பதிப்புகளில்

பிரிட்டனை பின்னுக்குத் தள்ளி உலகின் அதிக பொருளாதார நாடுகள் பட்டியலில் இந்தியா ஆறாவது இடத்தை பிடித்தது!

YS TEAM TAMIL
26th Dec 2016
Add to
Shares
1
Comments
Share This
Add to
Shares
1
Comments
Share

இந்தியா தன்னை ஆண்ட ஆங்கிலேய நாடான யுனைடெட் கிங்க்டத்தை பின்னுக்கு தள்ளி, உலகத்தில் அதிக பொருளாதார நாடுகள் பட்டியலில் ஆறாவது இடத்தை பிடித்துள்ளது. சுமார் 100 ஆண்டுகளில், முதன்முறையாக இந்தியா இந்த இடத்தை பிடித்து வரலாறை படைத்துள்ளது. அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் முதல் ஐந்து இடங்களில் உள்ளது. இந்தியாவின் அதிவேக பொருளாதார வளர்ச்சியின் காரணமாகவும், பிரிட்டனின் ப்ரெக்சிட் முடிவின் காரணமாகவும் இந்தியா இந்த இடத்தை பிடித்திருக்கிறது.

image


கடந்த வாரம் இந்திய உள்துறை மத்திய அமைச்சர் கிரென் ரிஜ்ஜிஜு, ட்விட்டரில், பவுண்டின் மதிப்பு கடந்த ஆண்டில் சுமார் 20 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளதாக தெரிவித்தார்.

பிப்ரவரி மாதத்தில் இந்தியா, சீனாவை வீழ்த்தி, உலகின் அதிவேக பொருளாதார வளர்ச்சி பட்டியலில் முன்னுக்கு சென்றது. சர்வதேச மானிட்டரி பண்ட், இந்தியாவின் ஜிடிபி 7.6 சதவீதம் அளவிற்கு 2017 இல் அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளது. ஃபாரின் பாலிசி அறிக்கையின் படி, கிரென் ரிஜ்ஜூ,

“இந்தியாவின் மக்கள்தொகை அதிகமாக இருக்கலாம், ஆனாலும் இது ஒரு மிகப்பெரிய வளர்ச்சி,” என்றார்.

அந்த அறிக்கையில், யூகே’வின் பொருளாதார வளர்ச்சி 1.8 சதவீதமாக 2016 இல் இருந்தது என்றும் 2017 இல் 1.1 சதவீதம் வீழ்ச்சியை சந்திக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் ப்ரெக்சிட்டில் இருந்து பிரிட்டன் வெளியேறியதில் இருந்து அதன் பொருளாதாரம் மற்றும் பணத்தின் மதிப்பு சரிவை கண்டுவருகிறது. அதேசமயம், இந்திய பொருளாதாரத்தில் நிலையான வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. உலக சந்தையில் பொருட்களின் விலை குறைப்பாலும், மழைப்பொழிவு தேவையான அளவு இருந்ததாலும், அரசின் பல புதிய திட்டங்களாலும் இந்திய பொருளாதாரம் உயர்ந்துள்ளது. 

ஃபோர்ப்ஸ் அறிக்கையின் படி, இந்தியா 1947 இல் சுதந்திரம் பெறும் வரை யூகேவின் வளர்ச்சி இந்தியாவைவிட அதிகமாகவே இருந்தது. அதன் பின்னர், இந்தியா மற்றும் யூகே இரண்டு நாடுகளும் ஒரே சீராக பொருளாதார வளர்ச்சியை கண்டது. 1991 இல் வந்த புதிய பொருளாதார கொள்கையின் காரணமாக சந்தையில் பெருத்த மாற்றங்கள் ஏற்பட்டு, அது இன்று வரை தொடர்கிறது. தற்போதுள்ள நிலையில், இந்தியா நல்ல ஒரு முன்னேற்றத்தை கண்டு, பொருளாதார வளர்ச்சியில் யூகேவை வீழ்த்தி அதை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

இருப்பினும் இந்த நிலையை தக்கவைக்க இந்தியா எந்தளவு முயற்சிக்கப்போகிறது, குறிப்பாக பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் காரணமாக எவ்வித மாற்றங்கள் நிகழப்போகிறது என்று பொருத்து இருந்து பார்க்கவேண்டும் என்று பொருளாதார வல்லுனர்கள் கூறியுள்ளனர். 

கட்டுரை: Think Change India

Add to
Shares
1
Comments
Share This
Add to
Shares
1
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக