Shares
11
Comments
Share

கல்லெறிபவர்கள் தீவிரவாதியாகவே கருதப்பட்டு அவ்வாறாகவே நடத்தப்படவேண்டும் என்கிற ராணுவ தளபதியின் அறிக்கையை இரண்டு விதமாகப் பார்க்கலாம். கடந்த இரண்டு வருடங்களாக இராணுவ வீரர்களில் காயமடைந்தவர்கள் மற்றும் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒன்று எதிரியின் நிலப்பரப்பில் தீவிரவாதத்திற்கு எதிராக போராடும் ஆயுதப்படையினரை ஊக்கப்படுத்தும் விதத்தில் அமையலாம். இரண்டாவது ராணுவ உத்தி மாறுபடுகிறது. 

பட உதவி: India Today

பட உதவி: India Today


அதாவது அவர்களது மென்மையான அணுகுமுறை தற்காலிகமாக நிறுத்தப்பட்டு சட்டத்திற்கு புறம்பாக நடப்பவர்கள் மீது கருணை கொள்ளாமல் போகலாம். இதில் எந்த கண்ணோட்டத்தில் பார்த்தாலும் சிக்கல் அதிகரிக்கவே செய்கிறது. ஏனெனில் அரசியல்வாதிகள் சண்டை சச்சரவுகளில் இறங்கியிருக்கின்றனர். டிவி சேனல்கள் தேசியவாதம் மற்றும் தேசப்பற்று பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறது.

நமது இராணுவம் குறித்து நாம் பெருமை கொள்கிறோம். தேசத்திற்கான அவர்களின் சேவையை அனைவரும் அறிவோம். நாம் அமைதியாக தூங்குவதற்குக் காரணம் இரவு முழுவதும் அவர்கள் கண் விழித்திருக்கிறார்கள். யாரோ ஒருவர் நமக்காக போராடுகிறார் என்பது நமக்குத் தெரியும். ஆகவே இராணுவம் குறித்த ஒவ்வொரு அறிக்கைக்கும் அதற்கே உண்டான முக்கியத்துவத்தை அளிக்கவேண்டும். 

தீவிரவாதத்துடன் இராணுவ தளபதி போராடுவதால் அவருக்கு சரி என்று தோன்றுவதை அவர் தாராளமாக தெரிவிக்கும் உரிமை அவருக்கு உள்ளது. நாட்டிற்கு தேவையான நடவடிக்கைகளையும் எல்லை கடந்த தீவிரவாதத்தை சமாளிக்கக் கடைப்பிடிக்கப் படவேண்டிய நடவடிக்கைகளையும் இராணுவத் தளபதியும் அவரது குழுவினருமே தீர்மானிக்கத் தகுந்தவர்கள். ஆனால் அரசியல்வாதிகளும் பத்திரிக்கையாளர்களும் இராணுவத்தினரைப் போல அல்ல. அவர்களுக்கென வெவ்வேறு கடமைகளும் பொறுப்புகளும் உள்ளது. 

காஷ்மீர் பிரச்சனையை இராணுவத்தால் குழப்பமின்றி சரியாக புரிந்து கொள்ளமுடியும். ஆனால் பொது வாழ்க்கையில் வீரர்களாக தோற்றமளிக்கும் அரசியல் அறிவுசார்ந்தவர்களால் அவ்வாறு புரிந்துகொள்ள இயலாது. காஷ்மீர் பிரச்சனை என்பது தெளிவிற்கு அப்பாற்பட்டு மிகவும் சிக்கலானது. காஷ்மீர் பிரச்சனையை புரிந்துகொள்ள பல வருடங்கள் முன்னோக்கி சென்று ஆராயவேண்டும். இது தொடர்புடைய சம்பவங்கள் மற்றும் நபர்களை தெரிந்துகொள்ளவேண்டும். 

பல வருடங்களாக உருவாக்கப்பட்ட கொள்கைகளை புரிந்துகொள்ளவேண்டும். 1947-ல் நாட்டிற்கு சுதந்திரம் அறிவிக்கப்பட்டபோது காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி அல்ல. இறையான்மை கொண்ட குடியரசாக இருக்கவே விருப்பப்பட்டது. பெரும்பான்மையான முஸ்லீம் சமூகத்தினரைக் கொண்ட மாநிலமாக இருந்தாலும் ஹிந்து ராஜாவான ராஜ ஹரி சிங் ஆட்சி புரிந்தார்.

பாகிஸ்தானுடன் காஷ்மீரை இணைக்காவிட்டால் பாகிஸ்தான் குறித்த அடிப்படை ஆராய்ச்சி முழுமைபெறாது. இவ்வாறு பாகிஸ்தானை உருவாக்கியவர்கள் கருதியிருப்பதாக புரிந்துகொள்ளவேண்டும். சுதந்திரப் போராட்டத்தின்போது இரு நாடுகள் கோட்பாடு அடிப்படையில் பாகிஸ்தான் கோரப்பட்டது. அதாவது இந்து மதம் மற்றும் இஸ்லாமியம் இரண்டும் வெவ்வேறு நாகரிகங்களைக் கொண்டது என்றும் இரண்டும் இணைந்திருக்க முடியாது என்பதுதான் அந்த கோட்பாடின் அடிப்படை. இந்த அடிப்படையில் பெரும்பான்மையான முஸ்லிம்களைக் கொண்ட மாநிலம் பாகிஸ்தானாகவும் மற்றவர்கள் இந்தியாவில் இருக்கவேண்டும் என்றும் திட்டமிடப்பட்டது.

மேற்கில் பாகிஸ்தானுக்கு பல்லாயிரம் கிலோமீட்டருக்கு அப்பாலுள்ள பங்களாதேஷுடன் இணைந்து பாகிஸ்தான் உருவானது. ஆனால் காஷ்மீர் ஜின்னா வழியை பின்பற்றவேண்டாம் என்றும் பாகிஸ்தான் தலைவர்கள் ஏற்றுக்கொள்ளாததால் பாகிஸ்தானுடனும் இணையவேண்டாம் என்று தீர்மானித்தது.

பிரிவினைக்குப் பிறகு பாகிஸ்தான் இராணுவத்தின் ஆதரவுடன் கிளர்ச்சியாளர்கள் வடிவில் காஷ்மீரை தாக்கியது பாகிஸ்தான். பாகிஸ்தான் ரேஞ்சர்ஸ் ஸ்ரீநகர் விமான நிலையத்தை அடைந்தபோது காஷ்மீர் இராணுவம் தாக்குவதற்கான வாய்ப்பு இருந்தது. அந்த நேரத்தில்தான் ராஜா ஹரி சிங் இந்தியாவின் ஆதரவைக் கோரினார். காஷ்மீர் இந்தியாவுடனான சேர்வடைவு முறையாவணத்தில் கையொப்பமிட சம்மதித்தால் காஷ்மீரை பாதுகாப்போம் என்று இந்தியா தெரிவித்தது. ராஜா ஹரி சிங் உடனடியாக ஒப்புதல் வழங்கினார். இந்திய படைகள் வந்து காஷ்மீரை காப்பாற்றியது. ஆகவே தேசிய இயக்கம் மற்றும் பிரிவினை காரணமாக ஏற்பட்டதுதான் காஷ்மீர் பிரச்சனை. 

காஷ்மீர் தன்னுடன் இருக்கவேண்டுமென்றும் காஷ்மீர் இல்லாமல் பாகிஸ்தான் முழுமைபெறாது என்றும் பாகிஸ்தான் தத்துவ ரீதியாக நம்புகிறது. பாகிஸ்தானைப் பொருத்தவரை பிரிவினை நிகழ்வுகளில் முடித்துவைக்கப்படாத விஷயம்தான் காஷ்மீர். 

பின்னர் மிகப்பெரிய அரசியல் கட்சியான தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவரான ஷேக் அப்துல்லாவுடன் இந்திய அரசாங்கத்திற்கு ஏற்பட்ட மோதல் காரணமாக பத்தாண்டுகளுக்கு மேல் ஷேக் அப்துல்லா சிறைவைக்கப்பட்டார். இறுதியாக 70-களில் மோதல் தீர்க்கப்பட்டு அவர் அரசமைத்தார். அவரது மறைவிற்குப் பின் அவரது மகன் ஃபரூக் அப்துல்லா அரசாங்கப் பொறுப்புகளை ஏற்றார். ஆனால் காங்கிரஸுடன் இணையாமல் அவர் செய்த மிகப்பெரிய தவறினால் மற்ற பிரிவினைவாதிகள் உள்ளே நுழைந்தனர். 

1987-ல் சட்டமன்றத் தேர்தல் முறைகேடு மற்றும் MUF ஆட்சி அமைக்க மறுக்கப்பட்டது அதற்கடுத்த மிகப்பெரிய தவறாகும். இது இராணுவ போராட்டத்திற்கு வழி வகுத்தது. ஜக்மோகனை ஆளுநராக அனுப்ப வி.பி.சிங் முடிவெடுத்தது அதற்கடுத்த மிகப்பெரிய தவறாகும். அவரது தவறான கொள்கைகளால் காஷ்மீர் பிரச்சனைக்கு வகுப்புவாதச் சாயம் பூசப்பட்டது.

அதைத் தொடர்ந்து காஷ்மீரி பண்டிதர்கள் வெளியேற்றப்பட்டது மற்றுமொரு வலிநிறைந்த பகுதி. அப்போதிருந்து காஷ்மீர் எரிந்து கொண்டிருக்கிறது. காஷ்மீர் பிரச்சனையை சர்வதேச பிரச்சனையாக மாற்றி சர்ச்சையை ஏற்படுத்த பாகிஸ்தான் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டது. அமெரிக்கா தலைமையிலான உலக சக்திகள் இதை துருப்புச் சீட்டாக பயன்படுதிக்கொண்டனர். இஸ்லாமிய படைகள் ஜிஹாதி கனவை நிறைவேற்ற காஷ்மீரை இணைக்க முற்பட்டது. 

காஷ்மீரின் லட்சியத் தலைவர்கள் காஷ்மீர் சுதந்திரமாக செயல்படவும் சுதந்திர நாட்டின் தலைவர்களாக இருக்கவும் விரும்பினர். பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் பொருத்தவரை காஷ்மீர் ஒரு வகுப்புவாதம் சார்ந்த பிரச்சனை. இப்படிப்பட்ட நிலையில் காஷ்மீர் மக்கள் நம்பிக்கையிழந்து அன்னியப்படுத்தப்படுகின்றனர். சட்ட அமலாக்கப் பிரிவிற்கும் தீவிரவாதிகளுக்கும் இடையில் காஷ்மீர் மக்கள் மாட்டிக்கொண்டிருக்கின்றனர். 

வாழ்வாதாரத்திற்காக இரண்டு வழிகளிலும் செல்லாமல் பாதுகாத்துக் கொள்ளவேண்டிய சூழல் உள்ளது. இராணுவத்துடன் காணப்பட்டால் காஷ்மீரின் நிலைக்கு காரணமான நம்பிக்கை துரோகிகளாக பார்க்கப்படுகிறார்கள். போராளிகளுடன் காணப்பட்டால் சட்டவிரோதியாகவும் தேச விரோதியாகவும் பார்க்கப்படுகிறார்கள்.

பாஜக - பிடிபி கட்சிகளிடையே கூட்டணி ஏற்பட்டது நிலைமையை மேலும் சிக்கலாக்கியது. காஷ்மீரை இந்திய அரசாங்கத்துடன் இணைக்கும் விதமாக ஆர்டிகிள் 370-ஐ நீக்க வேண்டும் என்கிறது பாஜக. ஆர்டிகள் 370 காஷ்மீர் மக்களின் வாழ்வாதாரமாக இருந்தது. பாஜக மாநில அரசாங்கத்தின் பகுதியாக இருக்குமேயானால் காஷ்மீர் மக்களை மாநில அரசு சந்தேகக் கண்ணுடனே பார்க்கும். சந்தேகம் – நிச்சயமற்ற நிலை – பாதுகாப்பின்மை ஆகிய உணர்வுகள் ஒன்றிணைந்து ஒரு பதற்றத்தை ஏற்படுத்தி காஷ்மீர் மக்களை அந்நியப்படுத்துகிறது.

பள்ளத்தாக்கில் அமைதி நிலவவும் தீவிரவாதத்தை சமாளிக்கவும் இராணுவம் மற்றும் துணை ராணுவம் அவசியம். குறிப்பிட்ட சூழலுக்கேற்றவாறு அதை சமாளிக்க சுதந்திரம் அளிக்கப்படவேண்டும். ஆனால் அரசியல்வாதிகளும் மற்றும் அறிவுசார்ந்த வர்க்கத்தினரும் காஷ்மீரை சட்ட ஒழுங்கு பிரச்சனையாக மட்டுமே கையாளக்கூடாது. டிவி சேனல்களும் அரைகுறை நாடுப்பற்றுடைய நிபுணர்களும் தேசியவாதப் பாடல்களைப் பாடுகின்றனர். 

ஏதேனும் மாறுபட்ட கருத்துக்களை வெளிப்படுத்தினால் தேசியவாதத்தை எதிர்ப்பவர்களாக அபத்தமாக கருதப்படுகிறது. காஷ்மீர் மக்களின் தனிப்பட்ட கருத்துக்களை கேட்கலாம் என்று ஏதேனும் ஆலோசனை வழங்கினால் தாய்நாடான இந்தியாவிற்கு இழைக்கும் நம்பிக்கை துரோகமாக முத்திரைகுத்தப்படுகிறது.

காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. இதில் எந்த சமரசமும் இல்லை. ஆனால் தற்போதைய ஆட்சி வெளிப்படுத்துவது போல அவ்வளவு எளிதான பிரச்சனை அல்ல. ஒவ்வொரு காஷ்மீரியும் தீவிரவாதி அல்ல. கல்லெறிபவர்கள் மாநிலத்தின் எதிரி அல்ல. இதைப் புரிந்துகொள்ளவேண்டும். கோபம் உள்ளது. அதற்கான காரணமும் உள்ளது. ஆகவே காஷ்மீர் பிரச்சனையை தீர்க்க அந்த கோபத்தை முறையாக நிர்வகிக்கவேண்டும். 

காஷ்மீர் பிரச்சனையை அதிகம் எளிமைப்படுத்தப்பட்டு காட்டுவது தீர்வாகாது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக டிவி மற்றும் புகழ்பெற்ற புத்திசாலிகளின் உரையாடல்களே கண்களைக் கவர்கிறது. இந்தத் தொகுப்பு இந்திய தேசியவாதத்திற்கு அதிக சேதத்தை உண்டாக்குகிறது. பல நலன்களை மனதில் கொண்டு டிவி மற்றும் புகழ்பெற்ற விவாதங்கள் சில நேரங்களில் பின்வாங்க வேண்டும். ஆனால் அவ்வாறு நடப்பதில்லை.

கட்டுரையாளர்: அசுடோஷ்

(பொறுப்பு துறப்பு: இது தமிழில் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ள கட்டுரை. ஆங்கில கட்டுரையாளர் அசுடோஷ், இவரின் கருத்துக்கள் அவரின் தனிப்பட்ட கருத்துக்கள். கட்சியின் கருத்துக்களை பிரதிபலிப்பவை அல்ல.)

Add to
Shares
11
Comments
Share This
Add to
Shares
11
Comments
Share
Report an issue
Authors

Related Tags