பதிப்புகளில்

மார்ச் 27 ஆம் தேதி மதுரையில் பெண்களுக்கான ஹேக்கத்தான் போட்டி!

YS TEAM TAMIL
24th Mar 2016
Add to
Shares
0
Comments
Share This
Add to
Shares
0
Comments
Share

தொழில்நுட்பத்தில் ஆர்வம் கொண்ட பெண்களை மதுரை மாநகரம் அழைக்கிறது. மண் மனம் கமழும் இந்த நகரில், வரும் 27 ஆம் தேதி சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கான ஒரு நாள் ஹேக்கத்தான் போட்டி நடைபெறுகிறது. தொழில்நுட்பத் திறன் படைத்த பெண்கள் புதிய சேவை மற்றும் தீர்வுகளை உருவாக்கிக் காட்சிப்படுத்துவதற்கான மேடையாக இந்த நிகழ்ச்சி அமையும்.

தொழில்நுட்ப உலகில் பெண்களின் பிரதிநித்துவம் அதிகரிக்க வேண்டும் எனும் கருத்து தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது. பல்வேறு அமைப்புகள் தொழில்நுட்ப ஆர்வம் கொண்ட பெண்களை ஊக்குவிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில், கூகுல் நிறுவனம் ஆதரவிலான 'விமன் டெக்மேக்கர்ஸ்' (Women Techmakers) அமைப்பு பெண் தொழில்நுட்ப வல்லுனர்களுக்கான பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.

விமன் டெக்மேக்கர்ஸ் அமைப்பு ஆண்டுதோறும் சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு உலகம் தழுவிய அளவில் ஹேக்கத்தான் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது, இந்த வரிசையில் வரும் 27 ம் தேதி தமிழகத்தின் மதுரையில் பெண்களுக்கான ஹேக்கத்தான் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

image


மதுரை மாநகர அலுவலகம் அருகே அமைந்துள்ள மடிஸ்ட்டா அரங்கில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. காலை 9.30 மணி முதல் மாலை 6 மணி வரை இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது. காலையில் தலைமை விருந்தினர் உரைக்குப்பிறகு ஹேக்கதான் போட்டி நடைபெறும். தொழில்நுட்ப விவாதம், சேவைக்கான காட்சி விளக்கம் ஆகியவையும் இடம்பெற உள்ளன.

கம்ப்யூட்டர் நிரல் எழுதுவதில் ஆர்வம் உள்ள பெண்கள் இதில் பங்கேற்று தாங்கள் விரும்பும் தொழில்நுட்பச் சேவை அல்லது தீர்வுகளை உருவாக்கி சமர்பிக்கலாம். இவற்றில் சிறந்த தீர்வு தேர்வு செய்யப்பட்டு பரிசளிக்கப்படும்.

தொழில்நுட்பத்தில் பெண்கள் எனும் கருப்பொருளில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் பங்கேற்க விரும்புகிறவர்களுக்கு அனுமதி இலவசம் ஆனால் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் யுவர்ஸ்டோரி இந்த நிகழ்வின் மீடியா பார்ட்னராக உள்ளது

நிகழ்ச்சியில் முன்பதிவு செய்து கொள்ள

இடம்: Madurai Corporation-Maditssia Auditorium, Near Madurai Corporation Office, Mattuthavani, Dr. Ambedkar Salai, Madurai, Tamil Nadu 625020

Add to
Shares
0
Comments
Share This
Add to
Shares
0
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக