பதிப்புகளில்

மொபைல் போன் தொடக்க நிறுவனங்களுக்கு கூகிள் அறிவித்துள்ள 'Launchpad Accelerator' திட்டம்!

17th Dec 2015
Add to
Shares
0
Comments
Share This
Add to
Shares
0
Comments
Share

தொழில்முனை நிறுவனங்கள் மற்றும் டெவலப்பர்களுக்கு உதவும் வகையில் கூகிள் நிறுவனம் ஆறுமாத பயிற்சி ஆதரவை வழங்கப்போவதாக அறிவித்திருக்கிறது. இது இந்தியா, பிரேசில் மற்றும் இந்தோனேசிய நாடுகளுக்கு பொருந்தும். உயர்தர செயலிகளை உருவாக்கவும் தொழிலில் வெற்றியடையவும் இது உதவும் என தெரிவித்துள்ளது. இதற்கு 'லான்ச்பேட் ஆச்சிலேடர்' (Launchpad Accelerator) என பெயரிட்டுள்ளது.

இதன்மூலம் டெவலப்பர்கள் கூகிள் பணியாளர்களோடும், உலகத்தரத்திலான வாழிகாட்டிகளோடும் ஒரு தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள முடியும். பங்கு இலவச நிதியாக 50,000 டாலர் வரை ஒரு தொடக்க நிறுவனம் (startups) பெற முடியும். இது ஒருநிறுவனம் தன்னை ஸ்திரப்படுத்திக்கொள்ள உதவும்.

image


கூகிள் இணையத்தின் முடிசூடா மன்னனாக திகழும் ஒரு நிறுவனம் ஆகும். உலகச் சந்தையை பொறுத்தவரை இணையத்தின் 70.69 சதவீதத்தை தன் கைக்குள் வைத்திருக்கிறது (நெட்மார்கெட்ஷேர் ஆய்வுப்படி) அடுத்ததாக பிங் நிறுவனம் 12.14 சதவீத பங்கை வைத்திருக்கிறது. வளர்ந்த நாடுகள் மற்றும் வளர்ச்சியடைந்த நாடுகளில் ஸ்மார்ட்போன்கள் மற்றும் அதற்கான செயலிகள் மிக வேகமாக வளர்ந்துவருவதால் மொபைல் மார்க்கெட்டையும் கைப்பற்றும் எண்ணத்தோடு செயலாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

ஆண்ட்ராய்டை தன் கைவசம் வைத்திருந்தாலும், விளம்பரங்களை காட்சிப்படுத்தி அதன்மூலம் பணம் பண்ணுவது மொபைலை பொறுத்தவரை வேலைக்கு ஆகவில்லை. எனவே நவம்பர் மாதம், கடந்த இரண்டு ஆண்டுகளாக 100 ஆழமான லிங்குகள் உதவியுடன் மொபைல் தேடலை எளிமைப்படுத்தி இருப்பதாக அறிவித்தது. இதன்மூலம் பயனர்கள் கைப்பேசிக்கான செயலிகளை பதிவிறக்காமலேயே அதை பயன்படுத்த முடியும் என்றும் தெரிவித்துள்ளது.

'லான்ச்பேட்' என்ற இந்த திட்டத்தின் மூலம் கூகிள் தனது வளங்கள், தொழில்நுட்பம் மற்றும் நிபுணத்துவம் போன்றவற்றை தொடக்க நிறுவனம் மற்றும் டெவலப்பர்களுக்கு திறந்துவிட்டிருக்கிறது. இது செயலியை டிசைன் செய்து டெவலப் செய்து சந்தையில் வெளியிடவும் உதவும். இந்த லான்ச்பேட் என்ற திட்டம் ஏற்கனவே 30 நாடுகளில் நிகழ்ச்சிகளை நடத்திக்கொண்டிருக்கிறது. இதன்மூலம் 8000 புதிய நிறுவனங்கள் பயனடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்படி உதவுவதோடு மட்டுமல்லாமல் கூகிள் லான்ச்பேடை விரிவாக்கி லான்ச்பேட் ஆச்சிலேட்டரையும் இதில் இணைத்துக்கொண்டிருக்கிறது.

இப்போது இந்த 3 நாடுகளை இதற்காக தேர்ந்தெடுத்திருப்பதற்கு சில காரணங்கள் சொல்லப்படுகின்றன. இந்தோனேசியா மொபைல் பயன்பாட்டில் முதலிடத்தில் உள்ள நாடு. உலகின் நான்காவது பெரிய நாடு. 255 மில்லியன் மக்கள் இருக்கிறார்கள். பிரேசிலில் 200 மில்லியன் மக்கள் இருக்கிறார்கள். இந்நாட்டில் இணைய பயன்பாடு தொடர்ச்சியாக அதிகரித்துக்கொண்டு இருக்கிறது, இணையம் சார்ந்த பல்வேறு சவால்களை சந்தித்துக்கொண்டிருக்கிறது.

"இந்தியாவில் 600 மில்லியன் பயனர்கள் மொபைலை பயன்படுத்துகிறார்கள். இந்த எண்ணிக்கை வேகமாக அதிகரித்துக்கொண்டு இருக்கிறது. நீங்கள் இந்தியா சார்ந்து செயலி உருவாக்கி கொண்டிருந்தால் இந்தியாவின் 'க்ரேடஸ்ட் சேலஞ்சஸ்' நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கூகிளோடு இணைந்து பணியாற்றலாம். பெங்களூரில் 6 மாதங்கள் இந்த செயலி உருவாக்கத்திற்காக இணைந்து பணியாற்றலாம்”.

லான்ச்பேடின் முதல் நிகழ்ச்சி ஜனவரி 18ம் தேதி கலிஃபோர்னியாவில் உள்ள மவுண்டென் வியூவில் நடைபெறுகிறது. அங்கே 20 முன்கூட்டியே தேர்ந்தெடுக்கப்பட்ட புதுநிறுவனங்கள் இரண்டு வாரங்கள் கலந்துகொள்வார்கள். இப்போதிருக்கும் பட்டியலில் 8 இந்திய தொடக்க நிறுவனங்கள் இடம்பெற்றிருக்கின்றன. அதன்பிறகு ஒவ்வொரு நிறுவனமும் அவரவர் நாட்டுகளுக்கு அனுப்பப்படுவார்கள். அங்கே அவர்களின் பணிகளுக்கு கூகிள் வழிகாட்டி, இணையவழியாகவும் உள்ளூர் அளவிலும் தொடர்ச்சியாக உதவிகள் வழங்கப்படும்.

அதுமட்டுமல்லாமல் தொடக்க நிறுவனங்களுக்கு கூகிளின் சில சேவைகளின் பயன்பாடு இலவசமாக வழங்கப்படும், கூகிளின் அலுவலகத்திற்கே சென்று இலவசமாக பணியாற்றலாம். வரும் மாதங்களில் கூகிள் இன்னும் சில நாடுகளுக்கு இதை விரிவாக்கத் திட்டமிட்டிருப்பதாக தெரிவித்திருக்கிறது.

2016ம் ஆண்டு இடைப்பட்ட மாதங்களில் இந்த நிகழ்ச்சியின் இரண்டாம் கட்டத் தேர்வு நடக்கவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

விண்ணப்பிக்க : https://developers.google.com/startups/accelerator/

ஆங்கிலத்தில் : HARSHITH MALLYA | தமிழில் : Swara Vaithee

Add to
Shares
0
Comments
Share This
Add to
Shares
0
Comments
Share
Report an issue
Authors

Related Tags