பதிப்புகளில்

செய்திகளை சிறிய வடிவத்தில் வழங்கும் 'Veooz'

23rd Dec 2015
Add to
Shares
10
Comments
Share This
Add to
Shares
10
Comments
Share

இணையத்தில் செய்திகளுக்கான தளம் மிகப்பெரியதாக மாறி வருகிறது. குறிப்பாக சிலவரிச் செய்திகள் மிக வேகமாக பிரபலமாகி வருகிறது. 'வே2நியூஸ்' போலவே பல நிறுவனங்களும் சிறு செய்தி வழங்கும் சேவையில் ஈடுபட்டு வருகிறார்கள். 'வியூஸ்' (veooz) எளிதில் படிக்கக்கூடிய செய்தி பத்திகளை வழங்கக்கூடிய புதுநிறுவனம் ஆகும்.

இந்நிறுவனம் ஸ்ரீநி கோப்பொலு, வசுதேவ வர்மா மற்றும் டாக்டர் பிரசாத் பிங்காலி ஆகிய மூவரால் உருவாக்கப்பட்டது. ஸ்ரீநி கோப்பொலு மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குனர். வசுதேவ வர்மா, ஐஐடி ஹைதராபாதில் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சித் துறையின் தலைவராக இருப்பவர். டாக்டர் பிரசாத் பிங்காலி இணைய நிபுணர், மெசின் லேர்னிங் மற்றும் நியூரோ லிங்குஸ்டிக் ப்ரொக்ராம்மிங் துறையில் நிபுணர். 'வியூஸ்' உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள பல்வேறு மொழிகளில் செய்தி வழங்கக்கூடிய நிறுவனம் ஆகும்.

image


ஸ்ரீநி மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் 21 ஆண்டுகள் பணியாற்றியவர். பல்வேறு புது நிறுவனங்களில் முதலீடு செய்தவர். பிரசாத் மற்றும் வசுதேவாவின் இந்த தொழில்நுட்பம் பிடித்துவிடவே இதில் இணைந்திருக்கிறார். “செய்தி தளங்களும், சமூக வலைதளங்களும் தினந்தோறும் அதிக அளவிலான தகவல்களை வழங்கி வருகின்றன. நாங்கள் இந்த தகவல்களை சேகரித்து பயனர்களுக்கு தொடர்புடையதை மட்டும் வழங்குகிறோம்” என்கிறார் ஸ்ரீநி.

இது எப்படி இயங்குகிறது?

இதற்கென ஒரு அல்காரிதம் உருவாக்கி இருக்கிறார்கள். அது செய்திகளை படித்து ஆய்வு செய்கிறது. அந்த செய்திகள் பிறகு பல்வேறு தலைப்புகளுக்கு கீழ் இணைகிறது. பயனர்களுக்கு இதை நியூஸ் ஃபீட்(News feed) போல காட்சிப்படுத்தப்படுகிறது. பயனர்கள் தினந்தோறும் எதை அதிகமாக பார்வையிடுகிறார்களோ அந்தந்த ஊர்களுக்கு ஏற்றவாறு அந்த குறிப்பிட்டத் துறை சார்ந்த செய்திக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து காட்சிப்படுத்தும்.

ஒருவர் தனக்கு பிடித்தமான வடிவத்தில் செய்தியை படிக்கும் வாய்ப்பையும் இது வழங்குகிறது. செய்தியை சிறியதாகவோ, பெரியதாகவோ, வெறும் தலைப்பு செய்தியாகவோ கூட படிக்கலாம். இது செய்தியின் ஆழமான தகவல்களையும், போட்டோ மற்றும் வீடியோ வடிவத்தையும் கூட தருகிறது. பல்வேறு தலைப்புகளில் சமகால செய்திகளை படித்துக்கொள்ளலாம்.

சவால்கள்

ஸ்ரீநி சந்தித்த மிகப்பெரிய சவாலே, பயனர்கள் சிறப்பாக பயன்படுத்தக்கூடிய அளவிற்கு இந்த மென்பொருளை வடிவமைப்பதே. “சமகால செய்திகளை உடனுக்குடன் சேகரித்து அதை வரிசைப்படுத்தி வழங்குவது தான் சவாலாக இருந்தது. காரணம் தகவல்களின் அளவு பெரியதாக இருக்கும்போது மூளையை கசக்கி பிழிந்து வேலை பார்க்க வேண்டி இருந்தது” என்கிறார்.

பல்வேறு கட்ட ஆராய்ச்சிக்கு பிறகும் சோதனைக்கு பிறகுமே இந்த தொழில்நுட்பத்தை வெளியிட்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சந்தை

படிப்பதற்கு நேரமில்லாதது, உடனடி கவனம் பெறுதல் போன்றவற்றின் காரணமாக சிறிய வடிவ செய்திகளுக்கான சந்தை மிகப்பெரியதாக வளர்ந்துவருகிறது. சிர்கா மற்றும் ஜைட் (Zite) ஆகிய நிறுவனங்கள் உலக அளவில் பிரசித்தி பெற்றவை. இந்த ஆண்டின் துவக்கத்தில் சிர்கா நிறுவனம் 5.7 மில்லியன் டாலர்களை நிதியாகத் திரட்டியிருக்கிறது. இன்ஷார்ட்ஸ் மற்றும் வே2நியூஸ் ஆகியவை இந்தியாவில் பிரபலமாக இருக்கும் நிறுவனங்கள். இன்ஷார்ட்ஸ் நிறுவனத்திற்கு டைகர் க்ளோபல் நிறுவனம் நிதியளித்திருக்கிறது.

வியூஸ் நிறுவனமும் பணம் திரட்ட திட்டமிட்டிருக்கிறது. ஆனால் அதற்குமுன் தங்கள் தொழில்நுட்பத்தை சிறிதளவு மேம்படுத்த திட்டமிட்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் விளம்பரம் சார்ந்த வருவாய் ஈட்டும் திட்டத்திலும் இருக்கிறது.

இணையதள முகவரி: Veooz

ஆங்கிலத்தில் : SINDHU KASHYAP | தமிழில் : Swara Vaithee

Add to
Shares
10
Comments
Share This
Add to
Shares
10
Comments
Share
Report an issue
Authors

Related Tags